Baba speaks on State Of Being Bound
பாபா தொடர்ந்து கூறலானார்,' ஒரு பெண்ணுக்கு கணவனே தெய்வம். அவள் அப்படிப்பட்ட தர்மத்தைதான் கடை பிடிக்க வேண்டும். அவனுக்கு தூய்மையான வழியில் சேவை செய்து கொண்டு வாழ வேண்டும். அதுவே பேரானந்தம் தரும். எந்த ஒருவள் தனது கணவனுக்கு அனுகூலமாக இருக்கிறாளோ அவளே வீட்டின் தெய்வம். கணவன் கோபப்பட்டாலும் அவள் பொறுமைக் காக்கவேண்டும். எந்த ஒருவள் தனது கணவனை உதாசீனப் படுத்துகின்றாளோ அவள் பேசுவதற்குக் கூட தகுதி அற்றவள். ஒரு பெண் அமைதியாக அடக்கமாக இருக்க வேண்டும். வேறு ஆண்களுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது, ஏன் தன்னுடைய சகோதரனுடன் கூட அதிகம் தனிமையில் இருக்கக் கூடாது.
ஒரு வேங்கை தேடும் ஆடு போன்ற நிலையில் உள்ளவள் ஒரு பெண். எந்த ஒரு பெண்ணும் அடக்கத்துடன் இருக்க வேண்டும். தனது கணவனுக்கு தொண்டு செய்தபடியும் , குழந்தைகளுக்கு நல ஒழுக்கம் தந்தபடியும், மனதில் கடவுள் பக்தியும் கொண்டு , மனதில் இருந்து தீய எண்ணங்களை ஒதுக்கி வைத்தவாறு வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். அதுவே வேங்கையிடம் இருந்து தனது ஆட்டைக் காப்பாற்ற ஒருவன் போடும் வேலி போன்றது.
அவள் ஆன்மீக புத்தகங்களைப் படித்துக் கொண்டும், ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டுக் கொண்டும், அதை கூடிய வரை தன வாழ்வில் கடை பிடித்துக் கொண்டும் இருந்தால் அவள் மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் தானாகவே அழிந்து விடும். இவை எல்லாம் பெண்களுக்கு மட்டும் அல்ல, அதைப் போன்றே ஆண்களும் கடை பிடித்து தமது வாழ்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே புத்தரைப் போன்ற மன நிலையிலான வாழ்க்கையில்இருப்பது என்பது.
பாபா தொடர்ந்தார் ' இவற்றை கூர்மையாகக் கேட்டுக் கொள்... எவர் ஒருவருக்கு கடவுள் பக்தி இல்லையோ, நல்ல எண்ணங்கள் இல்லையோ, தீமைகளை ஒதுக்கி வாழும் மன நிலை இல்லையோ அவர்கள் மீண்டும் மீண்டும் மறு பிறவி எடுக்கும் நிலைக்கு செல்கின்றார்கள். தீயவற்றை கூறுபவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள், உலக சுகத்திலேயே மூழ்கி இருப்பவர்கள் , தானம் செய்யாதவர்கள் என உள்ள அனைவரும் பாபம் செய்தவர்கள்.
தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவர்கள், வாங்கிய கடனைத் திருப்பாதவர்கள், தூயவர்களை களங்கம் படுத்துபவர்கள், குருவை ஏமாற்றுபவர்கள், துரோகம் செய்பவர்கள், வேதங்களை படிக்காதவர்கள் என உள்ள அனைவருமே கர்ம வினை பெற்று மறு பிறப்பு எடுக்க வேண்டிஉள்ளது. அது போல நல்லதையே செய்து கொண்டும், கடவுள் பக்தி மிகுந்தவனாக இருந்து கொண்டும் இருந்தாலும், ஆனால் நல்ல எண்ணங்கள் மனதில் இல்லாதவனாக இருந்தால் அவனுக்கும் முக்தி கிடைக்காது. அவர்கள் நரகத்தையேஅடைவார்கள்.
............பாகம் -6........தொடரும்
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment