Wednesday, August 11, 2010

Devotee In Contact With Baba-Laxmanrao Kulkarni Ratnaparkhi.லஷ்மண் ராவ் குல்கர்னி ரத்னபார்கே என்பவர் மாதவ தேஷ்பாண்டேயின் மாமன். அவர் சீரடியிலே வசித்து வந்தவர். பிறப்பால் பிராமணர். அதிக அளவில் சூத்திரம் பிராமணன் என்ற ஜாதி பேதம் பார்த்தவர். அவரை லஷ்மண் மாமா என்றே அழைப்பார்கள். அவர் சீரடி கிராமத்தின் கிராம அதிகாரி. பலரும் பாபாவிடம் பக்தி கொண்டு இருந்தாலும் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஜாதி பேதம் காரணமாக அவரிடம் செல்ல பிடிக்கவும் இல்லை.

அறிவில்லாதவர்கள் தன் மமதயினால் அழிவை சந்திப்பார்கள். அவர்கள் கடவுளிடம் இருந்து தக்க தண்டனைப் பெற்று திருந்துவார்கள். அப்போது அவர்களுக்கு கடவுளின் அனுகிரகம் கிடைக்கும். அதுவேதான் லஷ்மண் ராவ் விஷயத்திலும் நடந்தது. அவர் இனம் புரியாத வியாதியினால் பிடிக்கப் பட்டார். என்ன வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்பதினால் வேறு வழி இன்றி மசூதியில் இருந்த பாபாவிடம் வந்தார்.

அவரைக் கண்ட பாபா அவரைக் கருணையோடு நோக்கினார். உடம்பைத் தடவிக் கொடுத்தார். ' போ..போ அல்லா அனைத்தையும் சரி செய்து விடுவார் ' என்றார். அன்றில் இருந்து லஷ்மண் ராவ் முற்றிலும் மாறினார். பாபாவின் தீவீர பக்தரானார். வியாதி குணமாயிற்று. அவரை சோதனை செய்ய விரும்பினார் பாபா .

பாபாஜி என்பவர் லஷ்மண் ராவுடைய ஒரே மகன். அவருக்கும் தீராத வியாதி வர, மருத்துவத்தை மட்டுமே நம்பாத லஷ்மண் ராவ் தினமும் மசூதிக்கு வந்து பாபாவின் கையால் விபூதியை பெற்றுக் கொண்டு சென்று அதை தன்னுடைய மகனுக்கு தடவுவார். ஒரு நாள் அவருடைய மகன் சாகக் கிடந்தார். வியாதி குணம் ஆகவில்லை. லஷ்மண் ராவ் மசூதிக்கு ஓடி வந்து பாபாவின் கால்களில் விழுந்து 'பாபா , பாபா என் மகனை காப்பாற்று' என லஷ்மண் ராவ் கதறினார் .

பாபா அவரை கண்டபடி திட்டிவிட்டு, இங்கிருந்து ஓடிப் போ எனக் கத்தினார். லஷ்மண் ராவிற்கு ஒன்றும் புரியவில்லை. முழு நம்பிக்கையோடு வந்தாரோ இல்லையோ, தெரியாது, ஏன் எனில் பிறவிக் குணமான தலை கனம் அத்தனை விரைவாக முற்றிலும் அழிந்து விடுமா என்ன? மனதில் துயரத்தோடு வீடு திரும்பினார். சிறிது நேரம் சென்றது. பாபா மசூதியில் இருந்து வெளியில் வந்தார். லஷ்மண் ராவ் வீட்டிற்க்குச் சென்றார். பாபாஜியின் தலையை தடவித் தர அவர் உடனேயே சற்று குணம் அடையத் துவங்கினார்.

அதன்
பின் பூரண குணம் அடைந்து விட்டார். அப்போது லஷ்மண் ராவ் பாபா உண்மையாகக் கடவுளே என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார்.

தினமும் காலை எழுந்து குளித்துவிட்டு சந்தியாவந்தனம் செய்த பின் பாபாவிடம் சென்று அவரை நமஸ்கரிப்பார். கால்களை அலம்பி விடுவார். சந்தனம் இட்டு, மலர்களை வைத்து தூப தீபாராதனை செய்வார். அதன் பின் அவரைசாஷ்டாங்கமாக வணங்குவார். வெளியில் வந்து பிரசாதம் தருவார். அதன் பின்னரே கிராமத்திற்கு சென்று மற்ற கடவுட்களுக்கு பூஜைகளை செய்வார்.

பாபாவின் நெருங்கிய பக்தர் மேகாவின் மரணத்தின் பின் பாபுசாஹெப் ஜோக் என்பவரே பாபாவுக்கு பூஜைகளை செய்வார். 1918 ஆம் ஆண்டு அக்டோபர் பதினைந்தாம் தேதியன்று பாபா மஹா நிர்வாணம் அடைந்தார். அன்று இரவு பாபா லஷ்மண் ராவ் கனவில் தோன்றி இன்று பாபு சாஹேப் ஜோக் ஆரத்தி எடுக்க வரமாட்டார். நான் மரணம் அடைந்து விட்டதாக அவர் நினைகின்றார். ஆனால் நான் மரணம் அடையவில்லை. ஆகவே நீ வந்து காகாட ஆரத்தி எடு என்றார்.

அன்று அங்கு அல்லோலமாக இருந்தது. அனைவரும் தீராத துயரத்தில் இருந்தனர். இரவில் மசூதியில் பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. மறு நாள் அது புட்டி வாடா என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. ஆகவே அதற்க்கு முன் பாபா கூறியபடி ஆரத்தி எடுக்க வேண்டும் என எண்ணிய லஷ்மண் ராவ் அனைத்து சாமான்களையும் எடுத்துச் சென்றா. பாபாவை வணங்கினார்.

அவர் முகத்தை மூடி இருந்த துணியை விளக்கினார். பூஜை செய்தார். அப்போது பாபாவின் கைகள் சிறிது அசைந்ததைப் பலரும் பார்த்தனர். லஷ்மண் ராவ் கண்களில் நீர் நிறைந்தது. உடல் நடுங்கியது. பாபாவிவின் மூடி இருத்த கைகளைத் திறந்து விதா தட்சணையை வைத்தார். துணியால் மீண்டும் முகத்தை மூடிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

அன்று மதியம் புட்டி வாடாவில் பாபுசாஹெப் ஜோக் பாபாவின் உடலுக்கு மதியான ஆரத்தி எடுத்தார். பாபா எந்த அளவு லஷ்மண் ராவ் மீது அன்பு வைத்து இருந்தார் என்பது எத்தன மூலம் தெரியும் . லஷ்மண் ராவ் மறைந்த பின் அவருடைய மகன் வதந்தர் குல்கர்னி என்பவர் கிராம அதிகாரியானார். பாபாவின் மறைவுக்கு முன் பாபாவுடன் சுமார் பன்னிரண்டு வருட காலம் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.