Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Gimmicks of Nanavali
என்னுடைய தந்தை மாதத்தில் ஏழு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை சீரடியில் தங்கி இருபது உண்டு . அப்போது அவர் பலதரப்பட்ட மக்களையும் அவர்களுக்கு சாயிபாபாவிடம் ஏற்பட்ட அனுபவங்களையும் நேரில் கண்டவர். சாயிபாபா வந்தவர்களை திரும்பிப் போ எனக் கூறி விட்டால் அவர்கள் திரும்பச் சென்று விடுவார்கள். என் தந்தை கண்ட பல அற்புதங்கள் அனைத்தும் சாயி சரித்திரத்தில் காணப்படவில்லை என்றாலும் அவற்றில் இருந்து சிலவற்றை தந்து உள்ளேன்.
நானாவளி செய்த குறும்புத்தனம்
பாபாவிடம் நானாவளி என்ற ஒரு குறும்புக்கார மனிதர் இருந்தார். அவரை நான் அப்படி அழைப்பதின் காரணம் அவருக்கு மரியாதை குறைவாகத் தர என்பதற்காக அல்ல. அவர் செய்யும் குரங்குத்தனமான சேட்டைகளினால் வெறுப்படைந்த பலர் பாபாவிடமே சென்று அவரைப் பற்றி குறை கூறி உள்ளனர். பாபா அவரை அழைத்து அவர் அப்படி தொடர்ந்து செய்தால் வந்துள்ள பக்தர்கள் அனைவருமே சீரடியை விட்டு வெளியேறிவிடுவார்கள் என அவரை எச்சரிப்பார். ஆனால் என்னுடைய தந்தைக்கு அவர் மீது தனியான மதிப்பு உண்டு. நானாவளிக்கு ஹெர்னியா என்ற வியாதி உண்டு. அது மிகப் பெரிதாகி பூமியைத் தொட்டுக் கொண்டு இருந்தாலும் அப்படியே அவர் நடப்பார். சில நேரத்தில் தன்னுடைய பின்புறத்தில் நீண்ட துணியை வால்போல் கட்டிக் கொண்டு குரங்கு போலக் குதிப்பார். அவரைக் கண்டால் அந்த ஊர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அவரைத் துரத்துவார்கள். சில சமயத்தில் அவர் பாபாவிடம் ஓடி வந்து தன்னை அந்த குழந்தைகளிடம் இருந்து காப்பாற்றுமாறு வேண்டுவார்.அதைப் பார்க்கும்என்னுடைய தந்தைக்கு ஒரே வியப்பாக இருக்கும். அவ்வளவு பெரியதாக உள்ள ஹெர்னியாவுடன் அவரால் எப்படி அத்தனை வேகமாக ஓட முடிகின்றது? நானாவளி என்னுடைய தந்தையிடம் வந்து உணவு கேட்பார், அவரும் சாப்பாட்டு அறைக்குச் சென்று அவருக்கு தேவையான அளவு உணவை எடுத்து வந்து தருவார். என்னுடைய தந்தை அவரையும் பாபாவையும் ராமர் மற்றும் ஹனுமான் என்ற இரட்டை உருவம் எனக் கருதினார். ஒருமுறை நானாவளி பாபாவிடம் சென்று தான் அவருடைய ஆசனத்தில் அமர்ந்து கொள்ளட்டுமா எனக் கேட்க பாபாவும் இருக்கையை விட்டு எழுந்து அவரை அங்கு அமரச் சொன்னார் . பாபாவின் இருக்கையில் அமர்ந்த நானாவளியும், பாபாவிடம் தனக்கு அந்த இடம் சரிபட்டு வரவில்லை எனவும், பாபாவின் வலது கால்புறத்தின் அடியில் உள்ள இடமே தனக்கு சரியாக உள்ளது எனவும் கூறினாராம். அந்த சம்பவத்தின் மூலம் பாபாவிடம் அவருடைய இருக்கையில் அமர இடம் கேட்கும் அளவுக்கு நானாவளிக்கு இருந்த தைரியத்தையும், அவரிடம் எந்த அளவு அன்பு இருந்திருந்தால் அவருக்கு பாபா எழுந்து தன்னுடைய இருக்கை தந்து இருப்பார் என்ற கருணையையும் கண்டு வியந்தார்.
ஒருமுறை நானாவளி என்னுடைய தந்தையை சாவடி என்ற இடத்துக்கு தன்னுடன் வருமாறும், தான் சிலவற்றை அவருக்கு காட்டுவதாகவும் கூறி அங்கு அவரை அழைத்துச் சென்றார்। சாவடி என்பது துவாரகாமாயியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. பாபா அப்போது அங்கு தங்கி இருந்தார். அங்கு சென்றதும் நானாவளி தன உருவை சிறிய பாட்டலில் புகக் கூடிய அளவில் மிகச் சிறியதாக ஆகிக் கொண்டு கூரை மீது கட்டப் பட்டு இருந்த பாட்டலின் மீது குரங்கு போல பாய்ந்து சென்று அமர்ந்தார். அங்கு அமர்ந்து கொண்டு என் தந்தையை பரிகாசம் செய்தார். என் தந்தைக்கு ஒரே வியப்பு. எப்படி அவரால் தன் உடம்பை அத்தனை சிறியதாக்கிக் கொள்ள முடிந்தது, என்ன அதிசயம் அது எனப் புரியவில்லை.
பின்னர்தான் என் தந்தைக்குப் புரிந்தது அவர் ஹனுமானின் அவதாரம், மற்றும் பாபாவும் ராமரின் அவதாரம். அதனால்தான் அவரை பாபா மிகவும் அன்பு கொண்டு நேசித்து தன்னிடம் வைத்துக் கொண்டு உள்ளார்.பாபா சமாதி அடைந்த பதிமூன்றாம் நாளே மிகவும் துக்கத்தில் இருந்த நானாவளியும் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி லேந்தி பாகின் கிழக்கு புற வாசலில் உள்ளது. நான் எப்போது அங்கு சென்றாலும் அவருடைய சமாதிக்கும் சென்று வணங்குவது உண்டு.
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .
Click On Link Below To Read.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
9.Live Experience Of Tarkhad Family Chapter 9.
10.Live Experience Of Tarkhad Family Chapter 10.
11. Live Experience Of Tarkhad Family Chapter 11.
12. Live Experience Of Tarkhad Family Chapter 12.
13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.
14. Live Experience of Tarkhad Family-Chapter 14.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
9.Live Experience Of Tarkhad Family Chapter 9.
10.Live Experience Of Tarkhad Family Chapter 10.
11. Live Experience Of Tarkhad Family Chapter 11.
12. Live Experience Of Tarkhad Family Chapter 12.
13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.
14. Live Experience of Tarkhad Family-Chapter 14.
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment