Saturday, November 13, 2010

Baba is with us-Experience by Rama Rao


அனைவருக்கும் சாயிராம்,
நம்மை சுற்றி தினமும் கடவுள் நடத்தி வரும் மகிமைகள் பற்றி நமக்கே தெரிவது இல்லை. அதை நாம் அறிந்து கொண்டால் நமக்கு கடவுளின் துணை எப்போதுமே உள்ளது என்பதை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். அதையே ராமராவ் இந்த கடிதம் மூலம் நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
மனிஷா
-----------------------------------------------
அன்புள்ள மனிஷா
பெங்களூரில் வசிக்கும் என்னுடைய பெயர் ராமராவ் .
நான் இன்று என்னுடைய எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தினமும் நம்மை சுற்றி நடக்கும் தெய்வ லீலைகளை நாம் அலட்சியப் படுத்திவிட்டு அவற்றை கவனிக்காமலேயே இருகின்றோம். ஆனால் அதை நாம் புரிந்து கொண்டு விட்டால் நாமும் பாபாவுடன் நெருக்கமாகி நம்முடன் எப்போதுமே பாபா உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.
இன்று நான் இந்திரா நகரில் உள்ள சாயிபாபா ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். மாலை நான்கு மணி இருக்கும். அப்போதுதான் ஆலயத்தின் கதவை திறந்தார்கள். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பாபாவின் சிலையைப் பார்த்து வியந்தேன்.
பாபா மீது போடப்பட்டு இருக்கும் சால்வை போர்த்தப்படாமல் அவர் வெறும் உடம்புடன் காணப்பட்டார். வெள்ளைவெளேர் என்ற அவர் சிலையில் அவர் கட்டி இருந்த வேஷ்டி மட்டுமே இருந்தது. அந்தக் கோலத்தில் அவரைப் பார்கவே மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இதை நினைவில் நிறுத்திக் கொண்டு அடுத்த செய்தியை இப்போது படியுங்கள்.
நான் தினமும் தெலுங்கு சானல் டிவியில் பிரமஸ்ரீ சிகண்டி கோடேச்வர ராவ்காரு என்பவர் கூறும் சொற்பொழிவை இரவு எட்டு முதல் ஒன்பது மணிவரைப் பார்பதுண்டு. இன்று மஹேஸ்வர வைபவம் என்ற பெயரில் சிவபெருமானின் பெருமைகளைப் பற்றிய வர்ணனையை தந்து இருந்தார்.
அவர் கூறியது அப்படியே நினைவில் இல்லை என்றாலும் அவர் கூறினார். ....''சிவன் நல்ல வெண்மை நிறத்தில் இருந்தார். அவர் தலை மீது உள்ள சந்திரனின் நிறமும் வெண்மையே. அவர் அமர்ந்து ஏற்கும் கைலாயமும் சுற்றிலும் வெண்மைப் படர்ந்த இடம். அவருக்கு பூஜிக்கும் பூக்களின் நிறமும் வெண்மையானதே. அவர் தலையில் இருந்து விழும் கங்கை நீரின் நிறமும் வெண்மையே, அவர் நெற்றியில் அணிந்துள்ள வீபூதியும் வெண்மையே. அவை அனைத்துமே காட்டுவது என்ன என்றால் அனைத்தும் தூய்மையானவை என்பதே''...இப்படியாக அவர் கூறிக்கொண்டே சென்றார்.
இதை கேட்டுக் கொண்டே கொண்டே இருந்த எனக்கு மனதில் தோன்றியது, சிவனின் ஸ்வரூபமான பாபா இன்று அனைத்தும் வெண்மையான நிறத்தில் அல்லவா எனக்கு காட்சி தந்துள்ளார்.
அதற்கு முன்னால் நான் இன்னொன்றைக் கூற மறந்துவிட்டேன். அது கார்த்திகை மாதம் என்பதினால் அன்று காலையில்தான் நான் ஒரு குறிப்பிட்ட சிவன் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்து இருந்தேன். அந்த ஆலயத்துக்குச் சென்றபோது அது திறக்கப்படவில்லை. ஆகவே வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என எண்ணி காம்பிரிட்ஜ் லேஅவுட் என்ற இடத்தில் இருந்த பாபாவின் ஆலயத்துக்கு சென்றேன்.
பாபாதான் என்னை அன்று அந்த ஆலயத்துக்கு அழைத்து அப்படி வெண்மை நிறத்தில் காட்சி தந்து இருக்கின்றார். அது மட்டும் அல்லாது அன்று இரவு டிவியில் நான் கேட்டு வரும் காலஷேபத்தையும் அன்று இரவு தவறாமல் கேட்க வைத்து (மேலே கூறப்பட்டு உள்ள சொற்பொழிவு) தானும் சிவனும் ஒன்றே என்பதைக் காட்டி உள்ளார்.
இதை நான் அனைவருக்கும் கூறியதின் காரணம் நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட அவை எதேச்சையாக நிகழ்ந்தவை என அலட்சியப் படுத்திவிடாமல் பக்தி பூர்வமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே. நீங்களும் அவசியம் பிரமஸ்ரீ சிகண்டி கோடேச்வர ராவ்காருவின் ராமாயணம், ஹனுமான் மற்றும் பாகவதம் போன்றவற்றின் சொற்பொழிவை கீழ் கண்ட இணையதளத்தில் பார்க்கவும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
http://te.srichaganti.net/SriShirdiBaba.aspx
அன்புடன்
ராமராவ்
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.