Monday, January 18, 2010

Shirdi Sai Baba Paduka in Harda-Madhya Pradhesh.

மத்ய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில்

சீரடி சாயி பாபாவின் பாதுகைகள்

அன்பானவர்களே
பாபாவின் பாதுகைகள் அனைத்து துயரங்களையும் தீர்க்கும் என்கின்றார்களே . அப்படி என்றால் அவருடைய பாதுகைகள் எங்கே உள்ளன?
பாபாவின் பாதுகை மத்ய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் பருல்கர் என்ற ஒரு மராத்திய குடும்பத்தினரிடம் உள்ளது என்றால் நீங்கள் வியப்பு அடைவீர்கள். அந்த பாதுகைகளை பாபாவே ஸ்ரீ க்ரிஷ்ணாஜி நாராயண் பருல்கர் என்பவரிடம் தந்து உள்ளார். அந்த பாதுகைகளை பருல்கர் குடும்பத்தினரின் மூன்றாம் வம்சாவளியினர் பாதுகாத்து வருகின்றார்கள்.1915 ஆம் ஆண்டில் பாபாவே அந்த குடும்பத் தலைவரான ஸ்ரீ க்ரிஷ்ணாஜி நாராயண் பருல்கரிடம் தந்து உள்ளார். அவர் பாபாவின் பக்தர். பாபா அவரை வாஞ்சையாக சொட்டு பாவ என அழைப்பாராம் .
அந்த காலத்தில் வாகன வசதிகள் இல்லாத நேரம். பாபாவைப் பார்த்து அவருடைய ஆசிகளைப் பெற ஸ்ரீ க்ரிஷ்ணாஜி நாராயண் பருல்கர் மாட்டு வண்டியில் சீரடிக்கு பல நாட்கள் பயணம் செய்து , மீதி தூரத்தை நடந்தே கடந்து பாபாவை சந்திக்கச் செல்வார். அப்போது ஒருமுறை பாபா அவரிடம் என்னைக் காண இத்தனை சிரமப் பட்டு நீ ஏன் வருகின்றாய் எனக் கேட்டாராம் . அதற்க்கு அவர் பதிலாக ' என்ன செய்வது பாபா, என்னிடம் உங்களுடைய நினைவாக வைத்திருந்து வணங்க ஒன்றும் இல்லை என்பதினால்தான் நீரடியாய உங்களைக் காண வந்தேன்'
உடனே பாபா தான் போட்டிருந்த பாதுகைகளை அவரிடம் கயற்றிக் கொடுத்துவிட்டு, ''இனி நீ எத்தனை சிரமப்பட்டு இங்கு வரவேண்டாம். நான் இந்த பாதுகையில் இருந்தவாறு உன்னுடன் ஹர்டாவுக்கு வருகின்றேன்'' என்று கூறிக் கொடுத்தாராம்.

அந்த பாதுகையை பூனாவில் இருந்த பக்தர் ஒருவர் பாபா லேந்தி பாகிர்க்கு செல்ல சௌரியமாக இருக்கும் என்று எண்ணி வாங்கிக் கொடுத்ததாம்.
அதையே என்றும் பருல்கரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வைத்து வணங்கி வருகின்றார்கள். வியாழக் கிழமைகளில் பல பக்தர்கள் அவர்கள் வீடிற்கு வந்து அதற்க்கு ஆராத்தி எடுத்து விட்டுச் செல்கின்றனராம்.
மனிஷா

பாபா தந்துள்ள பாதுகை மற்றும் பாதுகையை
பூஜிக்கும் பருல்கர் குடும்பத்தினர்






Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.