Wednesday, August 11, 2010

My miracle with Saima-Gowrivakkam Sai temple Chennai.

ன்பானவர்களே ,

இன்று சகோதரி ஆஷாலதாவின் மற்றும் ஒரு அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன். படித்து மகிழுங்கள்.
மனிஷா

ஆஷா லதாவின் இன்னொரு அனுபவம்

நாங்கள் கடந்த 6-7 வருடங்களாக கௌரிவாக்கத்தில் உள்ள சாயியின் ஆலயத்துக்கு சென்று வருகின்றோம். குருஸ்தான் பூஜையை பெண்களை செய்கிறார்கள். ஒரு நாள் என் தாயார் அந்த பூஜைக்கு செல்லலாம் எனக் கூறி அழைத்தாள் . நாங்கள் சென்றோம். ஆலய பண்டிதரின் மகள் அருமையாக பூஜை செய்து கொண்டு இருந்தாள். என்னிடம் அபிஷேகம் செய்யுமாறு கூறிவிட்டு ஆடைகளை எடுத்து வந்தாள்.

அதற்கு முன்னர் சாயிமாவிற்கு எந்த ஆடையை உடுத்துவார்கள் என்று குழம்பினோம். என்ன அதிசயம். அவருக்கு அன்று அணிவிக்க வந்த ஆடை என்னுடைய சூடிதாரின் அதே நிறம், அதே பொருள், அதே சித்திரக் கலை. அவருடைய சால்வையும் என் சூடிதாரும் ஒரே துணியில் வெட்டி எடுக்கப்பட்டவையோ என்பது போல இருந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இன்றும் நான் அந்த சுடிதாரைப் போட்டுக் கொள்ளும்போது சாயியின் சால்வையை போட்டுக் கொண்டுள்ளது போல உணருகிறேன்.

பல முறை அப்படிப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. கிட்டத்தட்ட அதே நிறம், அதே துணி இருந்துள்ளது. ஆனால் இன்றைக்குப் போல அதே சித்திரக் கலை, அதே நிறம், அதே துணி என சற்றும் மாறாமல் அனைத்தும் ஒன்றாக இருந்ததே இல்லை.

இந்த ஆலயத்தில் இன்னொரு விசேஷம் என்ன எனில் சாயிக்கு அபிஷேகம் செய்ய இரண்டு அல்லது மூன்று படிகள் ஏறிப்போய் சீரடியில் செய்வது போலவே அதை செய்யலாம். அபிஷேக நேரத்தின்போது எவர் செல்கின்றார்களோ அவர்களே சாயிமாவை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டலாம் . ஒரு முறை நாங்கள்அதை செய்ய ஆசைப்பட்டு பண்டிதரிடம் அனுமதி வாங்கிச் சென்றோம் .

அதை செய்யும் போது ஒருவருக்கு ஏற்படும் படபடப்பு, பயம், எல்லை இல்லா இன்பம் மற்றும் பரிபூரண மன அமைதி போன்றவை விவரிக்க முடியாதவை . பண்டிதர் கூறினார், '' அதை செய்யும் போது பயப்பட வேண்டாம். சாயி நம்முடையவர். அவருடைய கால்களையும், கைகளையும் அலம்பிவிட்டு துடைப்பது நம் கடமை''. ஆனால் உண்மையை சொன்னால் என்னால் அவருடைய கால் பகுதியை தொட முடியவில்லை.

அங்கு ரத்த நாளங்கள் போன்று கல்லில் வரிகள் இருந்தன. ஆனாலும் அதை பய பக்தியுடன் செய்த போது அவருடைய கால்கள் மிருதுவாக உயிருடன் உள்ள கால்களைப் போலவே இருந்தது. அதை முடித்துவிட்டு கீழே இறங்கினோம். என் தந்தை ஷாம்பூ உள்ளதினால் அந்த பளிங்குத் தரை வழுக்கும் எனவும் ஆகவே என்னை ஜாக்கிரதையாக இறங்குமாறுக் கூறினார். நான் கூறினேன்,' கவலைப் படாதே, சாயி என் கையை பிடித்துக் கொண்டு உள்ளார் . ஒன்றும் ஆகாது'
அந்த சம்பாஷனை தொடர்ந்தது. ஆனால் என் தந்தை கீழே விழுந்தார். நல்ல வேளையாக தன்னை சற்று நிலைபடுத்திக் கொண்டு விட்டதினால் அடிபடவில்லை. நான் தந்தையிடம் கூறினேன், 'பார்த்தாயா, நீ என்னை ஜாக்கிரதையாக இருக்குமாறு என் மீது கவலைப்பட்டுக் கூறினாய். ஆனால் சாயி என்னை பாதுகாப்பார் என்று நான் நம்பினேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நீ விழுந்தாய். ஆகவே நாம் என்ன ஆனாலும் சரி என சாயி மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.