Tuesday, August 17, 2010

Sai Baba changed my life-Experience of a Sai devotee.

பாபா என்னுடைய வாழ்கையை சீர்படுத்தினார்


அன்பானவர்களே
இன்று நான் மனதை நெகிழ வைக்கும் இன்னொரு சாயி பக்தையின் அனுபவத்தை வெளியிடுகிறேன்.
மனிஷா
பெயர் கூற விரும்பாத பக்தையின் அனுபவம்
நான் ஒவ்வொரு முறையும் பலரது அனுபவங்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஏதாவது அற்புதமான அனுபவம் சாயியிடம் இருந்து கிடைக்காதா என ஏங்குவது உண்டு. என்னுடைய தாயார் மிகவும் தீவீரமான சாயி பக்தை. எங்கள் வீட்டில் வாராவாரம் வியழன்கிழமை அவருடைய நாம சங்கீர்த்தனம் நடைபெறும். சில நாட்களில் நான் என் படிப்புக்காக வேறு இடத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

நான் நன்றாகப் படித்தாலும் என் வாழ்வில் சாயிபாபா பெரும் அற்புதங்களை எனக்கு செய்யவில்லை என்ற மனக் குறையில் பாபாவை விட்டுவிட்டு வேறு ஒரு சித்த யோகியிடம் சென்றேன். அதன்பின் சில நாட்களில் எனக்கு பல தொல்லைகள் ஏற்படலாயின. நான் நன்றாகப் படித்து முடித்தும் நல்ல வேலை கிடைக்கவில்லை. என் நம்பிக்கைகளை இழந்து விட்ட நான் கடவுளை நம்புவதை நிறுத்திவிட்டேன். இரண்டு வருடங்கள் அல்லாடிய பின் வேலை கிடைத்தது. அதே நேரம் எனக்கு திருமணமும் ஆகிவிட்டது. அதன்பின் எனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை - பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல- என்னுடைய மாமனார், மாமியாரிடம் கூறலாமா வேண்டாமா எனக் குழம்பினேன். என் தாயார் என்னை தைரியமாக இருந்து சாயியை நம்பிக்கொண்டு இருக்குமாறு கூறினாள். நானும் என் புகுந்த வீட்டுக்கு வந்தேன். அங்கு எனக்கு சாயியின் துணை நிறையவே கிடைத்தது. என் கணவர் நல்ல வேலையில் வெளிநாட்டில் உள்ளார். எனக்கும் விரைவாகவே விசா கிடைத்தது. நானும் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன். நான் இப்போதெல்லாம் சாயியின் ஒன்பது நாள் விரதத்தை மனதில் தோன்றும்போது அனுஷ்டிக்கின்றேன்.

முதலில் என் கணவர் மிகவும் மோசமான வேலையில் இருந்தார். அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் வேறு தொடர்பு இருந்தது. அவளுடன் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்பு வைத்து இருந்தும் அவள் இவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவள் நினைவாகவே அவர் இருந்தார். அப்படி இருந்தும் அவர் என்னிடம் நல்லமுறையில் நடந்து கொண்டார். எனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தருவார். அவளைப் பற்றி நான் கேட்டால் அவர் அவளை திட்டித் தீர்ப்பார் . அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என பாபாவை நான் பிரார்த்திப்பேன். தன் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற ஆதாங்கம் அவருக்கு இருந்தது. அதனால் அவர் மனதளவில் சோர்வுடனே இருந்தார். அவரிடம் பாபாவை நம்புமாறு நான் கூறுவேன். அவர் எந்த வேலைக்கான தேர்வுக்கு போனாலும் அவருக்கு பாபாவின் வீபுதியை கொடுப்பேன். எனக்கும் அடிக்கடி பாபா கனவில் வருவார். எனக்கும் சில சொந்த உடல்நலப் பிரச்சனை வந்தது. அதையும் என் கணவரிடம் கூற முடியாமல் தவித்தேன்.

என் கணவருக்கு ஒரு நல்ல கம்பனியில் இருந்து தேர்வுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என பாபாவை வேண்டினேன். அப்போது ஒரு நாள் அவர் காதலியிடம் இருந்து எனக்கு தொலைபேசி வந்தது. அவரை அவள் கேவலமாகத் திட்டினாள். அவரை விட்டுவிட்டுச் சென்று விடுமாறு எனக்கு அறிவுரை தந்தாள். அப்படி நடந்தால் தான் அவரிடம் வந்துவிடலாம் என எண்ணினாளோ என்னவோ தெரியாது. அவரிடம் நான் மிகவும் அன்பாக இருந்தாலும் எனக்குத் தெரியாமல் அவளுடன் அவர் தொடர்பு வைத்து இருந்தது எனக்கு தெரிய வந்தது. என் மனதில் வருத்தம் ஏற்பட்டது. நான் பாபாவிடம் அவள் முகத்திரையை கிழிக்க வேண்டும் என வேண்டினேன். மீண்டும் அவளிடம் இருந்து தொலைபேசி வர அவளிடம் உனக்கு அவர் மீது எத்தனை காதல் இருந்தால் அவரை நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நான் கேட்டதற்கு அவள் வாழ்கையில் உயர்வு இல்லாமல் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என பொய் கூறினாள். நாளடைவில் அவர் குடிக்க ஆரம்பித்தார். சிகரெட் பிடித்தார். அமைதி இன்றி தவித்தார். ஆனாலும் என்னிடம் காட்டிய அன்பை குறைக்கவில்லை. வேறு வழி தெரியாமல் நான் பாபாவின் விரதத்தை துவக்கினேன்.

அதை துவக்கிய சில நாட்களிலேயே அவர் மெல்ல மெல்ல அவளை புரிந்துகொள்ளத் துவங்கினார். அவளை மறக்கத் துவங்கி என்னிடம் அதிக அன்பு காட்டினார். அப்போதுதான் அந்த வெளிநாட்டுக்கான வேலைக்கு தேர்வு வந்தது. தான் தேர்வில் சரியாக செய்யவில்லை என அவர் நினைத்தார். ஆனால் அதற்க்கு மாறாக அவரை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் தேர்வு பெற்றார். அவருக்கு தேர்வு ஆனதும் மீண்டும் அவளிடம் இருந்து அவருக்கு தொலைபேசி வந்தது. அவர் அதை ஒதுக்கினார். பாபாவின் அருளினால் அவளை எப்போது முற்றிலுமாக மறந்து விட்டார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். பாபாவே என்னுடைய வாழ்கையை சீராக்கி விட்டார் என்பதினால் அவருக்கு நான் மனதார நன்றி கூறிக்கொண்டே இருக்கின்றேன்.

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.