Thursday, November 11, 2010

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees- Part 3.



அன்பானவர்களே
பாபா நாள் நல் வாழ்த்துக்கள்
இன்று நான் பல சாயி பக்தர்களுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
மனிஷா

அனுபவம்-1
நான் என்னுடைய அனுபவத்தை அனைவருடனும் பங்கு கொள்ள விரும்புகின்றேன் . என்னுடைய பெயர் ஸ்வேதா லஷ்மிகாந்த் . நானும் என்னுடைய கணவரும் பெங்களூரில் வேலை செய்கிறோம். என்னுடைய வேலையில் நான் அடிக்கடி வெளி இடங்களுக்குச் செல்ல வேண்டும். சாயியின் அருளினால் நான் நிறைய இடங்களுக்குச் சென்றேன். நிறைய பிராஜக்ட் கிடைக்கத் துவங்கியதினால் அனுபவமும் கூடிற்று.
நாங்கள் அனைத்து இடங்களுக்கும் விமானத்தில்தான் செல்வது பழக்கம். போன வாரம் ஹைதிராபாத்தில் இருந்து பெங்களூருக்கு ATR என்ற விமானத்தில் வந்தேன். அது மிகச் சிறிய விமானம். நான் வரும்போது ஒரே மழை ஏற்பட வானில் பரந்த விமானம் ஆடத் துவங்கியது. அவ்வளவுதான் , விமானம் விழப் போகின்றது இனி நான் என்னுடைய குடும்பத்தைப் பார்க்க முடியாது என பயந்தேன்.
என் மனதில் சாயியை துதிக்கத் துவங்கினேன். நான் தவறாக ஏதாவது பாபம் செய்து இருந்தால் மன்னித்து விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். விமானத்தின் குலுக்கல் அதிகம் ஆயிற்று. மழையும் அதிகம் ஆக நான் பயந்து கொண்டே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தேன். திடீரென ஒரு பெரிய குலுக்கல். அடுத்த நிமிடம் அனைத்தும் சாதாரணமாகிவிட்டது. வானத்தில் இருந்த சூழ்நிலை மாறியது. மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தாலும் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. நான் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன். நடந்தவற்றை என்னுடைய தாயாரிடமும் சகோதரியிடமும் கூறி எப்படி சாயி பாபாவின் மீதான நம்பிக்கை என்னைக் காப்பாற்றியது என்பதைக் கூறினேன். அவர்களும் சாயியின் பக்தர்களே. நங்கள் அனைவரும் என்னைக் காப்பற்றிய சாயி பாபாவுக்கு நன்றி கூறினோம்.

அனுபவம்-2
ஜெய் சாயி, ஓம் சாயி ஸ்ரீ சாயி

மனிஷாஜி,
நான் எழுதி அனுப்பி உள்ள இதை நீங்கள் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். எனக்கு சாயிபாபாவிடம் கிடைத்த அனுபவம் இது.

நான் உங்களுடைய இணையதளத்தில் சாயியின் ஒன்பது வார விரதத்தைப் படித்து உள்ளேன். அதை நானும் செய்ய வேண்டும் என பல நாள் நினைத்து இன்று அதை துவக்கினேன். விரதம் துவக்கியதுமே இரண்டு மகிமைகள் நடந்தன.
நான் பூஜையை துவக்கினேன். என்னிடம் சந்தனம் இல்லை என்பதினால் அபிஷேகத்தை துவக்கும் முன் பாபாவின் சிலையின் நெற்றியில் மஞ்சளினால் போட்டு வைத்தேன். ஆனால் அது தவறுதலாக அவருடைய கண்ணில் விழுந்து விட்டது. ராம நவமி அன்று அவருக்கு இட்ட குங்குமம் அவர் கண்களில் விழுந்துவிட அவர் கோபமடைந்து அதை சுத்தம் செய்து கொண்டார் என்ற கதையை சாயி சரித்திரத்தில் படித்து இருந்ததினால் பயந்து கொண்டே அதை எடுக்க முனைந்தேன். ஆனால் அவர் சிலையின் கண்களில் விழுந்த மஞ்சளை எடுக்க முடியவில்லை. ஆகவே வேறு வழி இன்றி அவர் சிலைக்கு அபிஷேகம் செய்தேன். அதனால் அதை என்னால் சுத்தம் செய்ய முடியவில்லை.
2008 ஆம் ஆண்டு பெங்களுர் மற்றும் ஹைதிராபாத்தில் திடீரென பாபாவின் இடது கண் திறந்தது என்ற மகிமையை போல அவர் கண்களில் விழுந்த அந்த மஞ்சளினால் இன்று என் வீட்டில் இருந்த பாபாவின் சிலையில் இருந்தக் கண் திறந்து விட்டது போல அவர் கண்கள் பளீரென பிரகாசித்தது. என் வீட்டிலும் பாபா விரதத்தின் முதல் நாளன்றே தன்னுடைய மகிமையை காட்டி விட்டார் என்று மகிழ்ந்தேன்.
நான் சாயி சரித்திரத்தை படித்துவிட்டு விரதத்தை செய்து முடித்தேன். பிரசாதமும் படைத்தேன். இரவு தூங்கப் போகும் முன் கதவை சாத்தப் போனேன். ஆனால் பால்கனிக் கதவையாவது சிறிது திறந்து வைத்தால் பாபா உள்ளே வர சௌகரியமாக இருக்குமே என மனதில் தோன்றியது. அப்போது கதவை திறக்க செல்ல வாயில் கதவில் எவரோ மணி அடித்தனர்.
கதவைத் திறந்தேன். அடுத்த வீட்டுப் பெண்மணியும் அவளது பெண்ணும் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களுக்கு நான் பிரசாதம் கொடுத்தேன். ஆனால் அவர்களுக்கு பாபாவைப் பற்றியோ அல்லது நான் செய்த விரதத்தைப் பற்றியோ எதுவுமே தெரியாது. அவர்கள் தானாகவே வந்து பிரசாதத்தை பெற்றுக் கொண்டதைக் கண்டபோது பாபாதான் அவர்கள் மூலம் வந்து பிரசாதத்தை பெற்றுக் கொண்டார் என்றே மனம் எண்ணியது.
சாதாரணமாக அமெரிக்காவில் எவருமே சொல்லாமல் எவர் வீட்டுக்கும் செல்ல மாட்டார்கள். ஆகவே நடந்த இதை எதேற்சையான சம்பவமா இல்லை பாபாவின் லீலையா என என்னால் முடிவு செய்ய முடியவில்லை என்றாலும், நடந்தது பாபாவின் அருளினால்தான் என்பதே உண்மை.
ஆகவே விரதத்தின் முதல் நாளன்றே நடந்த மகிமைக்கு நான் பாபாவை மனதார வணங்கி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரிடம் என்னுடைய ஒன்பது வார விரதத்தின் அனைத்து வாரங்களிலும் அது போலவே வந்து ஆசி கூறுமாறு வேண்டினேன்.
சாய்ராம்
பவானி

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.