Devotee In Contact With Baba-Uddhavesh alias Shyamdas Baba-(Part-4)
பாபா அழைத்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட ச்யாம்தாஸ் அடுத்த நாங்கு நாட்களுக்குள் சீரடிக்குச் சென்றார். அங்கு சென்றதும் அடுத்த பத்த நாட்கள் பாபா அவரிடம் இருந்து தினமும் பதினோரு ரூபாயை தட்சணையாகப் பெற்றுக் கொண்டார். பதினோராம் நாளன்று ச்யாம்தாசிடம் பணம் இல்லை.
பாபாவிடம் சென்று,' பாபா என்னிடம் பணம் இல்லை. இனி எங்கிருந்து பணத்தை வாங்கி வருவது? என்னுடைய பத்து இந்திரியங்களையும் மனதையும் வேண்டுமானால் பதினொன்று ரூபாய்க்கு பதில் தருகிறேன் என்றார். அதைக் கேட்ட பாபா 'அவற்றை நீ என்ன தருவது. நான்தான் ஏற்கனவே அவற்றை எடுத்துக் கொண்டு விட்டேனே'. என்றவர் பாபாசாஹேப் ஜோகிடம் சென்று பணத்தை வாங்கி வா' என்றார். வாசல்வரை சென்றவரை மீண்டும் அழைத்த பாபா 'சாம், அந்த பணத்தை பிறகு வாங்கி வா. 'ஆனால் பாபாசாஹேப் ஜோகிடம் இருந்துதான் வாங்கி வர வேண்டும்' என்றார்.
பாபாவிடம் இருந்து உதியை பெற்றுக்கொண்டு வாடாவுக்கு சென்றவர் அது பற்றி மறந்தே போய் விட்டார். மூணரை மணிக்கு தரிசனத்துக்கு சென்றபோது பதினோரு ரூபாய் பற்றி பாபா கேட்டார்.மேலும் 'பாபாசாஹேப் ஜோகிடம் சென்று அதை வங்கி வா. கூடவே அவரையும் அழைத்து வா' என்றார்.
அவரிடம் ச்யாம்தாஸ் சென்றபோது பாபா சாஹேப் ஏக்நாத் பாகவதத்தை சிலருக்கு படித்துக் காட்டிகொண்டு இருந்ததைக் கண்டார். அவரிடம் சென்று பாபா கூறியதை சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு பாபாவிடம் சென்றார். பாபா இருவரையும் ஆசிர்வதித்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார். அதன் பின் தினமும் சென்றனர். ஆனால் பாபா அவர்களிடம் தட்சணைக் குறித்து எதுவுமே கேட்கவில்லை. பலரும் அது என்ன பதினோரு ரூபாய் எனக் கேட்டாலும் ச்யாம்தாசுக்கு பதில் கூற முடியவில்லை. என் எனில் அதை அவரே யோசனை செய்து பார்கவில்லை.
நான்காம் நாள் பாபா ஜோக்கிடம் கேட்டார், இன்று நீ எத்தனை ரூபாய் தந்து உள்ளாய் ? ஜோக் கூறினார் புட்டிக்கு ஐம்பதும் ச்யாம்தாசுக்கு பதினொன்றும் தந்துள்ளேன். ச்யாம்தாஸ் மெளனமாக இருந்தார். அதன் அர்த்தம் புரியவில்லை. 'உனக்கு கிடைத்ததா' என பாபா கேட்டார். ச்யாம்தாஸ் கிடைத்தது என்றார். பாபா கூறினார், 'இல்லை உனக்கு அது கிடைக்கவில்லை. நீ ஒருமுறை போத்தியை படித்துவிட்டு வா'. ஆகவே ச்யாம்தாஸ் வாடா சென்று பாபா சஹேபிடம் அது குறித்துக் கேட்டபோது அவர் யோசனை செய்துவிட்டு அதை ஏகநாத்தின் பாகவதத்துடன் இணைத்துப் பார்த்தார். அப்போதுதான் ச்யாம்தாசுக்கு நினைவுக்கு வந்தது பாபா கூறாமல் போதியை மீண்டும் படிக்கத் துவங்க மாட்டேன் என்ற சபதத்தை எடுத்து இருந்தது.
பாபாவிடம் சென்று அது குறித்துக் கேட்டபோது அவர் ஒரு கதையைக் கூறினார். '' நாங்கள் இரண்டு சகோதரர்கள். ஒரு முறை பயணம் சென்று கொண்டு இருந்தோம். அது நீண்ட பயணம். வழியில் என் சகோதரனை கொடிய பாம்பு ஒன்று கடித்து அவர் இறந்து விட்டார். நான் பயணத்தைத் தொடர்ந்தேன். அப்போது வழியில் 5-6 நபர்கள் வந்து என்னுடைய சகோதரன் எங்கே எனக் கேட்க நான் அவனை பாம்பு கடித்து இறந்து விட்டதினால் அங்கேயே புதைத்து விட்டு வந்து விட்டேன் என்றேன்.
அவர்கள் இல்லை, நாங்கள் சென்று அவரை தேடித் பார்கின்றோம் எனக் கூறி மேலே சென்றனர். நான் அவர்களை பாம்பு கடித்துவிடும் என எச்சரித்தும் கேட்காமல் சென்றனர். அவர்களும் மடிந்து போக அவர்களையும் நான் அடக்கம் செய்தேன். அதன் பின் ஒரு பலசாலியான மங்கை வந்து என் சகோதரன் எங்கே எனக் கேட்டாள். அவளுக்கும் அதே பதிலைக் கூற மற்ற ஆறுபேரும் என்ன ஆனார்கள் என்று கேட்டாள். அவளிடம் வந்தவர்கள் என் பேச்சைக் கேட்காமல் சகோதரனைத் தேடித் போய் பாம்பு கடித்து இறந்ததைக் கூறினேன். அவளும் என் பேச்சை நம்பாமல் அவர்களைத் தேடித் போனாள் . அவளுக்கும் அதே கதி. அவளையும் அடக்கம் செய்தேன்.
பயணம் தொடர்ந்தது . ஐந்து அல்லது ஆறு முஸ்லிம்கள் என்னிடம் வந்து என் முன் ஒரு ஆட்டை வெட்டினார்கள். அந்த இறைச்சி துண்டை சாப்பிடுமாறு கூற நான் பிராமணன் சாப்பிட மாட்டேன் எனக் கூறியும் வற்புறுத்தி என் வாயில் அதை திணித்து விட்டனர். ஒரு நிமிடம் நான் கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிடுகிறேன் என்றேன். ஒரு சிறிய துணியை என் வாயில் வைத்துக் கொண்டு கடவுளை நினைத்தேன். என்ன அதிசயம். அந்த இறைச்சி அற்புதமான ரோஜாவாக மாறிவிட்டது. அது சீரடியில் கூட இல்லை. அந்த மனிதர்கள் சென்றுவிட்டனர். நான் என் பயணத்தைத் தொடர்ந்தேன். ஒரு எடத்தை அடைந்தவுடன் நான் பார்த்தேன். என்னை சுற்றி பளிங்கு நிறத்தில் தண்ணீர் ஓடுகின்றது. எந்த பக்கத்தில் திரும்பினாலும் தண்ணீர். மேலும் செல்ல வழியே இல்லை. அல்லாதான் அதை செய்து உள்ளார்.''
இந்த கதைக்கான விளக்கம் அவர் கொடுக்கவில்லை. நாம்தான் அதற்கு அர்த்தத்தை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அதன் அர்த்தம் ஒரு வேளை இப்படி இருக்கலாம். ''இரண்டு சகோதரர்கள் என்பதில் ஒன்று நம் உடல், மனது மற்றும் எண்ணங்களைக் குறிக்கும் 'நான்' என்பதாகும். இரண்டாவது என்னுடையா 'ஆத்மா' என்பதைக் குறிக்கும். நான் என்ற என்னை புதைத்துவிட யோகாவை பயில வேண்டும். நான் என்பதை அழித்து விடவேண்டும். அதை குறிப்பிட்டே பாம்பு கடித்து இறந்தவனை புதைத்து விட்டு குண்டலினியை எழுப்பி உள்ளதாக கூறி உள்ளார். நம் உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன .
அவை அனைத்துக்கும் தனித்தனியான மூல பலன்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஆயிரம் மலர் இழை போன்ற நமது மூளையில் கொண்டு சென்று புதைத்து விட வேண்டும் . வந்த ஐந்து அல்லது ஆறு மனிதர்கள் என்பது பஞ்சிந்திரியா மற்றும் அறிஷாவர்கங்களைக் குறிக்கும். அவற்றையும் புதைக்க வேண்டும். பெரிய பாம்பு , நான் புதைத்தேன் , பயணம் போன்ற வார்த்தைகள் வான்ச்வாக்களை அழித்த கதை. பலசாலிப் பெண் என்பது மாயை. நம்முடைய அறியாமையினால் உண்மையை உணர மறுக்கின்றோம். அதனால்தான் வாழ்வில் பல விதமான இன்ப துன்பங்கள் தோன்றுகின்றன. ஆகவே மாயாவையும் நம் மனதில் இருந்து துரத்தி அழிக்க வேண்டும். அதன் பின்னரும் தொடரும் வான்ச்வாக்களே வந்தவர்கள் வாயில் போட்ட இறைச்சி. பிராமணன் என்பது அவனுடைய ஜாதியைக் குறிக்கவில்லை. அவனுடைய பிரமன் என்ற நிலை அது. அதை அடையும் போதுதான் ஆனந்தம் அடைகிறான் என்பதை குறிக்கும் விதத்தில் ரோஜாப்பூவை கூறினார் . ஆகா முதலில் வந்த ஐந்து மனிதர், அடுத்த ஐந்து மனிதர்கள் மற்றும் பெண் மணியை சேர்த்தது பதினோரு பேர்கள் பதினோரு ரூபாயைகுறிக்கலாம்.
மறுநாள் பாபா மிகக் கோபமாக இருந்தார். பலருக்கும் கடுமையான சொல் பிரயோகம், சிலருக்கு அடி, ஆனால் என்றும்போல் மற்ற வேலைகள் தொடர்ந்தன. ச்யாம்தாஸ் மூணரை மணிக்கு பாபாவிடம் சென்றபோது 'என்ன உனக்கு பதினோரு ரூபாய் கிடைத்ததா என்றார். ச்யாம்தாஸ் கூறினார் 'அந்த பதினோரு ரூபாய் போதியைப் பற்றிய கதை என்றால் ஆமாம் , ஆனால் எந்த போதியை படிப்பது?' பாபா கூறினார் ' எனக்கும் உனக்கும் நடக்கும் உரையாடலைப் பற்றிய போதியைப் படி' அது ச்யாம்தாசுக்கு இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எதை படிப்பது? கீதையா இல்லை தியானேஸ்வரியையா? பாபா கூறினார், 'போய் பாபு சாஹேப் படிக்கும் போதியை எடுத்து வா' . அதில் இருந்து பதினோராம் பகுதி பாகவதத்தை எடுத்துக் கொடுத்த பாபா 'தினமும் இதைப் படி. அதன் அர்த்தத்தை புரிந்து கொள். அதை மற்றவர்களுக்கும் கூறத் தேவை இல்லை. அது உன் மனதுக்கு மட்டுமே விளங்க வேண்டும். அல்லா என்றும் நல்லதே செய்வார்'
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment