Sunday, April 4, 2010

Sai Visited Us-Experience By Ashalatha .


அன்பானவர்களே
சாயிபாபாவின் லீலைகள் புரிந்து கொள்ள முடியாதவை. அவர் பரபிரும்மன். அவர் காட்டும் லீலைகளினால் அவர் மீது பக்தர்கள் அதிக அளவில் நம்பிக்கை, அன்பு கொண்டு அவரை துதிக்கின்றார்கள். சாயி பக்தையான சகோதரி ராசலதாவின் அனுபவத்தைப் படியுங்கள்
மனிஷா

ராசலதாவின் அனுபவங்கள்
எனக்கு சாயியின் பல அற்புதங்கள் நிகழ்ந்து உள்ளன .அவற்றில் ஒன்று Miracle of Sai umbrellaa மற்றது Total acceptance of heart felt prayer. இப்போது எழுதப் போவது இன்னொன்று.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு நாள் நான் சாயிபாபா ஆலயத்துக்கு அருகில் இருந்த கடைக்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு வந்த என்னுடைய நண்பர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்திருந்த தனது பெற்றோர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களிடம் இவள் சாயி பக்தை எனக் கூற அவர்களும் தாம் சமீபத்தில்தான் சீரடிக்கு சென்று விட்டு வந்ததாகக் கூறி உடியையும் சாயிபாபாவின் ஒரு படத்தையும் தந்தனர். நான் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். அவர்களை என் வீட்டுக்கு ஒரு நாள் வருமாறு அழைத்தேன். நவம்பர் முப்பதாம் தேதியன்று என்னுடைய அடுத்த வீட்டு நண்பர் வீட்டில் ஒரு விசேஷத்துக்கு சென்று இருந்தேன். அப்போது அவர்களும் அங்கு வந்திருந்தனர்.

அந்த விழா முடிந்ததும் என்னுடைய வீட்டுக்கும் வர இருந்தனராம். நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடைய கையை பிடித்துக் கொண்ட மாமி வா, உன் வீட்டுக்குப் போகலாம் என்றாள். நான் என்னுடைய கணவரை வீட்டின் கதவை திறக்குமாறு கூறி, என் மகனை செருப்பை போட்டுக்கொள்ளச் சொன்னேன். அந்த மாமியை அவளுடைய மகளையும் அழைத்து வருமாறு கூறுமுன் அவள் கிளம்பி என் வீடாய் நோக்கிச் சென்று விட்டாள். நான் என்னுடைய மகனுடன் வீட்டுக்கு உள்ளே நுழையும் முன்பே அந்த மாமி என்னுடைய கணவருடன் படிக்கட்டின் வழியாக மேலே ஏறி வீட்டுக்குள் நுழைந்து விட்டாள். உள்ளே நுழைந்தவள் சாயி எங்கே எனக் கேட்டாள். அது வைத்துள்ள இடத்தைப் பார்த்ததும், ''சாயி உன்னுடைய வீட்டில் நன்றாக அமர்ந்து உள்ளார். ஒரு விஷயம் கூறட்டுமா? நான் இரண்டு நாட்களாக ஆரத்தி படிக்கும்போது உன்னுடைய முகமே என் முன் வந்தது. அது மட்டும் அல்ல சாயி எனக்கு தென்படாத வகையில் இருந்தவாறு, அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று என்னைப் பார் எனக் குரல் தந்தார். அதனால் என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு என் மகளிடம் கேட்கும் முன்பே இந்த விழாவில் நாம் சந்தித்துக் கொண்டு விட்டோம்'' என்றாள். அவர்கள் சாயியின் பரம பக்தர்களாம். சாயி அமர்ந்து இருந்த குடையைப் பார்த்துவிட்டு அதைப் போல ஒன்றை தான் இந்தியாவுக்குச் சென்றதும் வாங்கிக்கொள்ள உள்ளதாகக் கூறினாள்.

நான் மனதில் நினைத்துக் கொண்டேன் ' சாயி நீதான் மாமியின் உருவில் வந்தது உண்மை என்றாள் அதற்கு ஆதாரம் காட்டு'. அடுத்த நாள் தனக்கு வந்த ஒரு கனவு பற்றி பக்கத்து வீட்டுக்காரி கூறினாள். அவளுக்கு கனவில் மோட்ஷத்தை காண சந்தர்ப்பம் கிடைத்ததாம். அவள் அது போன்ற ஒரு அற்புதமான கடவுள் வாழும் உலகை அது வரை கண்டது இல்லையாம். அதைக் கேட்ட நான் மனதில் நினைத்தேன் ' சாயி எனக்கு மோட்ஷத்தைக் காண சந்தர்பம் கிடைக்கவில்லை என்றாலும் இன்று உன்னுடைய தரிசனம் கிடைத்தால் அதையே மோட்க்ஷமாகக் கருதுவேன்.'

சாயி கருணைமிக்கவர். அன்று எனக்கு கனவு. கனவில் சாயி பெரிய உருவில் கருப்பு நிற சிலையாக நடு சாலையில் உள்ளார். ஆலயத்தில் இல்லாமல் ஏன் நடுத் தெருவில் உள்ளார் எனக் கேட்க அங்கிருந்த ஒருவர் கூறினார், அவர் இருந்த ஆலயத்தை இடித்து விட்டார்கள் என்றும் அதனால்தான் அவரை தன்னுடனேயே இருக்க அழைத்துச் செல்வதாகவும் கூறி அவர் நெற்றியில் சந்தனத்தை அரைத்து இட்டவண்ணம் இருந்தார். நான் சாயி, சாயி எனக் கத்திக் கொண்டே அவர் அருகில் ஓடினேன். அவர் உதடுகள் அசைந்தன. சாயி என்னுடன் பேச ஆரம்பித்தார்.
அதற்கு முன் ஒரு சிறு செய்தி. என்னுடைய பக்கத்து வீட்டு நண்பரின் தங்கையுடன் சாயி கனவில் பேசியவர் 'உனக்கு மகன் வேண்டுமா' கேட்டு விட்டு பல பெயர்களைக் கூறினாராம். மறுநாள் எழுந்தவள் தான் கரு தரித்து உள்ளதைப் போல உணர்ந்து, மருத்துவ சோதனைக்கு செல்ல முடிவு செய்தாளாம். எனக்கு ஒரு கனவில் சாயி கூறி இருந்தார், ' திருமணம் ஆகிவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இப்போது குழந்தை பிறக்க உள்ளது' . நான் அதை அவர்களிடம் கூறட்டுமா என அவரிடம் சீட்டு போட்டுப் பார்த்தபோது கூறு என பதில் வந்ததினால் அவளிடம் நான் அதைக் கூற அவள் தனது கனவை பற்றி என்னிடம் கூறினாள்.
அது போல கருப்பு நிறத்தில் தோன்றி என் கனவில் பேசிய சாயி ''நான்தான் அந்த மாமியின் உருவில் உன் வீட்டுக்கு வந்தேன் '' என்றார். அதைக் கேட்ட தூக்கத்தில் இருந்த நான் படுக்கையில் இருந்து கீழே விழுந்து விட்டேன். விடியற்காலை ஆறு மணி. மிக அதிக அளவில் சாயி பற்றிய எண்ணத்தை மனதில் வைத்துள்ளதை உணர்ந்தேன். எனக்கு உடல் நலமில்லை போல இருந்தது. எவருடனும் பேசாமல் அமார்ந்து இருந்தபடி சாயியின் அனுபவங்களை நினைத்து பேரானத்த நிலை அடைந்த மனதோடு அமர்ந்து இருந்தேன். அந்த மாமி வந்து விட்டுப் போனாள் . அவளுக்கு நான் ஒரு ஆப்பிளை மட்டுமே தந்து அனுப்பினேன். ஐந்தே நிமிடங்கள்தான் அவள் இருந்து விட்டுப் போனாள். வந்தவளே சாயி என்பதாக அவர் தானே கூறுகின்றாரே, அந்த இன்பத்தை என்னவென்று கூற? அந்த கனவில் நான் சாயியிடம் கூறினேன் ' சாயி நான் உன்னுடைய கருப்பு வண்ண சிலையை எந்த ஆலயத்திலும் இதுவரை கண்டது இல்லையே' .அடுத்த வியாழன் கிழமை பூஜையை முடித்துவிட்டு கம்ப்யூட்டரில் இண்டர்நெட்டை திறந்தேன். எனக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது. ஹேடல் படேல்ஜி என்பவள் ஒரு ஆலயத்தில் இருந்த ஒரு கருப்பு வண்ண சாயி சிலை படத்தை அனுப்பி இருந்தாள். அப்படிப்பட்ட ஒன்றை நான் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஹேடல் படேல்ஜிக்கு நன்றி கூறினேன்.

உண்மையில் நான் இவற்றைப் பற்றி எழுத விரும்பவில்லை. என்னை சாயிதான் எழுத வைத்துவிட்டார். அன்று நான் ராம நவமி மற்றும் உர்ஸ் ஊர்வலத்தைப் பற்றி படிக்கத் துவங்கினேன். கண்களில் அரிப்பு எடுக்க கண்களை துடைத்துக் கொண்டேன். கண்களில் ஒரே எரிச்சல். மகதத்தை கழுவினேன். நான் சமையலுக்கு சிவப்பு மிளகாய் அரைத்த கையோடு கையை அலம்பாமல் வந்து அதை படித்துக் கொண்டு இருந்துள்ளேன். மிளகாய் பொடி கண்களில் சென்று எரிந்துள்ளது. நான் அப்போது படித்துக் கொண்டு இருந்த பகுதியில் பாபாவின் கண்களில் ராமநவமியன்று விழுந்த மிளகை பொடி பற்றிய செய்தி இருந்தது. அதை நான் என்னவென்று கூற?
(Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.