Lord Sai and Lord Kartikeya are same-Experience by Archana
கார்த்திகேயர் என்ற முருகனும் சாயிபாபாவும் ஒருவரே
அன்பானவர்களே,
அனைவருக்கும் சாயிராம். நம்முடைய வாழ்கையில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரிவது இல்லை. அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படுகின்றது. சில சமயங்களில் நமக்கு கடவுளே நேரில் வந்து சொனால்தான் நம்புவோமா என்ற அளவு குழப்பம் ஏற்படுகின்றது. இன்று வெளியாகி உள்ள அர்ச்சனாவின் அனுபவமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். பாபாவின் அற்புதமான லீலையை இனி படியுங்கள்.
மனிஷா
அர்ச்சனாவின் அனுபவம்
அன்புள்ள மனிஷா
இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முற்பட்டது. என்னுடைய ஒரு மாமன் காலில் தோன்றிய தோல் வியாதியினால் அவதிப்பட்டு சென்னையில் ஒரு மருத்துவ மனையின் ICU வில் சேர்க்க வேண்டி இருந்தது. அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகச் சிகிச்சையான டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அதாவது ஆம் 2007 ஆண்டு ஜனவரி மாதம் நான் சீரடிக்குச் செல்ல முடிவு செய்து அவரையும் அழைத்தேன் . ஆனால் அவர் தான் ஏற்கனவே பழனிக்குச் செல்வதாக முடிவு செய்து விட்டதினால் அங்கிருந்து வந்தப் பின் சீரடிக்கு செல்வதாகக் கூறிவிட்டார். ஆகவே நான் சீரடிக்கும் அவர் பழனிக்கும் சென்றுவிட்டு வந்தோம். அதன் பின்னரே அவர் மருத்துவ மனையில் அட்மிட் ஆன நிகழ்ச்சி நடந்தது.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அதாவது ஆம் 2007 ஆண்டு ஜனவரி மாதம் நான் சீரடிக்குச் செல்ல முடிவு செய்து அவரையும் அழைத்தேன் . ஆனால் அவர் தான் ஏற்கனவே பழனிக்குச் செல்வதாக முடிவு செய்து விட்டதினால் அங்கிருந்து வந்தப் பின் சீரடிக்கு செல்வதாகக் கூறிவிட்டார். ஆகவே நான் சீரடிக்கும் அவர் பழனிக்கும் சென்றுவிட்டு வந்தோம். அதன் பின்னரே அவர் மருத்துவ மனையில் அட்மிட் ஆன நிகழ்ச்சி நடந்தது.
முதலில் மருத்துவர்கள் அவர் விரைவில் பூரண குணம் ஆகிவிடுவார் எனக் கூறினாலும் ஒரு வாரத்தில் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நானும் என்னுடைய மற்ற சகோதரர்களும் கவலை அடைந்தோம். ஏன் என்றால் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த பாசம் உண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் சென்று தங்கி மிகவும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து உள்ளோம்.
அவர் எங்களுடன் சீரடிக்கு வந்து இருந்தால் இந்த வியாதி வந்து இருக்காதோ என எங்களை அறியாமல் நாங்கள் நினைத்துக் கொண்டோம். மாமாவோ மிகத் தீவிர முருக பக்தர். ஆகவே என்னுடைய தாயார் என்னை முருகனிடம் மாமாவின் உடல் நலமடைய வேண்டும் என வேண்டிக் கொள்ளுமாறுக் கூறினார். ஆனால் நானோ பாபாவையே வேண்டிக் கொண்டேன் என்றாலும் என்னுடைய தாயாரின் வற்புறுத்தலினால் நன் கார்த்திகேயரையும் வேண்டிக் கொண்டேன்.
மாமாவின் உடல் நலமடைய வேண்டும் என்ற இந்த வேண்டுதல் தினமும் தொடந்தது. ஒரு நாள் நான் ஒரு ஆட்டோவில் ஏறினேன். அதில் ஒரு பக்கம் பாபாவின் படமும் இன்னொரு பக்கத்தில் கார்திகேயரின் படமும் ஒட்டப்பட்டு இருந்தது. ஆகவே அங்கும் நான் அவர்களிடம் தனித்தனியாகவே மாமாவின் உடல் நலமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டேன். மனத்துக்கும் எனக்கு அமைதியாக இருந்தது.
ஒரு வாரம் கடந்தது. மாமாவின் உடல் நிலை இன்னும் மோசமாயிற்று. அன்று திங்கள் கிழமை. நான் அலுவலகத்தில் இருந்து நேராக சாயியின் ஆலயத்துக்குச் சென்றேன். அங்கு சென்று அமர்ந்து கொண்டு நான் கொண்டு போய் இருந்த சாயி சரித்திர புத்தகத்தைப் பிரித்தேன். பிரித்தவுடன் அதில் பாகம் 31 வெளிவந்தது. அதில் இப்படி எழுதி இருந்தது
''தாயா சாஹிப் நூலகர்:-
தத்யா சாஹெப் நூலகர் பற்றி ஹெமன்த்பந்த் எந்த விவரத்தையும் தரவில்லை. அவரைப் பற்றி சாயி லீலையில் வந்திருந்த செய்தியையே தந்து இருந்தார். 1909 ஆம் ஆண்டு பண்டார்பூரில் தத்யா சாஹெப் ஒரு நீதிபதியாக இருந்தார். அப்போது நானா சாஹேப் சந்டோர்கர் ஒரு மாமாலட்தாராக இருந்தார். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது உண்டு. தத்யா சாஹெப் சாது சன்யாசிகளை நம்பியது இல்லை, ஆனால் நானா சாஹேப் அவர்களை மிகவும் நேசிப்பவர் . ஆகவே அவர் அடிக்கடி தத்யா சாஹேப்பிடம் பாபாவின் லீலைகளைப் பற்றிக் கூறி ஒரு முறையாவது சீரடிக்கு போய்விட்டு வருமாறு கூறி வந்தார். ஒரு முறை சீரடிக்குச் செல்ல தத்யா உடன்பட்டாலும் , இரண்டு நிபந்தனைகளைப் போட்டார். முதலாவது அவருடன் செல்ல ஒரு பிராமண சமையல்காரர் வேண்டும். இரண்டாவது பாபாவுக்குத் தர நாக்பூர் ஆரஞ்சுப் பழம் வேண்டும். அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட அவரும் பாபாவை சென்று தரிசித்தார் . முதலில் பாபா அவரிடம் கோபப்பட்டாலும் மெல்ல மெல்ல தத்யாவுக்கு பாபாவே கடவுள் என்ற உண்மை புரிய ஆரம்பித்தது. அதன்பின் தான் மரணம் அடையும்வரை அவர் அங்கேயே தங்கினார். அவர் மரணம் அடைந்தபோது பாபா கூறினார், 'இனி தத்யாவுக்கு மறு பிறப்பு இல்லை.......''
என் கண்களில் நீர் வழிந்தது. ஏன் புத்தகத்தின் இந்தப் பகுதி இன்று எனக்கு வந்தது? அதற்கும் என் மாமாவுக்கும் சம்மந்தம் இருக்காது, அது தற்செயலாக வெளி வந்தப் பக்கமே என மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அதைப் பற்றி நான் வீட்டில் எவரிடமும் கூறவில்லை.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அடுத்த 36 மணி நேரத்தில், புதன்கிழமை என் மாமா காலமாகிவிட்டார். என்னால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் அவர் மரணம் பற்றி எனக்கு பாபா முதலிலேயே குறிப்புக் காட்டிவிட்டார்.
வீட்டில் அனைவரும் உடனே சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்றார்கள். ஆனால் நான் வாரக் கடைசியில் செல்ல முடிவு செய்தேன். முதல் இரண்டு மூன்று நாட்கள் உறவினர்கள் வந்து விட்டுச் சென்று விடுவார்கள். வாரக் கடைசியில் சென்றால் மாமியுடன் இருந்து ஆறுதல் கொடுக்க முடியும் என்றே நினைத்தேன்.
அன்று மாலை பாபாவின் ஆலயத்தில் இருந்த தியான ஆலயத்துக்குச் சென்று அங்கு அமர்ந்து கொண்டு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து கீழே இருந்த ஆலயத்தில் பாபாவை நோக்கினேன். அவர் வெள்ளை உடையில் காட்சி தந்தார். தலையில் கிரீடம் இல்லை. நான் அடிக்கடி அந்த ஆலயத்துக்கு செல்பவள். அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக வியாழன் கிழமையைத் தவிர வேறு நாட்களில் அவர் கிரீடத்தை எடுக்க மாட்டார்கள். வெள்ளை உடையையும் போட்டு இருக்க மாட்டார்கள். இன்று ஏன் அவரை அந்த கோலத்தில் வைத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பாபாவும் என்னுடன் துக்கத்தை அனுஷ்டிக்கின்றாரோ என எண்ணினேன்.
நான் சென்னைக்கு வார இறுதியில் சென்றேன். என் மனம் மாமா எங்களுடன் சீரடிக்கு வந்திருக்கலாமோ என்றே தோன்றிக் கொண்டு இருந்தது. அதை நினைத்து நினைத்து மனதில் அமைதி இன்றி இருந்தேன். மாமியிடம் நான் பாபாவின் ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியை, சாயி சரித்திரத்தில் வெளி வந்த தத்யா சாஹிப்பின் கதை பற்றிக் கூறினேன். அது அவளுக்கு மனதில் ஆறுதலைக் கொடுத்ததாம். தன் கணவருக்கு பாபா முக்தி தந்து விட்டார் என்பதாக அதன் மூலம் தெரிவித்து உள்ளதாக மனதை தேற்றிக் கொண்டாள்.
நாங்கள் அனைவருமே மயிலாப்பூரில் இருந்த சாயி ஆலயத்துக்குச் செல்வது உண்டு. என்னுடைய மாமியும் தனது கழுத்தில் பாபாவின் படம் போட்ட மாலையை அணிந்து இருந்தாலும் அவளுக்கு பாபா பற்றிய செய்திகள் தெரியாது. நான் மாமியுடன் இருந்த போது என்னுடன் சிலர் தொலைபேசியில் பேசினார்கள் . அதில் என்னுடைய நண்பனின் நண்பியும் ஒருவள். அவளுடன் நான் பேசி வெகு நாளாயிற்று. ஆனால் அவள் பேசியபோது அதை நான் எடுக்கவில்லை. அவளுடன் பேசுவதை அன்று தவிர்த்தேன்.
ஒரு வாரம் ஆயிற்று. நான் பெங்களூருக்குச் சென்று இருந்தேன் . எதேற்சையாக அந்தப் பெண்ணை -நண்பனின் நண்பியையும் - பாபாவின் ஆலயத்தில் சந்தித்தேன். அவள் ஆந்திராவை சேர்ந்தவள். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி என்னிடம் கூறவே எனக்கு போன் செய்தாளாம். அவள் போன் செய்ததின் காரணம் அவளுக்கு ஒரு நாள் ஒரு அதிசயமான கனவு வந்ததாம். அந்தக் கனவில் கார்த்திகேயக் கடவுள் தோன்றினாராம். அந்த உருவத்தில் கார்த்திகேயரின் தலையும் பாபாவின் முகமும் ஒன்றாக இணைந்து இருந்ததாம். அதாவது கார்திகேயரும் பாபாவும் ஒருவர் போலக் காட்சி தந்திருந்தனர். அதேயே மீண்டும் மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை அழுத்தமாக எனக்குக் கூறினாள். இது என்ன? புரியவில்லை. என் மாமா மரணம் அடைந்தபோது அதை என்ன காரணத்தினாலோ எனக்குக் கூற விரும்பி இருக்கின்றாள். அவள் அதுவரை கார்திகேயரை எந்த ஆலயத்திலும் பார்த்ததும் இல்லையாம். அதனால்தான் எனக்கும் போன் செய்து உள்ளாள். ஆனால் அது முதல் அவள் கார்திகேயரையும் வணங்கத் துவங்கி உள்ளாள். நான் பொறுமை இழந்தேன் . சற்று நேரம் அதை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்த நான் திடீரென குழம்பினேன் . எதற்காக சம்மந்தமே இல்லாமல் என்னிடம் வந்து இவள் இந்த விஷயத்தைக் கூறுகிறாள்? ஒ...இதனால்தானோ....பட் என்று என் மூளையில் உதித்தது. பாபாவும் கார்த்திகேயரும் ஒன்றே என்ற உண்மையைக் கூறத்தானா அவள் மூலம் அவர் எனக்கு செய்தியைத் தந்துள்ளார்? பாபாவின் லீலைதான் என்னே!!!
நான் எதற்காக தேவை இல்லாமல் இரண்டு கடவுட்களையும் தனித் தனியாக வேண்டிக் கொண்டு இருக்க வேண்டும்? மாமா வணங்கிவந்த பழனி முருகனாக இருந்தால் என்ன, நான் வணங்கும் பாபாவாக இருந்தால் என்ன, இருவருமே ஒன்றல்லவா?
நான் எதற்காக தேவை இல்லாமல் இரண்டு கடவுட்களையும் தனித் தனியாக வேண்டிக் கொண்டு இருக்க வேண்டும்? மாமா வணங்கிவந்த பழனி முருகனாக இருந்தால் என்ன, நான் வணங்கும் பாபாவாக இருந்தால் என்ன, இருவருமே ஒன்றல்லவா?
ஜெயா மனே ஜைஸா பாவா தயா தைஸா அனுபவ
தைவிசீ தயாகானா ஐஸீ துஜ்சே ஹீ மாவ துஜ்சேஹீ மாவா
தைவிசீ தயாகானா ஐஸீ துஜ்சே ஹீ மாவ துஜ்சேஹீ மாவா
அர்த்தம்:- அவரவர்களின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு ஏற்பவே அவரவர்களுக்கு நீ சில அனுபவங்களைத் தருகிறாய். கருணைக் கடலே அதுதானே உன் வழி.
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment