Wednesday, August 4, 2010

Devotee In Contact With Baba -Sadhu Bayya.



அன்பானவர்களே
இந்த போட்டோவை உற்றுப் பாருங்கள். தன் குழந்தையின் மீது அன்பு காட்டும் முகம் போல பாபாவின் முகம் உள்ளது அல்லவா? நான் இந்த போட்டோவை பார்த்துக் கொண்டே இருக்கையில் காந்தம் போன்ற அவருடைய கண்களை உற்று நோக்கியபோதும் அவருடைய கால்களின் மீதுதான் என் கவனம் சென்றது. காரணம் ஒருவர் பாபாவின் கண்களையும் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் முடிவில் அவருடைய பாதங்களில்தான் மனது போகும். ( அதை வணங்க) . இந்த போட்டோ வந்த கதை இது. இந்த போட்டோவை வைத்துள்ள சாது பய்யாவின் குடும்பத்தின் இரண்டு அனுபவங்களைப் படியுங்கள்

1915 ஆம் ஆண்டு பாபா இந்த போட்டோவை சாது பையாவுக்கு பலராம் மற்றும் முகத்ராம் என்பவர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பினார். அந்த போட்டோ அவரிடம் 08 .02 .1915 அன்று, தச்நவமி தினமான செவ்வாய் கிழமை போய் சேர்ந்தது. அதை திக்ஷிட் வாடாவில் வைத்தனர். இந்த போட்டோ மூலம் நான் உன் வீட்டிற்கு வந்து விட்டேன். என்னைக் கேட்காமல் நீ இனி சீரடிக்கு வர வேண்டாம் என்ற கடிதமும் இருந்தது.

அந்த போட்டோவை ஒரு சிம்மாசனத்தின் மீது வைத்து ருத்ராபிஷேகமும் பூஜையும் செய்து அன்னதானமும் செய்தனர். முகத்ராம் வீட்டின் மீது ஏறி ஆன்மீகக் கொடி ஒன்றை ஏற்ற முயன்றார். திடீரென கைகளைத் தூக்க முடியவில்லை. கீழே விழ இருந்தார்.

அதே நேரத்தில் சீரடியில் இருந்த பாபா தன்னுடைய பக்தர் ஒருவரிடம் தன் கைக்கு மசாஜ் செய்யுமாறு கூறி, இப்படி முணுமுணுத்தார். 'அல்லா மாலிக் சாது பய்யா கறிபோன் கா வாலி ஹை, அல்லாசே படா கோன் ஹை' அதாவது ஏழைகளுக்கு அல்லாவை விட்டால் வேறு யார் துணை? அல்லவை விட யார் பெரியவர்?.

அப்படி அவர் கூறிக்கொண்டு இருக்கையிலேயே முகத்ராம் கைகளில் தோன்றிய வலி மறைந்தது. கொடியை ஏற்றிவிட்டார். இப்படியாக பாபா தொலைவில் இருந்தாலும் தன்னுடைய தீவீர பக்தரைக் காப்பாற்றினார்.

ஒருமுறை ஹர்டாவில் கொடிய பிளேகு நோய் பரவியது. அந்த நேரத்தில் சாது பய்யா அங்கிருந்து ஏழு மைல் தொலைவில் பாமிங்கோன் என்ற இடத்தில் இருந்த தன் முன்னோர் வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டில் பாபாவின் போட்டோ மட்டுமே அவருடைய தந்தைக்குத் துணை. சாது பய்யா பாபாவிற்கு கடிதம் அனுப்பி ஒரு போட்டோ கேட்டார். பாபாவும் அந்த போட்டோவுக்கு தினமும் பூஜை செய்யுமாறும் அவருடைய தந்தையை சீரடிக்கு அனுப்பி விடும்படி செய்தி அனுப்பினார்.

சில நாட்கள் பிறகு இரண்டு இறந்து போன எலிகள் அவருடைய படத்தின் கீழ் காணப்பட்டன. சாது உடனே சாயி பாபாவிடம் தகவல் அனுப்ப அவர் கூறினார் ' அல்லா மாலிக் அங்கு இருந்தார். ஆகவே கவலைப்படத் தேவை இல்லை' அதன் பின் சாது பய்யா அந்த வீட்டில்தான் தங்கி இருந்தார்.
இதில் இருந்து தெரியும் பாடம் என்ன என்றால் பாபாவிடம் சரண் அடைத்து விட்டால் எது நடந்தாலும் அது நல்லாதாகவே முடியும் என்பதே.


சாது பய்யாவுக்கு மூன்று மகன்கள் உண்டு. அவர்கள் ஆனந்த ராவ், லஷ்மண் ராவ் மற்றும் சங்கர் ராவ் என்பவர்கள் . சாது பய்யா 1937 ஆம் ஆண்டு சமாதி அடைந்து விட, பாபா அவருக்கு தந்திருந்த போடோ எவரும் கவனிக்கப்படாமல் பாமிங்கோன் என்ற இடத்தில் இருந்த அவர்களுடைய வீட்டில் ஒரு அறையில் கிடந்தது. ஒரு நாள் லஷ்மண்ராவிற்கு வினோதமான கனவு வந்தது. அதில் வந்த பாபா கூறினார் ' நான் இந்த போடோ மூலம் உன் வீட்டிற்கு வந்தேன். என்னை நீங்கள் உதாசீனப் படுத்தி விட்டீர்கள் . இரண்டு நாட்களுக்குள் வந்து ennai விடுவிக்காவிடில் என் கால்களை பூச்சிகள் தின்று விடும்' . லஷ்மண்ராவிற்கு ஒன்றுள் விளங்கவில்லை. வக்கீல் என்பதினால் வழக்கு மன்றத்துக்கு எப்போதும்போல போனார். வேலை செய்ய முடியவில்லை. எதோ குழப்பம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அன்று இரவு மீண்டும் அதே கனவு. பாபா கூறினார்.' நான் எச்சரித்தும் நீ கேட்கவில்லை. இரண்டு நாட்களில் என்னை விடுவிக்கவில்லை எனில் என் கால்களை பூச்சிகள் தின்றுவிடும்'
லஷ்மண்ராவிற்கு பயம் வந்து விட்டது. மறுநாள் வழக்கு மன்றத்துக்குப் போனார். விடுமுறை பெற்றுக்கொண்டு பாமிங்கோனில் இருந்த வீட்டுக்குப் போனார். கதவைத் திறந்தவர் திடுக்கிட்டார். வீட்டினுள் இருந்த மரத்தினால் செய்யப்பட்டு இருந்த பிரேமில் இருந்த பாபாவின் போட்டோவை அவருடைய கால்களின் கீழ்வரை கரையான்கள் அரித்து இருந்தன. அவருடைய கால் தப்பியது. இல்லை எனில் அந்த இடத்தையும் அவை அழித்து இருக்கும். உடனே அந்த போட்டோவை எடுத்து கரையான்களை அகற்றிவிட்டு, அதை இந்தூரில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று, புதிய பிரேம் போட்டு பூஜை அறையில் வைத்து பூஜைகள் செய்யத் துவங்கினார். அதை என்று அவருடைய பெண் வனிதா பாதுகாத்து வருகின்றார்.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.