Offering To Baba-Experience By Harini.
பாபா எங்கும் நிறைந்தவர். பக்தர்களின் மனதை அறிந்து அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுபவர் என்பதற்கு அடையாளம் ஹரிணியின் இந்த அனுபவம்.
மனிஷாஹரிணியின் அனுபவம்
நேற்று எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. உங்களுடைய இணையதளத்தைப் பார்த்துவிட்டு மடிப்பாக்கத்தில் இருந்த சாயிபாபா ஆலயத்துக்குச் சென்றேன். அந்த ஆலயத்தின் அருகில் இருந்த பூக்கடைக்குச் சென்று ஆலயத்துக்குப் போகும் வழியைக் கேட்டேன். அந்த கடையில் இருந்து ஒரு முழம் சாமந்திப் பூவையும் வாங்கிக் கொண்டேன். அதை ஒரு பையில் வைத்துத் தந்தவள் அதனுடன் சில ரோஜா பூக்களையும் போட்டாள். அதை ஏன் வைக்கின்றாள் என நான் யோசனை செய்து கொண்டு இருக்கையிலேயே அவள் என் கையில் இன்னொரு மஞ்சள் சாமதியை தந்தாள். என் கண்கள் அவள் கடையில் இருந்த அழகான வெள்ளை சாமந்தி மீது இருந்தது. நான் அதை மாற்றித் தருமாறு கேட்கும் முன்பே அவள் நான் வாங்கியவற்றை பையில் வைத்து முடிச்சுப் போட்டு விட்டாள். சரி என அதை எடுத்துக் கொண்டு ஆலயம் சென்றோம்.
ஆலயத்தில் நாமாவளி நடந்து கொண்டு இருந்தது. சுமார் இருபது பேர்கள் அங்கு இருந்தனர். அர்ச்சனையும் நடந்தது. அர்ச்சனைக்கு வைத்து இருந்த பூக்கள் தீர்ந்து விட்ட நேரத்தில் நாங்கள் உள்ளே நுழைந்தோம். பண்டிதர் கையில் பூவை தந்தோம். பூசாரி அர்ச்சனையை நாங்கள் கொண்டு தந்த பூவுடன் மீண்டும் துவக்கினார். பூக்களை பாபாவின் பாதத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்தார். அதைக் கண்டு என் மனதில் இனம் தெரியாத ஆனந்தம் ஏற்பட்டது. அவர் பாதத்தில் நாங்கள் கொண்டு சென்ற பூவைப் போட்டதைக் கண்ட நான் பாபா எப்படி எல்லாம் நம் இதயத்துக்கு ஆறுதல் தருகின்றார் என நினைத்தேன்.

Loading
0 comments:
Post a Comment