Saturday, April 17, 2010

Witnessed Great Miracle After Darshan At Sai Baba Temple Shibpur.




நான் பல இடங்களிலும் வேலை பார்த்து வந்தேன். முதலில் பூனாவில் இருந்த போது சீரடிக்குச் செல்வது உண்டு. அங்கிருந்து பெங்களூருக்கு வந்த பின் அங்கும் சாயி பாபா ஆலயம் இருந்தது. மன அமைதி பெற அங்கு சென்று தியானிப்பேன். ஆனால் நான் கல்கத்தாவுக்கு வந்த பின் நான் இருந்த இடத்தின் அருகில் சாயி பாபாவின் ஆலயம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு வருத்தமுற்றேன். இனி நான் இந்த ஆலயத்தில் சென்று மன அமைதி பெறுவேன்.

எனக்கு கடுமையான பணப் பிரச்சனை ஏற்பட்டது. நாளாக நாளாக மனம் துவண்டு போனேன். பாபா கூறியது நினைவில் வந்தது. என்னுடைய ஆலயத்தில் கால் எடுத்து வைத்தால் உன் துயரங்கள் தீரும். ஆனால் பணப் பற்றக்குறையில் நான் சீரடிக்கு எங்கிருந்து போவது? ஆகவே மும்பையில் இருந்த என்னுடைய சகோதரியிடம் எனக்காக சீரடிக்குச் சென்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் என் அதிருஷ்டம் வேறு மாதிரியாக இருந்தது. அவளாலும் செல்ல முடியாத நிலை. அதனால் என் மனம் இன்னும் சோர்ந்து போயிற்று. பாபாவின் படத்தின்முன்னால் அமர்ந்து கொண்டு அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஒரு நாள் நான் இணையதளத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது நடியாவில் இருந்த சாயிபாபா ஆலயம் பற்றி உங்களுடைய தளத்தில் படித்தேன். எனக்கு விடி மோட்சம் வந்து விட்டதை உணர்ந்தேன். மறுநாள் நடியாவுக்கு கிளம்பிச் சென்று விட்டேன். ஆனால் சிப்பபூர் ஆலயத்துக்கு செல்லும் வழி தெரியவில்லை. ஆகவே திரு அமித் பிஸ்வாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் என்னை கிருஷ்ணா நகருக்கு வந்து விடுமாறும் அங்கு வந்ததும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.

நானும் கிருஷ்ணா நகரை அடைந்து அவரை தொடர்பு கொள்ள அவரே வந்து அனைத்து செலவையும் செய்து என்னை கங்கை நதியை தாண்டி இருந்த சிப்பபூர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த பாபாவின் சிலையைக் கண்டவுடன் என் கண்களில் இருந்து தரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

'பாபா நீ எங்கு இருந்தாய்' என உள்ளம் கதறியது. அவரை சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினேன். என்னுடைய பணப் பிரச்சனைகளை நீதான் தீர்க்க வேண்டும் என மனம் உருகி வேண்டினேன். அடுத்த சில நிமிடங்களில் என் மனதில் அமைதி தோன்றியது. அப்போது அங்கு சில கிராமத்து மக்கள் இருந்தனர். அவர்களைக் கண்டாலே பரம ஏழைகள் என்பது தெரிந்தது. சாப்பிடக் கூட வழி இல்லை. பிரசாதத்தை உண்டு வாழ்ந்து வருபவர்கள். ஆனால் அவர்களிடம் இருந்த பக்தி என்னைவிட அதிகம் இருந்ததைக் கண்டு நான் வெட்கம் அடைந்தேன்.

அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே எனக்கு சீரடியில் இருந்த உணர்வே ஏற்பட்டது. அமித் அவர்கள் அங்கு தானாகவே தோன்றிய வேப்ப மரத்தைக் காட்டினார். நூறு வருடங்களுக்கு முன்னர் அங்கு இருந்த ஆலயத்தின் இடத்தைக் காட்டினார். தனது பாட்டனார் எப்படி சாயிபாபாவை வணங்கி வந்தார் என்பதைக் கூறினார். அதை எல்லாம் கேட்டபோது அங்கு சாயிபாபா வாழ்ந்து வருகின்றார் என்பது மனதுக்குப் புரிந்தது. அமித் குடும்பத்தினர் மிகவும் அன்புடன் பழகினர். அவர்கள் கிராமத்து ஆளை அனுப்பி என்னை கிருஷ்ணா நகர் பஸ் நிலையத்தில் விட்டு வருமாறு கூறினார்கள்.

பாபாவின் ஆலயத்தில் இருந்து கிளம்பி சற்று தூரமே வந்த போது எனக்கு என்னுடைய அலுவலகத்தில் என் மேல் அதிகாரியிடம் இருந்து தொலைபேசி செய்தி வந்தது. நான் உடனடியாக பிரான்ஸ் நாட்டுக்குப் மூன்று முதல் ஐந்து வருடம் இருக்கும் வகையில் போகவேண்டி இருக்கலாம் எனக் கூறினார். அந்த மகிழ்ச்சியை நான் என்னவென்று கூறுவது?

அடுத்த செவ்வாய் கிழமை எனக்கு ஒரே மண்டை குடைச்சல். நல்ல முறையில் நேர்முகத் தேர்வில் வெற்றி அடைய வேண்டுமே என பயந்தேன். பாபாவை மனதார வேண்டிக் கொண்டேன். என்ன ஆச்சர்யம் தெரியுமா, எந்த சிக்கலும் இல்லாமல் நேர் முகத் தேர்வில் வெற்றி பெற்றேன். வெகு விரைவில் பிரான்ஸ் நாட்டுக்குப் போக ஆயத்தம் ஆனேன்.

அனைவருக்கும் நான் கூறுவது என்ன என்றால், நீங்கள் ஒரு முறையாவது சிப்பபூர் ஆலயத்துக்கு சென்று பாபாவின் தரிசனம் பெற்று அதன் சக்தியை பாருங்கள் என்பதே.
(Translted into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.