Wednesday, November 24, 2010

Sai Baba Gave Message To Write Book-Experience By Lorraine Walshe-Ryan

அன்பானவர்களே
சாயி பக்தையான ரோஷனிஜி எனக்கு முன்னர் அனுப்பி இருந்த கடிதத்தை வெளியிட முடியவில்லை. ஆகவே என்று அதை வெளியிடுகிறேன் .
மனிஷா
-------------------
மனிஷாஜி,
நீங்கள் வெளியிட்டு வரும் சாயியின் மகிமைகளை படித்து வருகிறோம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் இதுவரை எழுதவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கும் என்னுடைய நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறோம். இதை பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்.
ரோஷனி
 அனுபவம்

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதியன்று என்னுடைய நெருங்கிய நண்பரான லோரைன்னுக்கு பாபாவின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை அனைவருக்கும் கூற விரும்புகின்றேன். இந்த சம்பவத்தை என்னிடமும் என் நண்பியிடமும் லோரைன்னே கீழே எழுதி உள்ளபடிக் கூறினார்:-
லோரைன் எழுதியது:-  ''2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதியன்றுநான் சாயி சரித்திரத்தைப் படித்து முடித்து இருந்தேன். அதை படித்து முடித்ததும் பாபாவின் இரண்டாவது புத்தகத்தை எழுதத் துவங்க வேண்டுமா என அவர் ஆணையை எதிர்பார்த்து இருந்தேன்.  அவரைப் பற்றி நான் எழுதி முடித்த முதல் புத்தகம் 2006 ஆம் ஆண்டில் வெளியான 'நான் என்றும் உன்னுடன் இருக்கின்றேன்' என்பது.  அதை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. என்னால் பாபாவின் இரண்டாவது புத்தகத்தை எழுத முடியாமல் எதோ தடுத்து வந்தது. அடுத்த ஒரு வாரம் வரை எனக்கு சாயி சரித்திரத்தில் நான் படித்து இருந்த சாமாவின் நினைவாகவே இருந்தது. நான் அவருடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தது போன்ற அவருடைய கனவும் வந்தது. அதைப் பற்றியும் எழுதி வெளியிட ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை. அதற்க்கான காரணங்களை நான் தற்போது எழுத விரும்பவில்லை. அது என்னுடைய இரண்டாவது புத்தகத்தில் வெளியாகும். ஆகவே நான் என்னுடைய நண்பியான (தோழிக்கு) ரோஷனிக்கு ஒரு கடிதம் எழுதி அவளை பாபாவிடம் நான் அவரைப் பற்றிய இரண்டாவது புத்தகம் எழுதலாமா என அனுமதி கேட்டு விட்டு கூறுமாறு கேட்டுக் கொண்டேன். இனி மேலும் நடந்த சம்பவத்தைப் பற்றி ரோஷனியே கூறுவாள், கேளுங்கள் .
ரோஷனி எழுதியது:- '' எனக்கு என்னுடைய வாழ்கையில் நடந்த மிகப் பெரிய அற்புதமான சம்பவம் இது. லோரைன்னிடம் இருந்து கடிதம் வந்ததும் அடுத்த நாள்- ஜூன் 23 ஆம் தேதியன்று- நான் பாபாவின் பிரார்த்தனையில் அவரிடம் என் தோழியிடம் இருந்து வந்த கடிதத்துக்கு பதில் கேட்டேன். எனக்கு அதற்கான பதில் இன்றே வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொண்டேன். அதன் பின் நான் இணையதளத்தில் என் கடிதங்களைப் பார்க்க  ஈ - மெயிலை திறந்தேன். அதில் ராகுல் என்பவர் எனக்கு அனுப்பி இருந்த  கடிதம் இருந்தது. அதில் அவர் இரண்டு படங்களை அனுப்பி இருந்தார்.  ஒன்றைப் பற்றி பிறகு கூறுகிறேன். இரண்டாவது படமோ பாபா தனது கால்களை எப்போதும் காட்சி தரும் நிலையில் மடித்து வைத்துக்கொண்டு மஞ்சள் நிறப் பூக்களை மாலையாகப் போட்டு இருந்த காட்சியில் இருந்தது. அதை நான் உடனடியாக லோரைன்னுக்கும் மற்றவர்களும் அனுப்பினேன்.  அடுத்து எனக்கு வந்திருந்த இன்னொரு கடிதம் 'சாயியின் செய்தி' என்ற பொருளுடன் இருந்தது.  ஒருவேளை அது லோரைன்னுக்கு பாபா அனுப்பிய செய்தியாக இருக்குமோ என நினைத்து அதை திறந்தேன். அதிலும் ராகுல் அனுப்பி இருந்த அதே இரண்டு படங்கள் இருந்தன. அதைப் பார்த்த எனக்கு திக்கென ஆயிற்று. முதலில் வந்திருந்த இரண்டு படங்களையும்  நான் சரியாக கவனிக்காமல் அதை அப்படியே லோரைன்னுக்கு அனுப்பி இருந்தேன்.  அது அவருக்கு போய் சேரவில்லை என்பதை என் மெயிலில் இருந்த செய்திப் பெட்டி எனக்கு காட்டியது.  மீண்டும் இப்போது இரண்டாவதாக வந்தேருந்த அதே படத்தைப் பார்த்தேன். அதில் முதல் படம் பாபாவின் படம் போட்டு இருந்த ஒரு புத்தகம் மட்டுமே.  என்ன அதிசயம்.....ஒஹ் ...அதுவே லோரைன்னுக்கு பாபா இரண்டாவது புத்தகத்தை எழுத் அவளுக்கு அவர்  அனுமதி தந்து இருந்த செய்தியோ என பிரமித்தேன். அதை மீண்டும் அனுப்ப வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது கடிதம் வந்துள்ளது போலும். அந்த படங்களை நீங்களும் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.
பாபா உனக்கு கோடி கோடி பிரானாம்.''
லோரைன் எழுதியது:- எனக்கு ரோஷனி அனுப்பி இருந்த பாபாவின் மௌன மொழி சம்மதம் என்னை உலுக்கிவிட்டது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று என்னால் வேறு வேலையே செய்ய முடியவில்லை. அன்று இரவு முழுவதும் அந்த படம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதலில் எழுதிய புத்தகத்தை எழுதும் முன் பாபாவைப் பற்றியா விவரங்களை நான் யாரிடமோ விஜாரித்ததும் (அவர் யார் என நினைவு இல்லை) அவர் எனக்கு பாபாவைப் பற்றிய ஒரு புத்தகத்தை அனுப்பியதும் நினைவில் வந்தது. அதே  புத்தகத்தின் புகைப்படமே தற்போது ரோஷனிக்கு வந்து இருக்க அதை எனக்கும் அவள் அனுப்பி இருந்துள்ளாள். மகிழ்ச்சி தாங்காமல் நான் அழுதுவிட்டேன். முதல் புத்தகத்தை நான் வெளியிட்டபோது எனக்கு வந்திருந்த புத்தகத்தின் அதே  படத்தை என்னுடைய முதல் புத்தகத்தின் அட்டையாகப் போட ஆசைப்பட்டேன். ஆனால் காப்பிரைட் சட்டம் அதை தடுத்திருந்தது. இப்போது எனக்கு பாபா ஒரு படத்தை அனுப்பி இரண்டாவது புத்தகத்தை எழுத ஆணை தந்துவிட்டார். நான் உடனேயே பாபாவைப் பற்றிய இரண்டாவது புத்தகத்தைப் பற்றி எழுதத் துவங்கிவிட்டேன்.
என்றென்றும் எனக்கு துணையாக இருக்கும் பாபாவுக்கு நான் மனதார நன்றி கூறுகிறேன்.
லோரைன் வால்ஷே ரயோன்
அந்த படத்தை டவுன்லோடு செய்ய கீழே உள்ளதை கிளிக் செய்யவும்
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.