Sai Baba blessed me on my Birthday-Experience by Avinash Kaur
அன்பானவர்களே
அனைவருக்கும் குருநானக் தின நல் வாழ்த்துக்கள்
இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தினால் அஷ்வினி கவுரின் அனுபவத்தைப் வெளியிடுகிறேன். நான் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் கம்ப்யூட்டரில் வேலை செய்வது இல்லை. ஆனால் ஏதாவது கடிதம் வந்துள்ளதா என்பதைப் மட்டுமே பார்க்க அதைத் திறப்பேன். அதற்காக இன்று அதை திறந்தபோது அவினாஷ் கவுர் தனக்கு பாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை வெளியிட முடியுமா எனக் கேட்டு எழுதி இருந்த கடிதம் இருந்தது. அதில் சாயிபாபாவுடன் குருநானக்கின் படமும் சேர்ந்து உள்ள படத்தையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டு இருந்தார். இன்று குருநானக்கின் ஜெயந்தி என்பது நினைவும் இல்லை. என்னிடம் அவரும் பாபாவும் சேர்ந்து உள்ள படமும் உள்ளதா என்பதும் தெரியாது.
ஆகவே என்னிடம் இருந்த படங்களில் அப்படிப்பட்ட படம் உள்ளதா எனத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் சகோதரர் ராகுல் அனுப்பி இருந்த படங்களில் தேடியபோது அது கிடைத்தது. அதை உடனடியாக வெளியிட அமர்ந்தேன். இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் இந்தப் புனித நாளில் அது வெளியாக வேண்டும் என பாபா எண்ணி இருந்ததினால்தான் நான் கம்ப்யூட்டரை திறந்து உள்ளேன்.
ஜெய் சாயிகுரு நானக் தேவ்
மனிஷா
----------------------------------------------------------அனைவருக்கும் குருநானக் தின நல் வாழ்த்துக்கள்
இன்று எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தினால் அஷ்வினி கவுரின் அனுபவத்தைப் வெளியிடுகிறேன். நான் சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் கம்ப்யூட்டரில் வேலை செய்வது இல்லை. ஆனால் ஏதாவது கடிதம் வந்துள்ளதா என்பதைப் மட்டுமே பார்க்க அதைத் திறப்பேன். அதற்காக இன்று அதை திறந்தபோது அவினாஷ் கவுர் தனக்கு பாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை வெளியிட முடியுமா எனக் கேட்டு எழுதி இருந்த கடிதம் இருந்தது. அதில் சாயிபாபாவுடன் குருநானக்கின் படமும் சேர்ந்து உள்ள படத்தையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டு இருந்தார். இன்று குருநானக்கின் ஜெயந்தி என்பது நினைவும் இல்லை. என்னிடம் அவரும் பாபாவும் சேர்ந்து உள்ள படமும் உள்ளதா என்பதும் தெரியாது.
ஆகவே என்னிடம் இருந்த படங்களில் அப்படிப்பட்ட படம் உள்ளதா எனத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் சகோதரர் ராகுல் அனுப்பி இருந்த படங்களில் தேடியபோது அது கிடைத்தது. அதை உடனடியாக வெளியிட அமர்ந்தேன். இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் இந்தப் புனித நாளில் அது வெளியாக வேண்டும் என பாபா எண்ணி இருந்ததினால்தான் நான் கம்ப்யூட்டரை திறந்து உள்ளேன்.
ஜெய் சாயிகுரு நானக் தேவ்
மனிஷா
பாபாவுடன் அவினாஷ் கவுரின் அனுபவம்
நான் உங்களின் இணையதளத்தை தவறாமல் படித்து வந்தாலும் பாபாவுடன் நான் பெற்ற என்னுடைய அனுபவத்தை இன்றுவரை எழுதியது இல்லை. ஆனால் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதை வெளியிடுமாறு வேண்டுகிறேன்.
அவினாஷ் கவுர்
பாபாவுடன் என்னுடைய முதல் அனுபவம்
சாயிபாபாவும் குருநானக்கும் ஒருவரே
நான் சீக்கிய மதத்தை சேர்ந்தப் பெண்மணி. ஆனால் பாபாவை வணங்குபவள். அவர் என்னுடைய தவறுகளை மன்னித்து வருபவர். நான் புது டெல்லியில் உள்ள ரோஹிணியில் சாயிபாபாவின் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் என இரண்டு வருடங்களாக முயன்றேன். ஆனால் என்னால் போகவே முடியவில்லை. ஆனால் நேற்று, வியாழக் கிழமை , நவம்பர் பதினெட்டாம் தேதியன்று என் பிறந்தநாள் வந்தது. ஆகவே அவர் ஆலயத்துக்குச் சென்றேன்.
அங்கு செல்லும் முன் நான் பாபாவுக்குப் போட மஞ்சள் நிற துணியையும் பூக்களையும் கொண்டு சென்று அதை பாபாவுக்கு அற்பணிக்குமாறு பூசாரியிடம் வேண்டினேன். அவரும் அதை செய்தப் பின் எனக்கு பாபாவின் காவி நிறத் துணியை பிரசாதமாகத் தந்தார். வெளியில் வந்த நான் வீட்டில் வைத்து இருந்த பாபாவின் சிலைக்குப் போட மஞ்சள் துணி வாங்கச் சென்றேன். அங்கு சந்தனமும் இருந்தது. சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த சாயி சரித்திரத்தில் பாபாவின் நெற்றியில் ஒரு பக்தர் சந்தனம் இட அதை அவர் ஏற்றுக் கொண்டாதாக கதை இருந்தது. ஆகவே அது எனக்கு நினைவுக்கு வர நானும் பாபாவுக்கு சந்தனம் வாங்கினேன்.
ஆனால் எங்களுடைய குருவான குருனானக் ஜி தானும் சந்தனம் அணிந்தது இல்லை, அவரை வணங்குபவர்களும் சந்தனம் அணிவதில்லை என்பது வழியில் எனக்கு நினைவுக்கு வந்தது. சரி போகட்டும் என அதை அப்படியே விட்டுவிட்டு வீடு திரும்பினேன். பாபாவின் சிலைக்கு சந்தனம் இடப் பையை திறந்தேன். ஆனால் நான் வாங்கி வந்து இருந்த சந்தனம் அதில் காணவில்லை.
என் மனதில் புரிந்தது. ஆலய பூசாரி எனக்கு பாபாவின் காவி கலர் துணியை தந்தார். பாபாவின் ஆலயத்துக்கு சென்று வணங்குபவர்களுக்கு அவர் பாபாவின் காவி உடையை தருகிறார். அதை பாபாவின் ஆசிர்வாதமாகப் பெற்றுக் கொண்ட என்னால் என் குரு ஏற்காத சந்தனத்தை எடுத்து வரமுடியவில்லை. ஆனால் பாபாவும் குருநானக்கும் ஒருவரே. பாபா என் பிறந்த நாளில் எனக்கு ஆசிர்வாதம் தந்து தான் துணியையும் தந்துவிட்டார். வேறு என்ன வேண்டும்? என் குரு ஏற்காத சந்தனத்தை என்னால் எடுத்து வர முடியவில்லை.
என் பிறந்த நாளன்று காலையில் நான் ஒரு ஊதுபத்தியை பாபாவின் முன்னால் ஏற்றிக் கொண்டு இருந்தபோது இன்று எனக்கு பாபா நிச்சயமாக ஏதேனும் பரிசு தருவார் என மனதில் எண்ணினேன்.

பாபாவுடன் என்னுடைய இரண்டாவது அனுபவம்
சாயிபாபா எனக்கு அற்புதமான பரிசு தந்தார்
என் பிறந்த நாளன்று காலையில் நான் ஒரு ஊதுபத்தியை பாபாவின் முன்னால் ஏற்றிக் கொண்டு இருந்தபோது இன்று எனக்கு பாபா நிச்சயமாக ஏதேனும் பரிசு தருவார் என மனதில் எண்ணினேன்.
மாலையில் நான் என்னுடைய காதலனுடன் சாயி பாபாவின் ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். அங்கு சென்றதும் என்னுடைய காதலர் எனக்கு பாபாவின் ஒரு அற்புதமான படத்தைப் பரிசாகத் தந்தார். அதை அவர் தந்ததும் எனக்கு திகைப்பாக இருந்தது. பாபா தான் படத்தை எனக்கு பிரியமானவர் மூலம் அவர் ஆலயத்தில் எனக்கு அன்று தந்து உள்ளார் அல்லவா? அதை விட பெரியதாக பாபாவிடம் நான் என்ன கேட்க முடியும் ? என்னுடைய இந்த பிறந்த நாள் எனக்கு மன நிறைவாக இருந்தது. நான் பாபாவினால் ஆசிர்வதிக்கப் பட்டுவிட்டேன் என எண்ணினேன்.
( Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment