Wednesday, April 21, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Disappearance of Moreshwar's asthama.


மோ ரேஷ்வர் பிரதானின் அனுபவம்

மோரேஷ்வர் பிரதான் என்பவர் மும்பை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். அவர் பாபாவின் பக்தர். அவருக்கு தீராத ஆஸ்துமா நோய் இருந்தது. மேலும் அவர் என்னுடைய தாத்தா பில்லியர்ட்ஸ் என்ற விளையாட்டு விளையாடும்போது அவருடன் ஜோடியாக விளையாடுவார்.

அவருக்கு ஆஸ்துமா இருந்ததைக் கண்ட என்னுடைய தாத்தா அவரை சீரடிக்குச் சென்று சாயி பாபாவிடம் கேட்குமாறுக் கூற அவரும் சீரடிக்குச் சென்றார். தன்னுடைய வியாதி குறித்து அவர் பாபாவிடம் கூறிய போது பாபா தான் பயன்படுத்தி வந்த சிலிம் என்ற புகையிலை குழாயைக் கொடுத்து அதில் இருந்து வந்த புகையை உள்ளே இழுக்குமாறு கூறினார். முதலில் பிரதான் சற்று தயங்கினாலும் பாபா தந்ததினால் அதைவாங்கிக் கொண்டு அதில் இருந்து வந்த புகையை உள்ளே இழுத்தார். அதற்குப் பின் அவருக்கு ஆஸ்துமா நோயே வரவில்லை.

1918 ஆம் ஆண்டு விஜயதசமி தினம். திடீரென சாந்தாக்ருஸ் என்ற இடத்தில் இருந்த மோரேஷ்வருக்கு பயங்கரமான ஆஸ்துமா வந்து விட்டது. உதவிக்கு உடனேயே என்னுடைய தாத்தாவை கூப்பிட்டு அனுப்பினார். அவரும் தாமதிக்காமல் பாபாவின் உதியை எடுத்துக் கொண்டு போய் அவருக்கு ஆறுதல் தந்தபின் உதியை நீரில் கலந்து கொடுத்து அதை குடிக்கச் சொன்னார் . அதைக் குடித்ததும் அவருடைய ஆஸ்துமா மெல்ல மெல்ல குறைந்தது. அப்போது என்னுடைய தாத்தாவிடம் அவர் கேட்டாராம் ' இனி உனக்கு ஆஸ்துமா நோய் வராது என பாபா கூறியும், இப்போது ஏன் வந்தது?' அதற்கு தாத்தா 'அது குறித்து இப்போது கவலைபட வேண்டாம் என்றும், இனி ஆஸ்துமா வந்தால் உதியை மட்டும் கரைத்துக் குடிக்குமாறும் கூறினார். ஆனால் அன்று மதியம் இரண்டு மணிக்கே பாபா மறைந்துவிட்ட செய்தி வந்தது. அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது, பாபா தான் மறைய இருக்கும் செய்தியை தன்னுடைய பக்தர்களுக்கு முன்னதாகவே பல வகைகளில் கூறி உள்ளார் என்பது . என்னுடைய தத்தாவுக்கும், அப்பாவுக்கும் கூட அந்த மாதிரியான செய்தியை வேறு விதத்தில் அனுப்பி இருந்த கதையை பின்னர் கூறுகின்றேன்.
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.

14. Live Experience of Tarkhad Family-Chapter 14.

15.Live Experience Of Tarkahd Family-Chapter 15.

(Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.