Tuesday, April 6, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Bathing of Lord Shiva by Mega.


சாயிபாபாவுக்கு நடந்த அபிஷேகம்

சாயிபாபாவுடன் நெருக்கமாக இருந்துகொண்டு அவருடன் கூடவே இருந்தவர்களில் மெகா என்பவர் ஒருவர் . அவர் பெரும் சிவ பக்தர். அது பாபாவுக்கும் தெரியும். அதனால் பாபாவே அவருக்கு ஒரு சிவ லிங்கத்தைத் தந்து அதை தினமும் பூஜிக்கும்படிக் கூறி இருந்தார். அவருடைய நெருக்கம் எந்த அளவில் பாபாவுடன் இருந்தது என்பதற்கு அடையாளம் அவர் இறந்தவுடன் பாபா அவருடைய சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டதும் இல்லாமல், வழி நெடுக அவருடைய சவத்திற்கு பூமாரிப் பொழிந்து கொண்டே சென்றதும் அவரை எரித்தவுடன் குழந்தைபோல தேம்பி அழுததும் ஆகும் . பாபாவை அவர் சிவனாகவே கருதியதினால் பாபாவின் நெற்றியில் மேகா திருசூலைப் போன்ற திலகத்தை வைப்பதுண்டு . ஒருமுறை சிவராத்தரி அன்று பாபாவுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஆசை மேகாவுக்கு வந்தது. முதலில் அதற்கு பாபா மறுத்தாலும் மேகா மிகவும் வற்புறுத்தியதினால் அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஆகவே தான் அபிஷேகம் செய்யப் போகின்ற தினத்தன்று மேகா தன்னுடைய நண்பர்களையும் அந்த விழாவுக்கு அழைத்து இருந்தார். அதில் என் தந்தையும ஒருவர். அங்கிருந்து பதினோரு மையில் தொலைவில் இருந்த கோதாவரியில் இருந்து நடந்தே சென்று தண்ணீரை குடத்தில் எடுத்துக் கொண்டு மேகா வந்தார். அன்று மதியம் ஆரத்தி முடிந்ததும் அபிஷேகத்திற்கு பாபாவை அழைத்த பொழுது அவர் தன்னைப் போன்ற பரதேசிகள் அதை செய்து கொள்ளக் கூடாது என மறுத்தார். தன் மீது அதை ஊற்றி அபிஷேகம் செய்வதைவிட சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுமாறு பாபா கூறினாலும் அன்று சிவராத்தரி என்பதினால் பாபா அதை தன்னிடம் இருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என மேகா மிகவும் பிடிவாதமாக வற்புறுத்தியதினால் , பாபா அதக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனைப் போட்டார். சிவனுடைய தலையில் இருந்தே கங்கை பாய்ந்ததினால் தன்னுடைய தலைக்கு மட்டுமே அபிஷேகம் செய்ய வேண்டும் என பாபா கூற அதற்கு மேகாவும் ஒப்புக் கொண்டார். தான் தினமும் அமர்ந்து கொண்டு குளிக்கும் கல் மீது அமர்ந்து கொண்டு தலையை சாய்த்தபடி பாபா இருந்தார். மேகா அவருடைய தலையில் தண்ணீரை ஊற்றும்போது உணர்ச்சி வசப்பட்டு அவருடைய உடல் முழுவதிலும் தண்ணீரை ஊற்றிக் கொண்டு ஹரஹர மகாதேவா என கோஷமிட்டார்.
அபிஷேகம் முடிந்தது. என்ன அதிசயம்? தலையைத் தவிர பாபாவின் உடலில் எந்த இடமும் நனையவில்லை. பாபா கூறினார், கங்கை நதி சிவபெருமானின் தலையில் இருந்து மட்டுமே வெளியில் பாய்கிறது அல்லவா ? அதைக் கேட்ட என் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது, பாபா சிவனுடைய அவதாரமே. இல்லை எனில் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றியும் அவர் ஏன் நனையவில்லை? மேலும் தான் விரும்பினால் மட்டுமே அவர் எதையும் ஏற்றுக் கொள்வாரே கொள்வாரே தவிர அவர் விரும்பாததை ஒருவராலும் நிர்பந்திக்க முடியாது. பாபா தன்னுடன் என்ன காரணத்தினாலோ சில விசித்திரமான பெயர் கொண்டவர்களை தன்னுடன் நெருக்கமாக வைத்து இருந்தார். அவர்களில் சிலர் மேகா ( சிவன் என்ற பொருள்) , நானாவளி ( ஹனுமான் என்ற பெயர் தரும்), டாஸ்குணா( வித்தோபா என்ற பெயர் தரும் ). ஒரு ஆரத்தியின் முடிவில் டாஸ்குண மகராஜ் கூறினார் ' என்னக்கு சீரடியே பண்டார்பூர், சாயி பாபாவே வித்தோபா ஆவார்' சில சமயம் பாபா கூறுவாராம், 'நானே லட்சுமி தேவி, இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு நான் பொய் கூற மாட்டேன்.' அவர் தன்னை கடவுள் என என்றுமே கூறிக்கொள்ளவில்லை. தன்னை கடவுளின் தூதுவர் என்றே கூறி வந்தார். ஆனாலும் அவர் கூறியது அனைத்துமே வேத வாக்கு போல பலித்தே வந்தன.
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.


(Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.