Devotee In Contact With Baba -Uddhavesh alias Shyamdas Baba-(Part-1)
அன்பானவர்களே
பாபா தொடர்ந்து கூறினார் ' என்னும் ஐந்து வருடங்களில் அனைத்தும் சரியாகிவிடும். என்றே கிளம்பிச் செல், உபவாசம் செய்' அதன் பிறகு இருவரும் மசூதிக்குச் சென்றனர். பாபாவுக்கு எவரோ தேங்காய் தந்தார். அதை உடைத்து ஒரு பாதியை உத்வேஷுக்குத் தந்துவிட்டுக் கூறினார், 'அரே, ஒரே சமயத்தில் எப்படி அனைத்து பாகரையும் சாப்பிட முடியும்? ஐந்து வருடங்கள் பொறு. அப்புறம் நாம் சந்திக்கலாம்.' அதன் பின் உத்வேஷ் பாபாவை நமைச்கரித்தபிறகு அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கோபர்கோனுக்குச் திரும்பிச் சென்று தமது யாத்ரீகர்களுடன் கலந்து கொண்டார். 1906 ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரையில் அவர் சந்தித்த நானா சந்டோர்கர், கோன்தேவ் காண்டிகர் , பாபா சாஹேப் தேவ் போன்றவர்கள் பாபாவின் லீலைகளை பலவாறுகூறினார்கள். அதன் பின் அவர் அடிக்கடி சீரடிக்கு செல்லத் துவங்கினார். ஒருமுறை அவர் சீரடிக்கு சென்று இருந்தபோது பாபா மாவரைக்கும் கல்லில் கோதுமையை அரைதவாறு எதையோ கூறிக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்ததை பார்த்தார். பாபா என் மாவரைக்கும் கல்லில் கோதுமையை அரைக்க வேண்டும் என எண்ணியவாறு அவரிடம் சென்று அது குறித்துக் கேட்ட போது பாபா கூறினார், என்ன செய்வது என்னிடம் வருபவர்களுக்காக நான் அரைக்க வேண்டும் அல்லவா.
அப்போதுதான் உதவேஷுக்குப் புரிந்தது, பாபா தன்னிடம் வரும் பக்தர்களின் கர்ம வினைகளை அழித்துக் கொண்டு இருகின்றார் என்பது. நமக்காக அவர் எத்தனை துயரங்களை ஏற்றுக் கொள்கின்றார் என எண்ணி வியந்தார். நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாக்கள், இந்த ஜென்ம கர்மாக்கள், கடந்த மற்றும் இந்த ஜென்மத்தில் செய்யும் காரியங்கள் அதற்கான நன்மை தீமைகள் என அனைத்தும் ஒரு சக்கரம் போல சுழலுகின்றன. ஆகவே நமக்கு ஒரு சத்குருவின் துணையே அவற்றில் இருந்து விடுதலைப் பெறத் தேவை. அவர்தான் ஒவ்வொரு முறையும் கீழே விழும் குழந்தையை ஒரு தாய் மீண்டும் மீண்டும் தூக்கி எழுப்புவது போலநமக்கு இருப்பவர். சத்குருவே நமக்கு பிறப்பும் இறப்பும் அற்ற நிலையைத் தருபவர் .
பாபா அவருக்கு எப்போதும் போல உடியை தந்தபின் ' சரி, நீ கிளம்பி விட்டாயா , அரே ச்யாமதாஸ் , நான் எப்போதும் உன்னுடன்தான் இருக்கிறேன், அல்லாஹ் உன்னைக் காப்பாற்றட்டும். நன்மைகளே நடக்கட்டும்'.
அதைப் பொருட்படுத்தாமல் ச்யாமதாஸ் அவரிடம் சென்றபோது, 'அரே ச்யாமதாஸ், நீ வந்து விட்டாயா ' என அவர் கேட்க அவர் விரைவில் தான் திரும்பிப் போக வேண்டும் என்பதினால் பிறகு வருகிறேன் என அவரை வணங்கிவிட்டு உடியை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
வாயில்வரை போனவரை பாபா மீண்டும் அழைத்தார் . ' நீ இனி சீரடிக்கு வர வேண்டாம். நான் என்றும் உன்னுடன்தான் இருக்கின்றேன். எந்த ஊரில் உள்ளவர்கள் மாறி விட்டனர். பணம் வேண்டும் ,பணம் வேண்டும் என என்னை பிடுங்குகிறார்கள். நீ யாத்திரைக்குப் போகின்றாயா, இல்லை உறவினரைப் பார்க்கப் போகின்றாயா?. எங்கு சென்றாலும், எது எப்படி இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடன்தான் இருகின்றேன்.
(Transalted into Tamil by Santhipriya )
பாபாவின் காலத்தில் அவரிடம் இருந்து அருளை பெற்றவர்களில் உதவேஷ் என்கின்ற சியாமாதாஸ் பாபாவும் ஒருவர். அவருடைய கதையைப் படித்ததும் இதயம் கனத்தது. அவருக்கு பாபா கூறியதை நினைத்துப் பார்த்தேன். என் கண்களில் நீர் நிரம்பியது. பாபா எப்படியெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்காக கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு கருணா மூர்த்தியாக விளங்குகின்றார் என்பதை நினைத்து அழுதேன். நம் கையில் எதுவுமே இல்லை. எல்லாமே அவர் செயல். அவருடைய காலடியில் விழுவதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும். இதோ உதவேஷ் கதையைப் படியுங்கள்
மனிஷா 1865 ஆம் ஆண்டு, ஜூன் ஒன்பதாம் தேதியன்று பிறந்தவர் உதவேஷ். அவருடைய முன்னோர்கள் கொங்கன் பிரதேசத்தில் இருந்த ரத்னகிரியை சேர்ந்தவர்கள். அவர் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதினால் அடிக்கடி யாத்திரைகள் போவது உண்டு.
அவர் சீரடிக்கு சென்றது 1904 ஆம் ஆண்டில்தான். அப்போது அவர் வார்தாவில் இருந்து நடைப் பயணம் மூலம் ராமேஸ்வரம் வரையிலான பயணத்தை மேற்கொண்டார். கஜானன் மகராஜை தரிசித்த போது அவர் ஷேர்கோன் என்ற இடத்துக்கும் செல்லுமாறும் அங்கு அவருடைய குருவைக் காணலாம் என்றும் கூறினார். சிவிலியில் ஹரிடர் பாபா என்பவரை சந்தித்தபோது அவர் உதவேஷ்சிற்கு அவருடைய மோட்ச குரு கிழக்கு திசையில் சிவிலி என்ற சொல்லைப் போலவே இருக்கும் இடத்தில் கிடைப்பார் என்றார்.
உதவேஷ்
சிவிலியை அடைந்த போது அவருடன் வந்தவர்கள் அவருக்கு ஒரு குதிரையைத் தந்து அதில் பயணிக்கும்படிக் கூறினார். அந்த குதிரைக்கு முன்னால் சென்றால் கடிக்கும், பின்னால் நின்றால் உதைக்கும். அப்படிப்பட்ட குதிரையில் பயணம் செய்து அஹமத் நகரை அடைந்தார். பெலாபூரில் கேஷவ கோவிந்தரின் சாமாதியை வணங்கியபின் கோபெர்கோனை அடைந்தார். அங்கு இருந்த கோதாவரி நதியில் குளித்தப் பின் சீரடியை அடைந்தார். அத காலத்தில் சீரடி பாழடைந்த இடம் போல இருந்தது. எங்கு நோக்கினாலும் வேல மரங்கள் நிறைந்து இருந்தன. ஒரு மரத்தில் அந்த குதிரையை கட்டிவிட்டு, அதன் கால்களையும் தனியாகக் கட்டிவிட்டு இங்கும் அங்கும் பார்த்தபோது கிழிந்த உடை அணிந்தபடி ஒரு பகிர் செல்வதைப் பார்த்து அவரிடம் சென்று சீரடி முனிவர் எங்கு இருப்பார் எனக் கேட்டார். அதைக் கேட்ட அந்த பகிர் அவரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு சென்றுவிட்டார். உதவேஷுக்கு மிகவும் துயரமாகி விட்டது. ஒரு வரியில் பதிலைத் தரவேண்டியவர் வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டுச் செல்கின்றாரே, என்ன மனிதர்கள் எவர்கள் என நொந்து கொண்டே மசூதிக்கு அருகில் இருத்த குடுசை வீட்டில் பாகர் என்ற உணவு அருந்தச் சென்றார். அங்கு சீரடி முனிவரை பற்றிக் கேட்டபோது அந்த வீட்டின் பெண்மணி அவரைப் பற்றிய அனைத்தையும் கூறினாள். வந்து உணவு உண்பதாகக் கூறிவிட்டு மசூதிக்கு சென்றார்.
ஆவலுடன் மசூதிக்கு சென்றவர் சுற்றிலும் குப்பைகள் இரைந்து கிடப்பதை கண்ட்டர். ஆனால் உள்ளே அனைத்தும் துப்புரவாக இருந்தன. ஒரு மூலையில் நான்கு விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. அதன் பக்கத்தில் கையால் மாவரைக்கும் யந்திரம் . சற்று தள்ளி துனியில் நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது.
வெளியில் வந்தவர் யோசனை செய்தார். குடுசையில் உணவு தரும் பெண்மணி இந்து மதம். மசூதியில் நெருப்பு எரிகின்றது. எப்படி இதெல்லாம் ஒன்றாக இருக்க முடியும்? அப்போது பாபா தான் கட்டி வைத்து இருந்த குதிரையை தடவித் தந்து கொண்டிருபதைக் கண்டார். ' மகராஜ் பத்திரம் அது கடித்துவிடும் என கூவிக்கொண்டே அவர் அருகில் சென்று அவர் கால்களில் விழுந்தார். உடனடியாக தன்னுடைய மனம் அமைதி அடைந்ததையும் உணர்ந்து கொண்டார். அவரிடம் கேட்டார், 'மகராஜ் எனக்கு என்னுடைய குரு எப்போது கிடைப்பார்?' அதற்கு பாபா அமைதியாகக் கூறினார், ' அதை பின்னர் உணருவாய். நான் ஒரு பைத்தியக்கார பகிர்'.
பாபா தொடர்ந்து கூறினார் ' என்னும் ஐந்து வருடங்களில் அனைத்தும் சரியாகிவிடும். என்றே கிளம்பிச் செல், உபவாசம் செய்' அதன் பிறகு இருவரும் மசூதிக்குச் சென்றனர். பாபாவுக்கு எவரோ தேங்காய் தந்தார். அதை உடைத்து ஒரு பாதியை உத்வேஷுக்குத் தந்துவிட்டுக் கூறினார், 'அரே, ஒரே சமயத்தில் எப்படி அனைத்து பாகரையும் சாப்பிட முடியும்? ஐந்து வருடங்கள் பொறு. அப்புறம் நாம் சந்திக்கலாம்.' அதன் பின் உத்வேஷ் பாபாவை நமைச்கரித்தபிறகு அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கோபர்கோனுக்குச் திரும்பிச் சென்று தமது யாத்ரீகர்களுடன் கலந்து கொண்டார். 1906 ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரையில் அவர் சந்தித்த நானா சந்டோர்கர், கோன்தேவ் காண்டிகர் , பாபா சாஹேப் தேவ் போன்றவர்கள் பாபாவின் லீலைகளை பலவாறுகூறினார்கள். அதன் பின் அவர் அடிக்கடி சீரடிக்கு செல்லத் துவங்கினார். ஒருமுறை அவர் சீரடிக்கு சென்று இருந்தபோது பாபா மாவரைக்கும் கல்லில் கோதுமையை அரைதவாறு எதையோ கூறிக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்ததை பார்த்தார். பாபா என் மாவரைக்கும் கல்லில் கோதுமையை அரைக்க வேண்டும் என எண்ணியவாறு அவரிடம் சென்று அது குறித்துக் கேட்ட போது பாபா கூறினார், என்ன செய்வது என்னிடம் வருபவர்களுக்காக நான் அரைக்க வேண்டும் அல்லவா.
அப்போதுதான் உதவேஷுக்குப் புரிந்தது, பாபா தன்னிடம் வரும் பக்தர்களின் கர்ம வினைகளை அழித்துக் கொண்டு இருகின்றார் என்பது. நமக்காக அவர் எத்தனை துயரங்களை ஏற்றுக் கொள்கின்றார் என எண்ணி வியந்தார். நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாக்கள், இந்த ஜென்ம கர்மாக்கள், கடந்த மற்றும் இந்த ஜென்மத்தில் செய்யும் காரியங்கள் அதற்கான நன்மை தீமைகள் என அனைத்தும் ஒரு சக்கரம் போல சுழலுகின்றன. ஆகவே நமக்கு ஒரு சத்குருவின் துணையே அவற்றில் இருந்து விடுதலைப் பெறத் தேவை. அவர்தான் ஒவ்வொரு முறையும் கீழே விழும் குழந்தையை ஒரு தாய் மீண்டும் மீண்டும் தூக்கி எழுப்புவது போலநமக்கு இருப்பவர். சத்குருவே நமக்கு பிறப்பும் இறப்பும் அற்ற நிலையைத் தருபவர் .
அங்கு சில நாட்கள் தங்கிய பின் பாபாவிடம் சென்று விடை பெற்றுக் கொண்டு கிளம்பியபோது பாபாவிடம் கூறினார் ' பாபா என்னை அடிக்கடி சீரடிக்கு வரவழித்துக் கொள்ளுங்களேன்' அதைக் கேட்ட பாபா பக்கத்தில் இருந்த பாலா சிம்பியிடம் கூறினார் ' எதோ பார் நான் எவரை அடிக்கடி அழைப்பது இல்லையாம். ஆனால் நாங்களோ பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம் ?' அப்போதுதான் மீண்டும் உத்வேஷுக்குப் புரிந்தது ஒவ்வொரு ஏகாதசிக்கும் அவர் எழுதும் கடிதங்களுக்கு பாபாவும் பதில் கடிதம் போட்டு வந்தது என்ன? .
பாபா அவருக்கு எப்போதும் போல உடியை தந்தபின் ' சரி, நீ கிளம்பி விட்டாயா , அரே ச்யாமதாஸ் , நான் எப்போதும் உன்னுடன்தான் இருக்கிறேன், அல்லாஹ் உன்னைக் காப்பாற்றட்டும். நன்மைகளே நடக்கட்டும்'.
இன்னொரு முறை அவர் துவாரகாமாயிக்கு சென்று இருந்த போது மாலை மணி மூன்று ஆகி இருந்தது. சபா மண்டபத்தில் இருந்த அனைவரும் பாபாவின் பக்கத்தில் போக வேண்டாம் எனவும் அவர் கடுமையான கோபத்தில் உள்ளார் எனவும் கூறினார். சற்று முன்தான் அவரை வணங்கச் சென்றவரை கண்டபடித் திட்டி அனுப்பி விட்டார் என்றனர்.
அதைப் பொருட்படுத்தாமல் ச்யாமதாஸ் அவரிடம் சென்றபோது, 'அரே ச்யாமதாஸ், நீ வந்து விட்டாயா ' என அவர் கேட்க அவர் விரைவில் தான் திரும்பிப் போக வேண்டும் என்பதினால் பிறகு வருகிறேன் என அவரை வணங்கிவிட்டு உடியை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
வாயில்வரை போனவரை பாபா மீண்டும் அழைத்தார் . ' நீ இனி சீரடிக்கு வர வேண்டாம். நான் என்றும் உன்னுடன்தான் இருக்கின்றேன். எந்த ஊரில் உள்ளவர்கள் மாறி விட்டனர். பணம் வேண்டும் ,பணம் வேண்டும் என என்னை பிடுங்குகிறார்கள். நீ யாத்திரைக்குப் போகின்றாயா, இல்லை உறவினரைப் பார்க்கப் போகின்றாயா?. எங்கு சென்றாலும், எது எப்படி இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடன்தான் இருகின்றேன்.
Loading
0 comments:
Post a Comment