Tuesday, April 27, 2010

Grace On Shibpur Sai Baba Temple .

அன்பானவர்களே
சிப்பூர் என்ற இடத்து ஆலயத்தைப் பற்றிய மேலும் சில செய்திகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அது நூறு வருடத்துக்கு முற்பட்ட ஆலயம். முதலில் வெளியாகி உள்ள அந்த ஆலயத்தைப் பற்றிய செய்தியை படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து அவற்றைப் படிக்கலாம். இன்று வெளியாகும் சிப்பூர் ஆலய விவரங்களை சாயியின் பக்தரான பிஸ்வநாத் பானேர்ஜி என்பவர் அனுப்பி உள்ளார்.
மனிஷா

சிப்பூர் ஆலயம் பற்றிய செய்திகள்: பிஸ்வநாத் பானேர்ஜி
மேற்கு வங்காளத்தில் நதியா மாவட்டத்தில் உள்ளது சிப்பூர் ஆலயம். அங்கு உள்ள பாபா சீரடியில் உள்ள பாபாவைப் போலவே தேஜஸ்சாக அமர்ந்து உள்ளார் என்றே எனக்குத் தோன்றுவது உண்டு. காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேர ஆரத்திகள் தவறாமல் நடைபெறும். மாலை ஆரத்தி மூன்று மணி நேரம் நடைபெறும். உள்ளூரில் உள்ள விவசாயிகள் அந்த ஆரத்திக்கு தவறாமல் வருவது உண்டாம். நான் அங்கு இருந்த போது ஒரு நாயும் அங்கு தவறாமல் ஆரத்திக்கு வருவதைக் கண்டு உள்ளேன். அந்த நாய் ஆரத்திக்கு வாராமல் இருந்தது இல்லையாம்.

அந்த ஆரத்தியை விடியோ படம் எடுத்து வைத்து கொள்ள விரும்பினேன். அனால் உள் மனமோ அதை தடுத்தது. ஆனாலும் அதை மீறி நான் ஆரத்தியை விடியோ படம் எடுத்துக் கொண்டேன். அதனால் ஆரத்தியில் மனதை லயிக்கவில்லை.
வீட்டுக்குச் சென்று வீடியோ எப்படி வந்துள்ளது எனப் போட்டுப் பார்த்தேன். அதில் ஒன்றுமே ரெகார்டிங் ஆகியிருக்கவில்லை. என் மனது துன்பம் அடைந்தது. பாபாவின் அனுமதியைப் பெறாமல் எடுத்ததினால் அது வரவில்லையோ என யோசித்தேன். ஆகவே மீண்டும் மறுநாள் காகட ஆரத்திக்கு சென்று மனதார பாபாவை படம் எடுக்க அனுமதி கேட்டேன். அவர் புன்முறுவல் செய்தது போல இருந்தது. ஆரத்தியை வீடியோ எடுத்தேன். வீடியோ அற்புதமாக வந்து இருந்தது. அப்போதுதான் அவருடைய அனுமதி இன்றி இந்த உலகில் அணுவும் அசையாது எனபதே உண்மை என்பதை உணர்ந்தேன்.

நான் அங்கு சென்றபோது பாபா நிகழ்த்தி உள்ள பல அற்புதங்களைப் பற்றிக் கேட்டு அறிந்தேன். அந்த அற்புதங்களைப் பெற்ற கிராமத்தினரை பேட்டி கண்டேன். அதில் சில கீழே தரப்பட்டு உள்ளது.

(1) 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். PWD இஞ்சினியர் ஒருவர் தனது மனைவியுடன் அந்த ஊருக்கு வந்திருந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகி இருந்தன. குழந்தைகள் இல்லை. பல மருத்துவரிடமும் சென்றனர். பலன் இல்லை . அந்த ஊரில் இருந்த சாயி பாபாவின் படத்தைப் பார்த்துவிட்டு அங்கு சாயி ஆலயம் இருந்தால் சென்று விட்டு வரலாம் என ஆசைப்பட்டு கிளம்பினார்கள். அவர்கள் வழியில் ஆலய பிரசிடேன்டான அமீத் பிஸ்வாஸை சந்தித்து உள்ளனர் .

அவர் அவர்களை அந்த பாபாவின் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று பூஜைகளை செய்வித்தார். ஆலயத்தில் பாபாவின் முன்னால் அந்தப் பெண்மணி துக்கம் தாங்காமல் கதறி அழுதாள். என்ன ஆச்சர்யம். அந்த ஆலயத்துக்கு வந்து சென்ற அடுத்த ஆண்டே அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

(2) குட்டு குறுங் மற்றும் சைனா குறுங் என்பவர்கள் நேபாளத்தில் இருந்து அங்கு வந்தவர்கள். அவர்கள் அந்த ஊரில் காவலாளியாக வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக நான்கு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டனவாம். அவளுக்கு கர்பப்பையில் கோளாறு உள்ளதினால் குழந்தையை அது சுமக்க முடியாமல் ஆகின்றது என மருத்துவர் கூறிவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள வேலூருக்கும் சென்று சிகிச்சைப் பெற்று வந்தனர். எந்தப் பலனும் இல்லை. ஆனால் எவரோ கூறியதின் பெயரில் சிப்பூர் ஆலயத்துக்கு வந்து பூஜை செய்து பாபாவை வேண்டிக் கொள்ள அவர்களுக்கு அந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

(3) ஒரு முறை அந்த ஆலய பூசாரியின் மகளின் முகத்தில் கரும் புள்ளிகள் வந்து கீழ் பகுதி முகம் கருப்பாகி அசிங்கமாகி விட்டது. அவர் சற்றும் கவலைப்படவில்லை. நம்பிக்கையுடன் பாபாவின் உடியை எடுத்து வந்து அவள் முகத்தில் தடவி வரலானார். ஏழே நாளில் முகம் மீண்டும் பழைய பொலிவு பெற்று கருநிறம் முற்றிலும் மறைந்ததாம்.

(4) பதினாலு ஆண்டுகளாக குழந்தை இல்லாது இருந்த தம்பதிகள் ஒருவர் அங்கு வந்து பூஜை செய்ய அவர்களுக்கு குழந்தை பிறந்ததாம்.
(5) ஒரு முறை ஒரு பக்தர் அந்த ஆலயத்துக்கு வந்தார். தாங்க முடியாத வயிற்று வலி அவருக்கு. ஆலயத்தில் அமரக் கூட முடியாமல் தவித்தவர், பாபாவின் உடியை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தார். என்ன ஆச்சர்யம் அடுத்த சில நிமிடங்களில் வயிற்று வலி மறைந்து நலமடைந்தார். அது முதல் இன்று வரை அவருக்கு வயிற்று வலியே வரவில்லையாம்.

(6) கோபிநாதபுரை சேர்ந்த பாபாவின் பக்தர் ஒருவர் வாத நோயினால் அவதிப்பட்டார். அவரால் நடக்க முடியாது. ஆனால் மிகவும் சிரமப்பட்டு அவர் சிப்பூர் ஆலயத்துக்கு வந்து பாபாவை வணங்கிச் சென்றார். மெல்ல மெல்ல அவரது வாத நோய் மறைந்தது. தற்போது அவரால் மற்றவர்களைப் போல நடக்க மட்டும் அல்ல ஓடவும் முடிகின்றது என்பது அதிசயம் அல்லவா?

(7) சுனில்தாஸ் என்ற பக்தரின் பிறந்து பதினாறு நாள் ஆன மகன் ஒரு நாள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டான். மூன்று நாட்கள் ஆயின. சாப்பிட முடியாமல் அழத் துவங்கினான். என்ன மருத்துவம் செய்தும் அழுகையும் நிற்கவில்லை. வேறு வழி தெரியாமல் அந்த ஆலயத்துக்கு அவனை கொண்டு வந்து பாபா முன் கிடத்தினார்கள். பூசாரி பாபாவின் உடியை எடுத்துவந்து அவன் நெற்றியில் தடவினார். அடுத்த சில நிமிடங்களில் அழுகை நின்றது. அனைவர் முன்பும் சாதாரணக் குழந்தைப் போல ஒரு பாட்டில் பாலையும் குடித்தான். சிரிக்கத் துவங்கினான்.

(8) தரித் பால் என்பவர் பாபாவின் நெடு நாளைய பக்தர். அவர் மகளுக்கு ஒரு முறை முகம் திடீரென கோணலாகி விட்டது ( பாரலிசிஸ் என்ற வியாதி ) . என்ன வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. ஆகவே அவர் அந்த ஆலயத்துக்கு அவளை தினமும் அழைத்து வந்து பாபாவின் உடியை அவள் முகத்தில் பூசி வரலானார். மெல்ல மெல்ல அவளுடைய முகம் சாதாரண நிலையை அடைந்தது. மருத்துவர்களால் குணமாக்க முடியாததை அந்த ஆலயத்தின் மகிமை குணமாக்கி உள்ளது.

(9) பல வருடங்களாக திருமணம் ஆகாத அந்த கிராமத்துப் பெண்கள் பலருக்கும் அந்த ஆலயத்தில் பூஜை செய்தப் பின் திருமணம் நடந்து உள்ளது.

(10) கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாலாய் கோஷ் என்பவர். அவர் வறுமையில் வாடினார். சாப்பிடக் கூட வழி இல்லாமல் திண்டாடினார். வேலைக் கூட கிடைக்கவில்லை. ஒரு நாள் அவருக்கு உள் மனதில் ஒரு குரல் கூறியது. ''பாபாவின் அந்த ஆலயத்துக்கு ஐநூறு ரூபாய் தந்தால் அனைத்துக் கஷ்டங்களும் விலகிவிடும்.'' அவனிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கள் மட்டுமே.
வேறு வழி தெரியவில்லை.
சைக்கிளை விற்றுவிட்டு ஆலயத்துக்குச் சென்று ஐநூறு ரூபாயை தட்ஷனையாகப் போட்டு விட்டு வந்து விட்டார். அடுத்த ஏழாவது நாள் பாலாய்யின் வெகு தூரத்து உறவினர் ஒருவர் அங்கு வந்தார். வந்தவர் பாலாய்யை தன்னுடைய வியாபராத்தில் பங்காளியாக சேர்ந்து கொள்ளுமாறும் மூலதனம் எதுவும் அவர் போட வேண்டியது இல்லை எனவும் தனக்கு வியாபாரத்தில் உதவினால் போதும் எனவும் கூறி அவரை பங்காளியாகச் சேர்த்துக் கொண்டார். ஒரே வருடத்தில் பாலாய்யிற்கு ஐந்து லட்ஷ ரூபாய் லாபம் கிடைத்தது. பாபாவின் அந்த மகிமையை என்ன என்று கூறுவது?

(11) அந்த ஆலயத்தினருகில் வசிக்கும் பல பக்தர்கள் நடு இரவில் அங்குள்ள வேப்ப மரம் மற்றும் ஆலயத்தின் மேல் பகுதியில் ஒளி மிக்க உருண்டை வடிவான பொருள் பறந்து வந்து சிறிது நேரம் இருந்தப் பின் மறைந்துள்ளதை தாம் கண்டுள்ளதாகக் கூறினார்கள் .

(12) அந்த ஆலயத்தின் பிரசிடென்ட் அமித் பிஸ்வாஸ் ஒரு முறை கிர்தன் நடந்து கொண்டு இருந்தபோது ஆலயத்துக்கு வெளியில் கீர்த்தனைகளின் கானத்துக்கு ஏற்ப பாபா குர்தா, வேஷ்டி மற்றும் காபினியை போட்டுக் கொண்டு நடனமாடிக் கொண்டு இருந்ததைக் கண்டார். கீர்த்தனை முடிந்ததும் நடனமாடிக் கொண்டு இருந்த பாபாவும் மறைந்து விட்டாராம்.

(13) ஒரு முறை ஒரு திருமணமான பெண்மணி தன்னுடைய கணவர் அடுத்த வீட்டுப் பெண்ணுடன் தகாத காதல் கொண்டு இருந்ததைக் கண்டுள்ளால். அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. அவளை உதறி விட்டுச் செல்லவும் முடிவு எடுத்துவிட்டான் அவள் கணவன். அவள் சிப்பூர் ஆலய பாபாவிடம் தன்னுடைய கணவன் திருந்தி தன்னிடம் வந்துவிட்டால் அவருக்கு பாயசம் செய்து தருவதாக வேண்டிக் கொண்டாள். என்ன அதிசயம். அவள் கணவன் திடீரென அடுத்த வீட்டு பெண்ணின் உறவை துண்டித்துக் கொண்டான் . தற்போது தன் மனைவியுடன் நலமாக வாழ்கிறான்.

(14) பக்தர்களின் காணிக்கைகளைக் கொண்டே ஆலயம் விரிவாக்கப் படுகின்றது. ரமணி என்பவர் ஆலயம் கட்டப் படத் துவங்கியபோது பெருமளவு நன்கொடை தந்தார். அதன் பின் ஒரு முறை அவசரமாக மேல் கூரை அடுத்த நாள் போட ஐந்தாயிரம் ரூபாய் தேவையாக இருந்தது. பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் துபாயில் இருந்து ஒருவர் தமது குடும்பத்துடன் அங்கு தரிசனம் செய்ய வந்தார். அந்த ஆலயம் பற்றி கல்கத்தாவில் தனது நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டாராம். ஆலயப் பணிக்காக 5001 ரூபாய்க்கு காசோலை தந்துவிட்டுச் சென்றார். பாபா இருக்கும்போது ஏன் கவலைப்பட வேண்டும் ? அவர் செய்யும் லீலைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது .


(15) ஒரு முறை அந்த ஊரில் இருந்த பசுக்கள் அந்திராக்ஸ் என்ற வியாதியினால் பீடிக்கப்பட்டபோது அவற்றுக்கு உடியை தண்ணீரில் கலந்து தர அந்த நோயில் இருந்து அவை குணம் அடைந்தன. ஆறு வருடங்களாக கன்று போடாமல் இருந்த பசு ஒன்றின் நெற்றியில் பாபாவின் உடியைத் தடவ அது அந்த வருடம் கன்று போட்டதாம்.

(16) ஒவ்வொரு வருடமும் சிப்பூர் ஆலய வருடாந்திர திருவிழாவின்போது சமீர் பட்டச்சார்யா என்பவர் 1௦,000 பேர்களுக்கு சாப்பாடு போடுவார். ஒரு முறை அவர் நோயினால் விழுந்து விட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை ஆக அவரால் அந்த செலவை ஏற்க முடியவில்லை. ஆகவே அந்த வருடம் விழாவை சிறிய அளவில் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில்; ஆலய பிரசிடென்ட் பிஸ்வாஸ் அனைவரிடமும் அவரவர்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்ள பத்தாயிரத்தும் மேல் மக்கள் சாப்பிட்டு விட்டு பிராசாதமும் எடுத்துச் செல்லும் அளவுக்குப் பொருட்கள் வந்து குமிந்தனவாம். எங்கும் நிறைந்துள்ள பாபாவில் லீலைகளைப் புரிந்து கொள்வது கடினமே.

(17) அமித் பிஸ்வாசுக்கு ஒரு முறை கனவு வந்ததாம். அதில் பாபா வந்து தனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுமாறும் அதற்கான செலவை தான் ஏற்பாடு செய்வதாகவும் கூறினாராம். அந்த கனவில் ஆயிரம் விளக்கு வெளிச்சத்தை விட அதிக பிரகாசம் தந்த அளவில் ஒளி தோன்றியதாம். அதில் இருந்து ஒரு குரல் ''நான்தான் சாயிபாபா பேசுகிறேன் உன்னுடைய பெரும் பாட்டனார் தினமும் பல மணி நேரம் வந்து என்னை இந்த ஆலயத்தில் பூஜை செய்து வணங்கினார். நான் அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் . ஆனால் அவர் மறைந்தப் பின் அனைத்தும் நின்று விட்டது. நான் மீண்டும் இங்கு பூஜைகளை எதிர்பார்த்துக் காத்து உள்ளேன். ஆகவே நீ எனக்கு நான் கூறுபவற்றை (கீழ்கண்டவற்றை ) செய்யவேண்டும்.

(a) தினமும் பூஜைகள் நடக்கும் முறையில் ஆலயம் ஒன்றைக் கட்டு.
(b) இங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் வந்து எவர் நின்றாலும் அவர்கள் நான் இருப்பதை உணர்வார்கள். அவர்களுடைய பாபங்கள் விலகும்.

(c) ஆலயம் கட்டப்படும்போது நானே அங்கு நின்று இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருப்பேன். ஆலயம் கட்டப்படத் துவங்கியப் பின் வேலை தடைபடக் கூடாது.


(d) இங்கு வந்து தூய்மையான மனதுடன் வேண்டுபவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்.
அவற்றைத் தவிர பாபா அவரிடம் அந்தக் கனவில் கூறிய மேலும் பல விஷயங்களை வெளிப்படையாக எவரிடமும் கூறக் கூடாது என்பதினால் அதற்கு மேல் அவர் எதையும் கூற விரும்பவில்லை. இந்த ஆலயம் பாபாவின் நேரடிக் கட்டளைப்படியே கட்டப்பட்டு வந்துள்ளது.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.