Tuesday, April 13, 2010

Shibpur Shirdi Sai Baba Temple-100 Years Old Temple-West Bengal.

1850 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நதியா மாவட்டத்தில் உள்ள சிப்பபூர் என்ற ஊரில் இருந்த ராமதாஸ் பிஸ்வாஸ் என்ற பணக்கார விவசாயி பூஜைகளை செய்யவேண்டும் என்பதற்காக தன்னுடைய நிலத்தில் எவரிடமும் இருந்தும் நன்கொடைகளை பெற்றுக் கொள்ளாமல் தானாகவே ஒரு ஆலயத்தை அமைத்துக் கொண்டார். ஆனால் அவர் கட்டிக் கொண்ட ஆலயத்தில் பாபாவின் சிலை இருந்ததா என்ற விவரம் கிடைக்கவில்லை. அந்த ஆலயத்தில் நடைபெற்று வந்த பூஜைகள் 1920 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு விட்டன. அதற்கான காரணமும் தெரியவில்லை. காலப் போக்கில் அந்த ஆலய இடம் புதர் போன்று ஆகியது. பாம்புகள் வாழும் இடமாக மாறி , சிலந்தி வலைகளும் அதை சுற்றி வளைத்தன.அனைவரும் அதன் அருகில் செல்லவே பயந்தனர்.
1992 ஆம் ஆண்டு மழைக் காலம் முடிந்து மழை ஓய்ந்தது . அப்போதுதான் அங்கு ஒரு வேப்ப மரம் வளர்வதைக் கண்டனர். அந்த வேப்ப மரம் வளரத் துவங்கியதும் அங்கு வாசம் செய்தது வந்த பாம்புகள் அனைத்தும் வெளியேறி விட்டன. மெல்ல மெல்ல கிராமத்தினர் அந்த இடத்தை சுத்தம் செய்து, ஆலயத்துக்குள் செல்லும் வழியையும் சரி செய்தனர். அந்த ஆலயத்தை சுற்றி இருந்த இடம் குழந்தைகள் விளையாடும் இடம் ஆயிற்று.
1918 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்த சாயி பாபா 1999 ஆம் ஆண்டு ராமதாஸ் பிஸ்வாசின் கொள்ளு பேரனான அமித் பிஸ்வாசின் கனவில் தோன்றி முன்னர் அவருடைய பாட்டனார் அங்கு உள்ள வேப்ப மரத்தின் பக்கத்தில் உள்ள ஆலயத்தில் நூறு வருடத்துக்கு முன்னர் தன்னை வழிபட்டு வந்ததாகவும் , பல மணி நேரம் அங்கு அமர்ந்துகொண்டு தன்னை வணங்கி வந்தவருடைய காலத்துக்குப் பின் அதை அனைவரும் மறந்து விட்டதாகவும், தான்தான் அங்குள்ள தீய சக்திகளை அழிக்க அங்கு ஒரு வேப்ப மரத்தை நட்டு உள்ளதாகவும், அந்த ஆலயத்தில் வழிபாடுகளை துவக்குமாறும், அதனால் அங்கு வந்து வழிபடுகின்றவர்களுடைய வேண்டுகோட்கள் நிறைவேறும் எனவும் கூறினார். மறுநாள் தூங்கி எழுந்தவர் அந்த ஆலயத்துக்குச் சென்று அதை சுத்தப்படுத்தி பாபாவின் ஒரு உருவச் சிலையையும் பிரதிஷ்டை செய்தார். அவருடைய கனவைப் பற்றி கேட்டறிந்த கிராமத்தினரும் அன்று முதல் தமது மன பயத்தை விட்டுவிட்டு அங்கு சென்று வணங்கி பூஜைகள் செய்யத் துவங்கினர்.
அதன் பிறகு சில அதிசயச் செயல்கள் நடந்தன. உனக்கு குழந்தையே பிறக்காது என டாக்டர்கள் கூறி இருந்த ஒரு பெண்மணிக்கு பன்னிரண்டு வருடத்திற்குப் பின் குழந்தை பிறந்தது. பலருக்கும் தீராமல் இருந்த பல விதமான வியாதிகள் தீர்ந்தன. அதை எல்லாம் கண்ட மக்களுக்கு அந்த ஆலயத்தின் மீது இருந்த நம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது.
அந்த கிராமத்தினர் வேண்டுகோளை ஏற்று நதியா - சிப்பபூர் சாயி சத்குரு சமிதி என்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் ஆலயத்தை புதியதாக கட்டவும் சமூக நலன்களுக்கு பாடுபடுவதாகவும் சபதம் ஏற்றனர். போதைப் பொருட்கள் அருந்துதல், வரதட்ஷனை கொடுமைகள், குழந்தைகள் திருமணம், போன்றவற்றின் கொடுமைகளை எடுத்துக் கூறி மக்களுக்கு அறிவுரைகளை செய்தனர். சுபீர் பால் என்ற சிற்பி அற்புதமான சாயிபாபாவின் சிலையை வடிவமைத்துத் தந்தார். அது போன்ற சிலையை தான் அதுவரை செய்தது இல்லை என பெருமைபட்டார்.
ஆலயத்தில் தினசரி பூஜைகள், பஜனைகள் போன்றவை நடைபெறத் துவங்கின. ஏப்ரல் மாதத்தில் ஐந்து நாட்கள் சாயிபாபா பண்டிகை கொண்டாடப் படுகின்றது. . உணவையே பிரசாதமாக தருகின்றனர். அதை இரண்டு மிகவும் பின் தங்கிய வகுப்பினரை சேர்ந்தவர்களைக் கொண்டு அனைவருக்கும் பிரசாதமாக தருவதின் மூலம் தீண்டாமையை ஒழிப்பதில் தமது பங்கை தருகின்றனர். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற வகையில் அனைவரும் பழகுகின்றனர்.
நதியா- சிப்பபூர் சாயி சத்குரு சமிதி கமிட்டி உறுப்பினர்கள்
திருவாளர்கள் :
அமித் குமார் பிஸ்வாஸ்
ப்ரோபாத் ஜோர்கர்
ஸ்வபன் குமார் பிஸ்வாஸ்
சுஜாய் மண்டல்
தூலன் சர்கார்
தரீத் பால்
சாந்தி கோபால் மண்டல்
ரிட்ஸ் பிஸ்வாஸ் போன்றவர்கள்
அந்த குழுவினர் கிராமத்தில் உள்ள அறியாமையை விலக்கி, மூட நம்பிக்கைகளை ஒழித்து, தீண்டாமையை அழித்து, சாயி பக்தர்கள் என்பதை நிலை நாட்ட முயலுகின்றனர். வயதானவர்களுக்கும், நலிவுட்ற சமுதாயாத்தினருக்கும் இலவச மருத்துவம் தருகின்றனர். கிராம மக்கள் பயன் படுத்தும் கால்நடைகளுக்கு வரும் பிணியைத் தீர்க்கவும் மருத்துவ வசதி செய்கின்றனர்.
ஆலயம் செல்லும் வழி
'சியால்தா' என்ற இடத்தில் இருந்து பாசின்ஜர் ரயிலில் 'பிதுவாதாஹாரி' என்ற இடம் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் பிடித்து சிப்பபூர் சாயி ஆலயம் செல்லலாம். இல்லை எனில் கிருஷ்ணா நகரில் இருந்து ஹதீசாலா என்ற இடம் செல்லும் பஸ்ஸில் சென்றும் அந்த ஆலயத்தில் இறங்கலாம்.
அணுகவேண்டிய முகவரி:
Chairman / Secretary
NADIA SHIBPUR SAI SADGURU SAMITY
Regd. No S/1L/45375,West Bengal Act XXVI 1961

City offi:K.C.Lahiri Lane,Chasapara,P.O.Krishnanagar,Dist.-Nadia, West Bengal(India) 741101

Mandir: Vill. & P.O. Shibpur, P.S. Nakashipara, Dist. -Nadia, West Bengal (India) Pin-741191

Email address: shibpursaibaba@gmail.

Mob. No.-9434110881 / 9333120111
(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.