Saturday, August 14, 2010

Sai Vrat Experience-Experience by Madhavi.


அன்பானவர்களே,
சாயியின் பக்தையான மாதவியின் சாயி விரத அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா



மாதவியின் அனுபவம்
நான் சாயிபாபாவின் விசேஷ நாளான வியாழன்கிழமை பிறந்தவள். நான் சிறு வயது முதலிலேயே சாயியை வணங்கி வருபவள். பாபாவின் மூலம் எனக்குக் கிடைத்த என்னுடைய அற்புதமான அனுபவத்தை படியுங்கள்.
எனக்கு என்னுடைய நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள தனியாக பாங்க் லாக்கர் எதுவும் கிடையாது. அவற்றை என்னுடைய நண்பரின் லாக்கரில்தான் வைத்து இருப்பேன். ஒரு நாள் நான் ஒரு திருமணத்துக்கு செல்ல வேண்டும் என்பதினால் அவற்றில் இருந்து சில நகைகளை எடுத்து வந்துவிட்டு, மீண்டும் பதினைந்து நாட்களுக்குப் பின் அவற்றை என் நண்பரிடம் தந்து பாங்கில் வைத்து விடுமாறு கூறினேன். அவளும் அதை மறுநாள் பாங்கில் வைத்துவிட்டு வந்தாள்.

மீண்டும் அடுத்த ஒரு மாதத்துக்குப் பின் நான் ஒரு திருமணத்துக்குச் செல்ல அந்த நகைகளை கேட்டேன். என்ன விபரீதம். அந்த நகைகளில் சுமார் 90,000 ரூபாய் மதிப்பிலான என் காதணியும் வைரத் தோட்டையும் காணவில்லை. என் நண்பியோ நான் அவளிடம் இரண்டு பெட்டிகளை மட்டுமே தந்ததாகக் கூறினாள். நானோ மூன்று பெட்டிகளை தந்திருந்தேன். என்ன செய்வது என எனக்குப் புரியவில்லை. ஏன் எனில் அவள் என்னுடைய நெருங்கிய தோழி. எப்படி அவளை நம்பாமல் இருப்பது. ஆனால் என் நகைகள் எங்கே போயிற்று? மனதுக்கு வருத்தமாக இருந்தது.

அடுத்த ஐந்து நாட்கள் எனக்கு உறக்கமே வரவில்லை. நான் என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்த என்னுடைய மகனை அழைத்து வரச் சென்றேன். பத்து நாட்கள் ஆயிற்று. நான் போனபோதுதான் சீரடிக்குச் சென்று இருந்த என்னுடைய சகோதரியும் மகனும் அங்கிருந்து திரும்பி வந்து இருந்தனர். அவர்கள் சாயியின் உடியை கொண்டு வந்து எனக்குத் தந்தனர்.

என்னுடைய சகோதரியிடம் நான் நடந்தவற்றைக் கூறினேன். அவள் என்னை ஒன்பது நாள் சாயி விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினாள். விரத முறைப்படி நான் என் நகைகள் கிடைக்கும்வரை இனிப்பு பண்டங்கள் மற்றும் மீனோ (அசைய உணவு) சாப்பிட மாட்டேன் என விரதம் இருந்தேன். சாயியின் வியாழக் கிழமை விரதத்தையும் துவக்கினேன். இரண்டு வாரம் ஆயிற்று. நான் கடுமையாக விரதம் இருந்தேன் . என் நகைகள் உடனே கிடைக்க வேண்டும் என மனதில் ஆசை தோன்றிக் கொண்டே இருந்தது.

இரண்டாம் வெள்ளிக் கிழமை என் தோழியிடம் இருந்து தொலைபேசி வந்தது. நான் அலுவலகத்தில் இருக்கும்போது போன் வந்தால் சாதாரணமாக பேசமாட்டேன். ஆகவே முதலில் அதை அலட்சியப்படுத்தினேன் என்றாலும் அவள் காரணம் இல்லாமல் செய்ய மாட்டாள் எனத் தோன்றியதினால் நான் அவளுக்கு போன் செய்தேன். அவள் தனது வீட்டில் அலமாரியை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தபோது அந்த நகை பெட்டி கிடைத்து விட்ட சந்தோஷமான செய்தியை தெரிவித்தாள். சாயியின் மகிமையை என்ன என்று கூறுவது. இரண்டே வார விரத முடிவில் என் நகைகளை சாயி மீட்டுத் தந்து விட்டாரே! அவருடைய பாதங்களில் நான் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.