Wednesday, August 25, 2010

Devotee In Contact With Baba-Uddhavesh alias Shyamdas Baba-(Part -3)இதற்கு முன் ச்யாம்தாஸின் இரண்டு அனுபவங்களைப் படித்தோம் . இப்போது நீங்கள் படிக்க இருக்கும் அனுபவம் நீண்டது. இனி படியுங்கள்.
மனிஷா


ச்யாம்தாஸ்சுடன் ஒரு பக்தர் குழு துவாரகாவுக்கு கடல் மூலம் யாத்திரை சென்றது. ச்யாம்தாஸிடம் டிக்கட்டுகளும் சிறிது பணமும் இருந்தது. அவற்றை ஒரு பர்சில் வைத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பயணத்தின் போது கப்பலின் ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த போது அவருடைய பாக்கெட்டில் இருந்த பர்ஸ் கடலில் விழுந்து விட்டது. அவரிடம் டிக்கட்டும் இல்லை, பணமும் இல்லை. ஆனால் அவரிடம் கிளம்புவதற்கு முன்னால் டிக்கட்டு இருந்ததினால் கப்பல் அதிகாரி இப்போது டிக்கட்டு இல்லாவிடில் பரவயில்லை என விட்டு விட்டார்.

அது சரி போய் இறங்கியவுடன் பணத்துக்கு என்ன செய்வது? அன்று இரவு அவருடைய மகனான கோபால் கிரிதரிடம் ஒரு பகிர் சென்று 'உடனே உன் தந்தைக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்' என்றார். கிரிதர் தன்னிடம் வந்தவர் யார் என்பதை நன்றாகப் பார்க்க இங்கும் அங்கும் தேடினார். வந்தவர் கிடைக்கவில்லை. போகட்டும் என உறங்கத் துவங்கினார். மீண்டும் அதே பகீரின் கோபமான குரல் ' உன் தந்தை அங்கு தவிக்கின்றார். உடனே பணத்துக்கு ஏற்பாடு செய் என்றேன் அல்லவா? நீ உறங்கிக் கொண்டு இருகிறாயே' . கிரிதர் எழுந்து உட்கார்ந்தார். எவரையும் காணவில்லை. கதவும் பூட்டி உள்ளது.

மறு நாள் காலை அவருக்கு இன்சுரன்ஸ் கம்பனியில் இருந்து எதோ பணம் வந்தது. உடனே தனது தந்தைக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் செய்தார். ச்யாம்தாசுக்கு பணம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. பயணம் நன்கு முடிந்தது . வீடு திரும்பியவர் கிரிதரை என்ன நடந்தது எனக் கேட்க அவர் விஷயத்தைக் கூறினார்.

சிறிது நாட்களுக்குப் பின் சீரடிக்கு சென்றார் ச்யாம்தாஸ். கோபெர்கோனில் இருந்து சீரடி செல்ல ஒரு டோங்காவும் கிடைக்கவில்லை. சரி என கோதாவரி நதியில் குளித்து விட்டு தத்தர் ஆலயம் சென்று தரிசனம் செய்த பின் வெளியில் வந்தால் ஒரு டோங்காவில் இருவர் இருந்தனர். மூன்றாவது ஆள் வரவில்லை என்பதினால் அவரை அழைத்தனர். அவரும் அதில் ஏறிச் சென்றார். அவரிடம் டோங்காவாலா வண்டிக்கு வாடகையாக ஐந்து ரூபாய்க்கு பதில் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுகொண்டான்.

துவாரகாமாயிக்கு சென்று துலே தரிசனத்தை முடித்துக் கொண்டு பாபாவைக் காணச் சென்றார். அவர் படே பாபாவுடன் அமர்ந்து இருந்தார். பாபாவிடம் படே பாபா 'அதோ பாருங்கள் ச்யாம்தாஸ் உங்களைக் காண வந்து விட்டார்' என்றார். அதைக் கேட்ட பாபா 'அவனைத்தான் நான் இத்தனை நாளும் காப்பாற்றி வருகிறேனே, இன்னமும் காப்பாற்ற உள்ளேனே ' என்றார். அதன் பின் ச்யாம்தாசிடம் 'நீதான் உன் பணத்தை கடலில் போட்டு விட்டாயே, அல்லா உனக்கு பணமும் அனுப்ப ஏற்பாடு செய்து குடிக்க தண்ணீரும் தந்தார் அல்லவா' என்றார் . அதைக் கேட்ட ச்யாம்தாஸ் கண்களில் கண்ணீர் பெருகி ஓட பாபாவின் கால்களில் தலையை வைத்துக் கொண்டு அழுதார். பதினைந்து நிமிடம் அப்படியே இருந்தவரை தூக்கி எழுப்பினார் பாபா. 'சரி, சரி எழுந்து என் பக்கத்தில் அமர்ந்து கொள்' என்றார்.

தான் துவாரகாவுக்கு பயணம் செய்த போது ச்யாம்தாஸ் அத்வாலாவின் த்யானேச்வரி என்ற புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார். அவருடைய பர்சும் டிக்கட்டும் கடலில் விழுந்து விட்டதினால் அவர் மனது வருத்தமுற்று அதை தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவர் மனதில் நினைத்தார் எப்போது' பாபா அதை படிக்குமாறு கூறுகின்றாரோ அப்போதுதான் இனி அதைப் படிப்பேன்'.

சீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது அது பற்றி பாபா எதுவுமே கூறவில்லை, தட்சணையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் எப்போதும் போல ஏகாதசி அன்று பாபாவுக்கு கடிதம் எழுதினர். பதில் வந்தது. இரண்டு வருடம் கழிந்தது. ஒருமுறை பாபாவுக்கு ச்யாம்தாசின் கடிதங்களை கேசவ காட்கில் என்பவர் படித்துக் காட்டிகொண்டு இருந்தபோது பாபா 'உடனே அவனைக் கிளம்பி வரச் சொல் என்றார்' .
அதன் பின் என்ன ஆயிற்று?.......

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.