Thursday, November 11, 2010

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 4.


அன்பானவர்களே
பாபாவின் அருளை பல விதங்களில் அவருடைய பக்தர்கள் பெற்று வந்துள்ளார்கள். அவருடைய லீலைகளைப் படிக்கப் படிக்க அவர் மீதான நம்பிக்கை அனைவருக்கும் அதிகமே ஏற்படும். ஜெய் சாயி ராம் .
மனிஷா


அனுபவம்-1
நான் என்னுடைய அனுபவத்தை சாயியின் பக்தர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.
போன வருடம் என்னுடைய நண்பன் எனக்குக் கொடுத்த பாபாவின் விரத புத்தகத்தைப் பெற்றுக் கொண்டப் பின்தான் நான் பாபாவின் பக்தனாக மாறினேன். எனக்கு பல விதமான பொருளாதார நெருக்கடி இருந்ததினால் சாயி விரதத்தை செய்ய நினைத்து அதை தொடர்ந்து படிக்கலானேன்.
என்னுடைய பிரச்சனைகள் குறைவதற்கு பதிலாக அதிகம் ஆகத் துவங்கினாலும் என்றாவது ஒரு நாள் பாபா எனக்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கையில் அனைத்து பிரச்சனைகளையும் அவரிடமே விட்டுவிட்டு தொடர்ந்து விரதம் இருந்து வந்தேன்.
ஒரு நாள் இணையதளத்தில் பாபாவின் பதில்கள் என்பதைப் பார்த்து அதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவர் கருணைக் காட்டுவது போல எனக்கும் கருணைக் கட்டுமாறு பாபாவிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வந்தது. எனக்கு துவாரகாமாயியில் இருந்து வந்த பதிலைப் போல இந்தியாவுக்கு சென்று சீரடிக்கு விஜயம் செய்ய எனக்கு என் கணவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இந்தியாவுக்கு வந்தேன். சீரடிக்கும் சென்றேன். அது ஜூன் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி. சீரடியில் நல்ல தரிசனம் கிடைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை நல்ல தரிசனம்.
அங்கு துவாரகாமயிக்கும் சென்றேன். அங்கிருந்த பூசாரி என்னிடம் இருந்து ஓம் சாயி ராம் என நான் எழுதி இருந்த ஜபப் புத்தகம் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அதை துனியில் போட்டார். மாலை மீண்டும் சமாதி ஆலயத்துக்குச் சென்று கியூவில் நின்று உள்ளே சென்றேன். பாபாவின் சமாதி மீது என்னால் கையை வைக்க முடிந்தது. பாபா நிச்சயமாக எனக்கு அருள் புரியப் போகின்றார் என்ற நம்பிக்கை வந்தது. சனிக்கிழமையும் பாபாவின் தரிசனத்துக்குச் சென்றேன். மனதில் அமைதி தோன்றியது. துவாரகாமாயியில் தரிசனத்துக்குச் சென்றேன். மனம் குளிர தரிசனம் செய்தேன். எங்களுக்குள்ள பல பிரச்சனைகளையும் பாபா விரைவில் தீர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. பாபாவுக்கு நான் நன்றி கூறினேன்.
ஓம் சாயி ராம்.


அனுபவம்-2
அன்புள்ள மனிஷாஜி
எனக்கு இன்று நடந்த ஒரு அற்புத சம்பவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்று நல்ல மழை. என்னுடைய கணவர் காரில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று இறங்கிக் கொண்டு மற்ற வேலைகளைப் பார்க்க காரை என்னை எடுத்துப் போகச் சொன்னார்.
நல்ல மழை பொழிந்து கொண்டு இருந்தது. நிற்கவில்லை. ஆகவே வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள வாசகசாலையில் ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு போகலாம் என நினைத்து காரை எடுத்தேன்.
வாசகசாலைக்கு சென்று காரை நிறுத்தினேன். காரை நிறுத்தியபோது எனக்கு முன் இருந்த காரில் உராசி விட்டது போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை. பயந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். நல்ல வேளையாக இரண்டு காருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இன்னொரு காரில் அமர்ந்து இருந்த ஒரு முதியவரிடம் சென்று என்னுடைய கார் முதலில் நின்றிருந்த காரின் மீது மோதியாதா எனக் கேட்டேன். அவரும் சிரித்தபடி ஆமாம் மோதியது எனக் கூறிவிட்டு அந்தக் காரின் சொந்தக்காரரைக் காட்டினார்.
அமெரிக்காவில் உங்களுடைய கார் வேறு எந்தக் கார் மீதாவது மோதிவிட்டால் அபராதமும் விதித்து அதைக் குறித்த விவரத்தை உங்களுடைய லைசென்ஸ் புத்தகத்திலும் எழுதி விடுவார்கள். அதனால் இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகம் தர வேண்டி வரும். அதை நினைத்து பயந்து கொண்டே நான் சாயியை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே அந்த காரின் சொந்தக்காரரிடம் சென்றேன். நடந்தவற்றை அவரிடம் கூறிவிட்டு மன்னிப்புக் கேட்டேன். அவர் வந்து தன்னுடைய காரைப் பார்த்தார். எந்த சேதமும் இல்லை. பரவாயில்லை எனக் கூறிவிட்டு தன்னிடம் வந்து நடந்ததைக் கூறியதற்கு எனக்கு நன்றி கூறி விட்டுச் சென்று விட்டார். பாபாதான் அன்று என்னைக் காப்பாற்றி உள்ளார்.
திவ்யா



அனுபவம்-3
அன்பானவர்களே
நான் உங்களுடைய இணைய தளத்தைப் படிப்பவன். எனக்கு நடந்த ஒரு மகிமையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சாயி சரித்திரத்தைப் படித்து முடித்தேன். அதை முடித்ததும் ஆலயத்துக்குச் செல்ல முடிவு செய்து பிரசாதம் வாங்கச் சென்றேன். ஆறு ஆப்பிள் பழங்களை வாங்கி வந்து ஒன்றை என் வீட்டில் இருந்த பாபாவின் சிலைக்கு பிரசாதமாக வைத்து விட்டு மற்றதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்தேன். அந்தப் பழங்களை பிரசாதங்களை பக்தர்களுக்கு தருபவரிடம் தந்து விட்டு கியூவில் சென்று நின்றேன். ஏற்கனவே பல பக்தர்களும் கொடுத்து இருந்த 40 -50 ஆப்பிள் பழங்களுடன் அதையும் வைத்தனர். என் மனதில் நான் நினைத்தேன், பாபா உன் அருள் எனக்கு உள்ளது என்றால் நான் கொண்டு வந்து தந்த ஆப்பிள் பழமே பிரசாதமாக எனக்கு கிடைக்க வேண்டும். என்ன அதிசயம். எனக்கு பிரசாதமாக இரண்டு ஆப்பிள் பழங்கள் கிடைத்தன. அதில் நான் கொடுத்த ஒரு பழமும் இருந்தது. என்னால் பேச முடியவில்லை. பக்தர்களின் சின்ன சின்ன ஆசைகளைக் கூட எப்படி எல்லாம் பாபா நிறைவேற்றுகிறார் என வியந்தேன்.
இன்னொரு சம்பவமும் எனக்கு நடந்தது. தீபாவளிக்கு முதல் நாள். அது வியாழன் கிழமை . நான் பூஜை அறையில் விளக்குக்கு பதில் மெழுகுவத்தியையே ஏற்றுவேன் . வீட்டில் இருந்த மெழுகுவத்தி அனைத்தும் தீர்ந்து விட்டது என்பதினால் பாபாவின் ஆலயத்துக்குச் செல்லும் முன் அங்கிருந்தக் கடையில் மெழுகுவத்தியை வாங்கிக் கொண்டேன். பிறகு வீடு போகும்போது வாங்கலாம் என்றால் நான் வீடு போவதற்குள் அங்குள்ள கடை மூடிவிடும். மெழுகுவத்தியையும் வாங்க முடியாமல் போய்விடும். ஆலயத்துக்குள் சென்றேன். பலரும் தீபாவளிக்காக அங்கு மெழுகுவத்தியை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை எப்படிக் கூறுவது. தீபாவளி அன்று ஏற்ற வீட்டு பூஜை அறைக்காக நான் வாங்கி இருந்த மெழுகுவத்தியை முதலில் பாபாவின் ஆலயத்தில் அல்லவா ஏற்றினேன். அதற்காகத்தானே பாபா தன்னுடைய ஆலயத்துக்கு வரும் நாளன்று என்னை மெழுகுவத்தியை வாங்க வைத்துள்ளார்.
பாபா நமக்கு கருணைக் காட்டுகிறார், நம்முடைய அன்பை ஏற்றுக் கொள்கின்றார் என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்?
ஓம் சாயி ராம்
ரோஹித் பக்க்ஷி

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.