Wednesday, April 21, 2010

Sai Baba Comes On His Own-Experience By Manisha Bisht.


அன்பானவர்களே
சாயி சரித்திரித்தில் பாபா எப்படியெல்லாம் தான் போக நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று இருக்கின்றார் என்பதைப் படித்துள்ளோம். அதில் குறிப்பிடத்தக்க கதை சாயி சரித்திரத்தின் ஐம்பதாவது பாகத்தில் வரும் ஹெமட்பந்தின் கதை ஆகும். பாபா மறைந்து பல வருடங்கள் ஆன பின்னும் பல பக்தர்கள் பாபா தம்மைச் சுற்றி இருந்தவாறு தம்மிடம் அன்பு காட்டி வருகின்றார் என்றே நினைகின்றனர். இப்போது நான் எழுதி உள்ள செய்தி சுமார் பதினைந்து ஆண்டு காலம் முன்னர் நடந்தது. அப்போது என்னுடைய குடும்பத்தினர் விடுமுறைக்காக நைனிடால் என்ற இடத்திற்குச் சென்று இருந்தனர். அது மலைப் பிரதேசம் என்பதினால் போகும்போது வாந்தி வராமல் இருக்க மாத்திரையும் போட்டுக் கொண்டு இருந்தோம். வெளியில் சென்று திரும்பியவர்கள் மறு நாளும் வெளியில் செல்ல வேண்டும். ஆனால் அந்த மாத்திரை கைவசம் இல்லை. தீர்ந்து விட்டது. மாலை நேரமாகி விட்டதினால் அவசரம் அவசரமாக கடைக்குச் சென்றோம்.

நைனிடாலில் பெரிய கடைகள் எதுவும் கிடையாது. ஆகவே கண்ணில் பட்ட முதல் கடைக்குச் சென்று அந்த மாத்திரையைக் கேட்டோம். கடைகாரர் ஒரு சர்தார்ஜி. முதலாவதாக அவருக்கு இத்தனை மலிவான மருந்தா என்று தோன்றியது போல வேண்டா வெறுப்பாக கடைக்குள் சென்று அதை எடுத்து வந்து மேஜை மீது தூக்கிப் போட்டார். அவருடைய நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வது ? மருந்து வேண்டும். அதற்குப் பணம் தர என்னுடைய தந்தை தனது பர்சை திறந்தார்.

அதில் இருந்த பாபாவின் ஒரு லாக்கெட் கீழே விழுந்தது. கீழே விழுந்த அதை எடுத்த கடைக்காரன் அதையே சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். எங்களுக்கும் தெரியவில்லை, அந்த லாக்கெட் எங்கிருந்து வந்தது ? அந்த கடைக்காரன் என் தந்தையிடம் மிகவும் பணிவாகக் கேட்டார் ' ஐய்யா, இந்த படம் உங்கள் கைவிரல் மோதிரத்தில், மனைவியின் கழுத்தில் உள்ள மாலையில் மகளின் மாலையில் என அனைவரிடமும் உள்ளதே. இதை நான் வைத்துக் கொள்ளாலாமா?' சற்று முன்னர்வரை வேண்டா வெறுப்பாக நடந்தவனா அவன் என ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய தந்தையும் 'சரி வைத்துக் கொள் 'என்று கூறி விட்டார் .

என்னுடைய தாயாருக்கு மனக் குழப்பம். பல வருடங்களுக்கு முன் அது அவருடைய கணவரின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்தது. அது ஒருமுறை அறுந்து கீழே விழுந்து விட்டதினால் அதை எடுத்து என் தந்தை தனது பர்சில் வைத்துக் கொண்டு இருந்திருகின்றார். அதை மரந்தும் விட்டார். ஆனால் அது பலமுறை என் தந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது. அதைப் போய் கொடுத்து விட்டாரே. அதை எப்படி தடுக்க முடியும் ? அந்த கடைக்காரனும் அதை மன நிறைவுடன் வாங்கிக் கொண்டான். நாங்கள் வீடு திரும்பினோம். ஆனால் என்னுடைய தந்தை கூறினார், 'போகட்டும் இன்னும் ஒருவனுக்கும் பாபா அருள் புரிய உள்ளார் என்று என்று நினைப்போம்'.

அடுத்த வருடமும் விடுமுறையில் நாங்கள் நைனிடால் சென்றோம். கடைகளுக்குச் சென்று சாமான்களை வாங்கி கொண்டு மீண்டும் அந்த மருந்தை வாங்க மருந்துக் கடைக்குச் சென்றோம். நாங்கள் எங்களை அறியாமலேயே சென்றது அதே பழையக் கடை.
நாங்கள் அங்கு சென்றதும் அந்த கடைக்காரன் எங்களை அன்புடன் வரவேற்று சாப்பிட ஸ்நாக்ஸ் மற்றும் தேநீர் பானமும் தந்து உபசரித்தார். அவருடைய நடத்தையே முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் கூறினார் ' 'ஐயா , என்னை நினைவிருகின்றதா? நீங்கள் முன்பு வந்தபோது நான் நடந்து கொண்ட முறைக்கு வருந்துகின்றேன் . அதன் காரணம் நான் பல பிரச்சனைகளில் மூழ்கிக் கிடந்தேன். என்னுடைய சகோதரன் மடிந்து விட்டான். வியாபாரம் சரி இல்லை. என்ன செய்வது என மனம் குழம்பியபடி காலத்தை ஓடிக் கொண்டு இருந்த போதுதான் நீங்கள் வந்து உங்கள் பர்சில் இருந்து கீழே விழுந்த லாகேட்டை எனக்கு தந்து விட்டுச் சென்றீகள். அது வந்த பின் என்னுடைய வாழ்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த லாகேட்டில் இருந்தவர்தான் என்னை காப்பாற்றி வந்துள்ளார் என நினைக்கின்றேன்.

எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. இப்போது எங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவுகின்றது. அந்த படத்தில் உள்ளவர் யார் என உங்களைக் கேட்க நினைத்து இருந்தேன். நீங்கள் யார் என்பதே தெரியாது. ஆனால் என்று நீங்களே இங்கு வந்துள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு தேவதைப் போல வந்த நீங்கள் எனக்கு நல்லதே செய்து உள்ளீர்கள். அவர் யார்? எங்கு இருக்கின்றார்? அவரை நான் எப்படிப் பார்க்க முடியும்?' என்றெல்லாம் கேட்டார். எங்களுக்குப் புரிந்தது பாபா அந்த மனிதருக்கு கருணை காட்டி உள்ளார் .

என்னுடைய தாயார் அவருக்கு பாபாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினார். சீரடிக்கு செல்லும் வழியைக் கூறி விலாசமும் தந்தார். எங்கள் முன்னிலையிலேயே அந்த மனிதர் சீரடியில் இருந்து உடி பிரசாதம் பெற்றுக் கொள்ள ஒரு கவரில் பணத்தை எடுத்து வைத்தார். நடந்தது அனைத்தும் பற்றி நாங்கள் என்ன கூறுவது. எங்களை அல்லவா பாபா தம்முடைய தூதுவராக எவருக்கோ நன்மை கிடைக்க அனுப்பி உள்ளார். அவருடன் நெடு நேரம் பேசிய பின் வீடு திரும்பினோம். அவருடைய முகத்தில் நாங்கள் கண்ட மகிழ்ச்சி இன்னும் எங்கள் கண்களில் இருந்து மறையவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நாங்கள் இன்னொரு பாடம் கற்றுக் கொண்டோம். எப்போது வெளியில் சென்றாலும் பாபாவின் சில பொருட்களை நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
(Translaed into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.