He Saw Baba In Glass.
நாயக் என்பவரும் சாந்தாராம் என்பவரும் நண்பர்கள். சாந்தாராம் பெரும் குடிகாரன். அவனால் மது இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது. அவர்கள் ஒருமுறை சீரடிக்கு சென்றபோதுஅங்கு ஆறு நாட்கள் இருந்தனர். அதற்குப் பிறகு அவன் மதுவைத் தொடவே இல்லை.
நயாக்கிற்கு சோனார் என்ற இன்னொரு நண்பன் இருந்தான். அவனுடைய மகனும் குடிகாரன். மருத்துவர்கள் மதுவின் கொடுமையை எத்தனை எடுத்துக் கூறியும் அவனால் மது அருந்துவதை நிறுத்த முடியவில்லை. அவன் நாயக்கிடம் அதை நிறுத்துவதற்கான வழி கேட்டபோது நாயக் அவனை சீரடிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். அவனும் தன மகனை சீரடிக்கு அழைத்துச் சென்று பாபாவை வணங்கினர். வழியில் குடித்துக் கொண்டே இருந்த மகன் வாந்தி எடுக்கத் துவங்கி சீரடிக்குச் சென்றதும் மது மீது வெறுப்பு அடைந்தான். நான்கு நாட்கள் அங்கு இருந்தவன் மதுவையே மறந்து விட்டான்.
பத்ரபாத் மாதத்தில் கௌரி பூஜை நடந்தது. அப்போது அவர்கள் அங்கு இருந்தனர். விழாவின் முடிவில் அனைவரும் மது அருந்தினர். ஆனால் சோனாருடைய மகன் குடிக்க மறுத்தாலும் அவனுடைய நண்பர்கள் அவனை கட்டாயப்படுத்தினர் . அவன் கையில் திணித்த மதுக் கோப்பையில் பாபாவின் உருவைக் கண்டான். ஆனாலும் அவர்கள் விடவில்லை. அவனை கட்டாயப் படுத்கி குடிக்க வைத்தனர். மது அருந்தியவன் மயக்கம் அடைந்து விழுந்தான். அவனுக்கு தன்னுடைய உடல் நெருப்புப் போல எரிவது போல உணர்ந்தான். அதன் பின் அவன் எவர் கூறியும் மது அருந்த மாட்டேன் என திடமாக இருந்து விட்டான்.
(Translated into Tamil by Santhipriya )
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment