Blessed Fruit of Shirdi Sai Baba.

அன்பானவர்களே
நான் சீரடிகுச் சென்றால் அங்கிருந்து கிளம்பும் கடைசி நாளன்று சீரடி தாமில் உள்ள - சாவடி , குருச்தான், மாருதி மந்திர், துவாரகாமாயி - என அனைத்து இடங்களுக்கும் ஒரு முறை சென்றுவிட்டுத்தான் கிளம்புவேன். அது என வழக்கம். துவாரகாமாயிக்கு சென்று அங்கு அமர்ந்தபடி தியானம் செய்தபின் பாபாவிடம் இதயபூர்வமாக பேசுவேன். அங்கிருந்து கிளம்பும் முன் என்னை அறியாமலேயே அங்கிருந்து கிளம்ப வேண்டி உள்ளதே என எண்ணி அழுகை வரும். நான் ஒரு தேங்காயை பாபாவின் பாதத்தில் வைத்து மீண்டும் எங்களை விரைவாக அங்கு வர ஏற்பாடு செய்யுமாறு வேண்டுவது உண்டு. அதையும் ஒரு பழக்கமாக வைத்து இருந்தேன். வருடத்துக்கு ஒரு முறை அங்கு செல்வது உண்டு. சில நேரத்தில் நான் தேங்காயை எடுத்துக் கொண்டு துவாரகாமாயிக்குள் நுழையும் போதே அவர்கள் அதை ஏதாவது காரணத்துக்காக மூடிவிட்டாலும், துவாரகாமாயியில் அதை எடுத்துக் கொண்டு நுழைந்து விட்டாலே என் கோரிக்கைகள் நிறைவேறி விடுவதைக் கண்டு உள்ளேன். பாபாவுக்கு பிடித்தப் பொருளோ என்னவோ, தேங்காய்க்கு அத்தனை மகிமை உண்டு. அதன் மகிமை பற்றி இதோ மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒருவர் தனது அனுபவத்தை எழுதி உள்ளார். படியுங்கள் . அது சாயி லீலா என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகி உள்ளது.
மனிஷா
---------------------------------------------------------------------------------------------------
தினேஷ் நந்தன் திவாரியின் அனுபவம்
நான் சில காலம் பல பிரச்சனைகளில் மூழ்கி இருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு சீரடிக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றும். ஆனால் பணப் பிரச்சனையினால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. சீரடிக்கு செல்ல கழ்டப்பட்டு பணத்தை சேர்ந்தாலும் அது ஏதாவது ஆகி கரைந்து விடும்.
நான் ஒரு முறை எங்கள் வீட்டின் அருகில் இருந்த சாயிபாபா ஆலயத்துக்கு சென்றேன் (ஜபல்பூர்) . ஆரத்தி முடிந்ததும் அங்கிருந்த ஆலய பண்டித் என்னை பார்த்து 'நீ ஏன் சோகமாக இருக்கின்றாய்' எனக் கேட்டார். நான் என்னுடைய கஷ்டங்களைப் பற்றிக் கூறினேன். சீரடிக்கு செல்ல முடியாமல் இருபது பற்றிக் கூறி வருந்தினேன்.
அதைக் கேட்ட அவர் பெரியதாக சிரித்தார். 'சீரடிக்கு செல்வது மணமகன் மாமனார் வீடு செல்வது போன்றது அல்ல. நீ பாபாவைக் காண வேண்டுமானால் உன் விருப்பத்தைக் அவரிடம் கூறி ஒரு தேங்காயை அவருக்கு அனுப்பினால் அல்லது அங்கு வரும்போது கொண்டு வருவதாக வேண்டிக் கொண்டு அதை எடுத்து வைத்தால் ( வேண்டுதல்) நிச்சயமாக உன் எண்ணம் நிறைவேறும் ' என்றார். அதைக் கேட்ட நான் பாபாவை அவர் கூறியபடியே வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயை சீரடிக்கு சென்றவர் மூலம் அனுப்பினேன். என்ன அதிசயம். அடுத்த பதினைந்து நாட்களில் சீரடிக்கு செல்ல முடிந்தது.
நான் அரசாங்கத்தின் மின்சாரத் துறையில் வேலை செய்பவன். என்னுடைய அலுவலகத்தில் என்னுடன் சோனால்கர் என்ற இன்னொரு சாயி பக்தார் வேலை செய்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள், சாதனா என்ற ஒரு மகள். அவளுக்கு திருமண வயதாயிற்று. கடந்த 2-3 வருடங்களாக அவளுக்கு தகுந்த வரன் கிடைகவில்லையாம். அவர்கள் கவலைப்பட்டு அந்த ஆலயத்து பூசாரியிடம் அது பற்றி கேட்டனர். அப்போது என்னை அறியாமலேயே என வாயில் இருந்து இப்படி வந்தது. '' அம்மா ஒரு தேங்காயை உன்னுடைய மகளின் கையில் தந்து என்ன வேண்டுமோ அதை வேண்டிக்கொண்டு அதை சீரடியில் துவாரகாமாயிக்கு அனுப்பி வை.
அந்த தேங்காயை பாபாவாக நினைத்து பாபாவிடம் என்ன கூற விரும்புகின்றீர்களோ அதை தேங்காயிடம் கூறி உங்கள் பிரச்சனையை நிவர்திக்குமாறு வேண்டுங்கள். நிச்சயம் உங்களுடைய மகளின் திருமணம் விரைவாக நிறைவேறும் '' என்று கூறினேன்.
சோனால்கர் மற்றும் அவருடைய மனைவி நான் கூறிய அறிவுரையை ஏற்று அப்படியே அதை செய்தனர். அடுத்த முப்பத்தி ஆறு நாட்களுக்குள் அவளுடைய மகளுக்கு நல்ல வரன் வந்தது. விரைவில் திருமணம் ஆயிற்று. குமாரி சாதனா சோனால்கர் தற்போது திருமணம் ஆகி திருமதி சாதனா நர்சிகராக உள்ளார்.
சாயி சரித்திரத்தில் இப்படி கூறப்பட்டு உள்ளது '' என்னை நம்பி என்னையே வணங்குபவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுடைய தீமைகள் அழியும். சாய், சாயி என தினமும் ஓயாமல் தியானிப்பவரை ஏழு கடலுக்கும் அப்பால் உள்ள உலகிற்கு அழைத்துச் செல்வேன். ''
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment