Monday, November 8, 2010

Baba blessed my Son-Experience by Sai Devotee.

ஒரு பக்தரின் அனுபவம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtGWlV_BK6ISwioyC0yNDF7wgy6YS_NGJ_1u_jdyiALllujI6SYEF4WUBrZKvP23zQS_-QQGlmoOtpOEYO3gnaZBS7EhDVsz5lBjADbaJTHL2bedsB0VkNLHP96n2rMEDRH0r_fWaib2Y/s1600/sai+sansthan.jpg

அன்பானவர்களே
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு சகோதரி கண் பார்வை மறைந்த தன்னுடைய மகனின் கண் மீண்டும் நல்லபடியாக பாபா எப்படி அருள் புரிந்தார் என்பதை எழுதி உள்ளார். அதை நீங்கள் படித்து இருக்கலாம். அதே சம்பவத்தில் மேலும் நிகழ்ந்த அற்புதத்தை இன்று எழுதி உள்ளேன். அந்த முதல் கட்டுரையை படிக்க முடியாமல் போன சாயி பக்தர்கள் அதை மீண்டும் படிக்க -சாயியுடன் அனுபவம்-1 என்பதின் மீது கிளிக் செய்யவும்.
மனிஷா
அந்த சகோதரி எழுதியது:-
சகோதரி மனிஷா,
முன்னர் நான் எழுதிய சாயியுடன் அனுபவம்-1 என்ற கட்டுரையின் தொடர்ச்சியான இதையும் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
நாங்கள் அந்த சிறுவனின் கண்ணின் மீது இன்னமும் சிப்பூரில் இருந்து கொண்டு வந்த வீபுதியை தடவி, அபிஷேக தீர்த்தத்தையும் தந்து கொண்டு இருக்கின்றோம். 09 .09 அன்று நாங்கள் மீண்டும் மருத்துவரிடம் அவனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றோம். ஆனால் அந்த மருத்துவரோ அவனுக்கு கிளைகோமா என்ற வியாதி இல்லை எனக் கூறிவிட்டார். ஒரு வேளை அவன் கண்கள் என்னுடைய கண்களைப் போல மிகப் பெரியதாக இருந்ததினால் முதலில் அந்த வியாதி இருக்குமோ என சந்தேகப்பட்டவர், அவனை சோதித்தப் பின் தற்போது அவனுக்கு அந்த வயது சிறுவர்களுக்கு இருக்க கூடிய பார்வையை விட அதிக தெளிவான பார்வை உள்ளதாகக் கூறினார். அதற்காக பாபாவுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். உடனே நான் அமித்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச ,அவரும் என்னுடைய பதினைந்து மாத மகன் நன்கு இருப்பான் கவலைப்பட வேண்டாம் என்றார். என்னுடைய தாயாரும் அமித்ஜியும் பாபாவின் மீது என்னை விட அதிக பக்தி கொண்டவர்கள்.
பாபா, என்னுடைய மகனுக்கு அருள் புரிந்த உமக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.