Babas blessings and the miracle of Shri Sai Satcharitra-Experience By Pavani
முழு நம்பிக்கையோடு சாயியை நம்பினோரை அவர் கைவிடுவது இல்லை என்பதற்கு அடையாளமாக இன்று சாயி பக்தை பவானியின் அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா
மனிஷா
பவானியின் அனுபவம்
உங்கள் தளத்தில் பாபாவின் ஒரு பக்தர் பல சாயிபாபா பக்தர்களின் அனுபவத்தை தொகுத்து வெளியிடுவதாக வந்த செய்தியை படித்துவிட்டு என்னுடைய அனுபவத்தையும் அவருக்கு அனுப்ப முடிவு செய்தேன். இதைப் படித்துவிட்டு அவருக்கு அப்படியே அனுப்பினாலும் சரி, இல்லை எனில் நீங்கள் இதை எடிட் செய்து அனுப்பினாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. என்னுடைய வாழ்கையில் சாயிபாபா பல மகிமைகளை செய்து உள்ளார். அவை அனைத்தையும் சில காரணங்களினால் கூற முடியாது என்றாலும் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு 2007 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. என்னுடைய கணவர் தீவீரமான சாயிபாபா பக்தர். ஆனால் எனக்கு சாயிபாபா மீது நம்பிக்கை இருந்தது இல்லை. எனக்கு இயற்கையாகவே தலைகனம் உண்டு. அவருடன் நீங்கள் மனிதரான பாபாவை ஏன் வணங்க வேண்டும் என தகராறு செய்வேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்தியது இல்லை. அவர் சாயிபாபாவின் ஆலயத்துக்கு உள்ளே சென்றாலும் நான் போனது இல்லை. ஆலயத்தின் வெளியிலேயே நின்று இருப்பேன். ஆனால் அவர் என்னை உள்ளே வருமாறு வற்புறுத்தியது இல்லை. எனக்கு திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் என் வீட்டிலும், கணவர் வீட்டிலும் ஏற்பட்ட சில பிரச்சனை எங்களை கதி கலங்க வைத்தது. எங்களுடைய அமைதியே மடிந்து போயிற்று. என்னுடைய எதிரிக்குக் கூட அத்தகைய சோதனை வரக் கூடாது. அந்த சோதனையை தாங்க முடியாமல் போக நான் சாயிபாபாவை நம்பத் துவங்கினேன். அவர் ஆலயம் சென்று அழுதேன். அப்போது அவரே என் எதிரில் வந்து நின்றார். அது முதல் என் பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறையத் துவங்கின.
நான் சாயி சரித்திரத்தை நிறைய முறை படித்திருந்தேன். ஒரு முறை நான் சாயி சரித்திரத்தை புதன்கிழமை அன்று படித்து முடித்தேன். மறுநாள் என் கனவில் சாயி வந்தார். அந்த கனவில் என்னையும் என்னுடைய மச்சினியையும் சில ஆட்கள் துரத்திக் கொண்டு வர நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடத் துவங்கினோம். ஒரு இடத்தில் சாயிபாபா உட்கார்ந்து இருந்தார். அவரிடம் சென்று அடைக்கலம் ஆனோம். திரும்பிப் பார்த்தால் எங்களை துரத்தி வந்தவர்கள் காணவில்லை. அப்போது என்னிடம் பாபா எதையோ கூறினார். முழிப்பு வந்த எனக்கு அவை நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் கூறிய ஒன்று மட்டும் நினைவில் இருந்தது. அவர் கூறினார் 'நீ விரைவில் இந்த வீட்டை காலி செய்து கொண்டு வேறு வீட்டுக்குப் போய்விடு'. அப்போது உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட பிரச்சனையில் என்னுடைய கணவருக்கு வேலையும் போய் விட்டது. ஆனால் சாயியின் அருளினால் ஒரே மாதத்தில் மீண்டும் அவருக்கு வேறு வேலை கிடைத்து விட நாங்கள் உடனடியாக சாயிபாபா கூறியது போல வீட்டை மாற்றினோம். அது முதல் எங்கள் வாழ்கையில் ஏற்பட்ட சூறாவளி மறைந்தது. அது அனைத்தும் சாயியின் கருணையே.
மற்றொரு மகிமையை சாயிபாபா எனக்கு காட்டினார். 2009 ஆம் ஆண்டு . உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் பலர் வேலை இழந்தனர். அமெரிக்க அரசாங்க உள்துறையோ வேலை இல்லாதவர்களது விசாவை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கவில்லை. நானோ மற்றவர் ஆதரவில் உள்ள விசாவில் இருந்தவள். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதி ஆகி இருந்தது. நான் பார்க்கவே இல்லை. நான் என் கணவருடன் அங்கு தங்கி இருக்க வேண்டும் எனில் அதை விரைவாக நீடிக்க வேண்டும். ஆனால் காலம் கடந்து விட்டதினால் அங்கு அதை நீடிக்க முடியாத நிலை. உடனே இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்தே அதை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட இந்தியாவுக்குக் கிளம்பினால் காலாவதி ஆன விசா அந்த பிரச்சனையினால் விமான கம்பனிகள் எதுவும் டிக்கட் தர மறுத்தன. என்ன செய்வது எனப் புரியாமல் சாயி சரித்திரத்தைப் படிக்கத் துவங்கினேன். என்ன ஆச்சர்யம், நான் கைது கூட ஆகிவிடமுடியும் என்ற நிலையில் அதைப் படிக்க ஆரம்பித்த இரண்டாவது நாளே நல்லவேளையாக இந்தியன் ஏர்லையின்ஸ் எனக்கு டிக்கட் தந்தது.
இந்திய திரும்பிய நான் விசா அலுவலகம் சென்று அதன் நீடிப்புக்கு விண்ணப்பம் செய்தேன். சாயி சரித்திரத்தையும் தொடர்ந்து படித்தேன். ஒரு வாரம் ஆயிற்று. ஒரு நாள் என்னுடைய மாமியாருடன் சாயியின் ஆலயம் சென்றேன். ஆனால் நான் சென்று இருந்த சமயம் ஆலயம் மூடப்பட்டு இருந்தது. தட்சணையை பாபாவுக்கு எப்படிப் போடுவது எனத் தெரியவில்லை. சாயிக்கு தட்ஷணை போடாமல் திரும்ப முடியாது என்ற நிலை எனக்கு. ஆகவே ஒரு பக்கத்தில் திறத்து இருந்த ஜன்னல் வழியே தரிசனம் செய்துவிட்டு, பாபாவே துணை என எண்ணி தட்ஷணையாக நான் எடுத்துச் சென்று இருந்த நாணயத்தை அவர் பாதத்தின் மீது தூக்கி எறிந்தேன் . சொன்னால் நம்பமாட்டார்கள். கீழே விழுந்த அந்த நாணயம் கீழே விழுந்ததும் பந்து போல மேலே துள்ளி எழுந்து ஏதோ பக்கத்தில் நின்றபடி அவர் பாதத்தில் அதை வைத்தது போல சாயிபாபாவின் பாதத்தில் சென்று விழுந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறகு என்ன . அடுத்தநாளே விசா நீடிப்பு கிடைத்தது. நானும் என் கணவருடன் வாழ அமெரிக்காவுக்குப் பயணமாகி விட்டேன்.
மற்றும் ஒரு அதிசயம் என் கண்ணெதிரே நடந்தது. ஒரு நாள் எங்களுடைய நண்பர்களின் குடும்பம் என்ப்கள் வீட்டுக்கு வந்தனர். நியூயார்க்கிற்கு போகும் வழியில் ஒரு இரவு எங்கள் வீட்டில் தங்கிவிட்டு வேலைத் தேட அந்த வழியே சென்று கொண்டு இருந்தனர். பொருளாதார வீழ்ச்சியினால் அவருக்கும் இருந்த வேலை போய்விட்டது என்பதினால் ஒன்பது மாதமாக வேலை இல்லை. அவர் மனைவியும் மற்றவர் ஆதரவில் உள்ள விசாவில் இருந்தவள். அவளுக்கும் வேலை இல்லை.
அவர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது இரவு எட்டு மணி. அமெரிக்காவில் ஒன்பது மாதமாக வேலை இல்லாமல் இருப்பது எத்தனை கடினம் என்பதை அங்குள்ளவர்கள்தான் அறிவார்கள். வந்தவர்களின் நிலையைப் பார்த்த நான் அவளுக்கு சாயி சரித்திரம் படித்து சாயியிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னேன். அவள் சாயி பக்தைதான் என்றாலும் அது பற்றி தெரிந்து இருக்கவில்லை. நான் அதன் மகிமை பற்றி விளக்கிக் கூறியதும் உடனேயே அவள் என் வீட்டு பூஜை அறைக்குச் சென்று சாயியை வேண்டி விரதம் இருக்க பிரார்த்தனை செய்து விட்டாள். என்ன அதிசயம் தெரியுமா? அன்று இரவே ஒன்பது மணிக்கு அவள் கணவருக்கு வேலைக்கான தேர்வுக்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு வந்தது. இரவு நேரத்தில் அப்படிப்பட்ட அழைப்புகள் வரவே வராத காலம் அது. நியூயார்க்கிற்கு செல்ல வேண்டியவர்களுக்கு காலிபோர்னியாவில் மறுநாளே வேலைக் கிடைத்துவிட்டது. சாயியை வேண்டிய அடுத்த ஒரே மணி நேரத்தில் எங்கோ கிளம்பிச் சென்று கொண்டு இருந்தவர்களுக்கு வேறு எங்கோ வேலை கிடைத்தது ஒரு அதிசயம் அல்லவா? சாயியின் மகிமையை என்னவென்று கூறுவது.
Loading
0 comments:
Post a Comment