Wednesday, August 11, 2010

Devotee In Contact With Baba-Ram Chandra Sita Ram Dev alias Balabhau.

பாபா சாதாரண மனிதர் போலத் தெரிந்தாலும் அவர் அபார ஆற்றல் மிக்கவர். தனது பக்தர்களுக்கு என்ன நன்மை வேண்டுமோ அதை செய்பவர். தன்னுடைய பக்தர்களின் அனைத்துஎண்ண அலைகளையும் அறிந்தவர், அவர்களுக்கும் கருணை செய்பவர். அவர் கருணை பெற்ற ஒரு பக்தரின் அனுபவம் இதோ
மனிஷா

ராம் சந்திர சீதாராம் தேவ் அல்லது பலப்பாகு என்பவருக்கு தாஸ் குண மகராஜ் மற்றும் அமீர் சக்கார் காட்டிக் என்ற இறைச்சி விற்பவர் மூலம் பாபா பற்றி தெரிய வந்தது. அவர்கள் இருவரும் பாபா பற்றி மிகவும் பெருமையாகப் பேசி வந்ததினால் ஒரு நாள் கிருஷ்ணா படேல் என்பவரிடம் சென்று தம் அக்கல்கோட்டிற்கு செல்லலாம் என அழைக்க அவர் அதற்குப் போகும் வழியிலேதான் சீரடி உள்ளதாகவும் அங்கு சென்றுவிட்டு அக்கல்கோட்டிற்கு செல்லலாம் என கூற சரி என முடிவு செய்தனர். கிளம்பியவர்கள் சீரடிக்குச் சென்று அங்குள்ள கணபதி ஆலயத்தில் தங்கினர்.

அவர்கள் பாபாவை தரிசனம் செய்தபோது அவர் கூறினார் 'நான் அக்கல்கோட்டிற்கு செல்ல வேண்டும்'. அதைக் கேட்ட பலப்பாகு வியந்தார். பாபா தன மனதை புரிந்து கொண்டு விட்டாரே என நினைத்தார். மறுநாள் பலப்பாகு அக்கல்கோட்டுக்கு கிளம்பிச் சென்றார்.

அதன் பிறகு அவர் பாபாவிடம் மிக அதிகமான ஈடுபாடு கொண்டார். தீபாவளிக்கு சீரடிக்கு சென்றார். பெரும் கூட்டம் இருந்தாலும் பாபாவுடன் இரவு எட்டு மணி வரை இருந்தார். பாபாவிடம் தனக்கு உபதேசம் செய்து தன்னுடைய குருவாகும்படிவேண்டினார் . பாபா கூறினார் '' ஒருவருக்கு தனியாக குரு என்பவர் தேவை இல்லை. நாம் என்ன விதைகிறோமோ அதற்கு ஏற்றவாரே பலன் கிடைப்பது போல உன் உள்ளத்தில் இருந்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடைகின்றதோ அதன்படி செய். நாம்தான் நம்மை சரிவர வைத்துக் கொண்டால் நம் உள்ளமே நமக்கு குருவாகிவிடும்''

ராம் சந்திரவிற்கு ஏற்கனவே ரத்னகிரியில் சம்ப்ரதாய குரு இருந்தாலும் பாபாவை அணுகி அவரிடம் இருந்தே உபதேசம் பெற விரும்பினார். அதனால் அக்கல்கோட்டிலும், பண்டார்பூரிலும் அவருக்கு முன்னர் இருந்த ஈடுபாடுகள் குறைந்தன.

ராம் சந்திர இரண்டு இடங்களில் வேலை செய்து வந்தார். அந்தேரியில் போஸ்ட் மாஸ்டராகவும், உள்ளூரில் பள்ளி வாத்தியாராகவும் இருந்தார். ராம் சந்திரா மற்றும் அவருடைய மனைவி எப்போது சீரடிக்குச் சென்றாலும் பாபா அவர்களை பல நாட்கள் அங்கிருந்து போக விட மாட்டார். பல நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்ததினால் அவருக்கு பள்ளியில் பிரச்சனை ஏற்பட அந்த வேலையே அவர் விட்டு விட்டார்.

ஸ்டாம்ப் விற்பனை செய்பவராக இருந்ததில் ரூபாய் 20 -25 வருமானம் வர அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. அவருடைய பொருளாதார நிலை நன்றாகவே இருந்தது. தனக்கு பிரச்சனை ஏற்பட்டால் பாபாவின் முன்னால் (படம்) சீட்டு குலுக்கிப் போட்டு விடை பெற்றுக் கொள்வார்.

அவர் அந்தேரியில் வசித்துக் கொண்டு இருந்தபோது அங்கு பல கொள்ளைகள் நடந்து வந்தன. பக்கத்தில் இருந்த ஒருவருடைய வீட்டில் இருந்தவர்களை பயங்கரமாக அடித்துப் போட்டு விட்டு திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர் என்ற செய்தியைக் கேட்டு பயந்து போனவர் பாபாவிடம் தம்மைக் காக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அன்று இரவு பாபா அவருடைய கனவில் தோன்றி தான் பத்து படான்களுடன் (மும்பையில் வசித்து வந்த அஜானுபாகான ஈரானியர்கள்) வருவதாகவும் கவலைப் பட வேண்டாம் என்றும் கூறினார்.

அந்த நேரத்தில் ரயில் நிலையத்தாரின் சொந்த இடத்தில் துணிகளை துவைத்துக் கொண்டு இருந்த பத்து வண்னான்களை இனி அங்கு துவைக்க விட மாட்டோம் என ரயில் நிர்வாகம் கூறி விட்டதினால் அவர்கள் ராம் சந்திராவிடம் வந்து அந்த இடத்தின் பக்கத்தில் உள்ள காலியாக உள்ள அவரது இடத்தில் குடுசைகளைப் போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பத்து வண்னான்களும் கேட்க ராம் சந்திர ஒப்புக் கொண்டார். காரணம் அவர்கள் தமக்கு பாது காப்பாக இருப்பார்கள், வாடகை மூலம் வருமானமும் வரும்என்பதே .

ஒருமுறை அவர்கள் வீட்டுக் கிணறு வற்றிவிட்டது. பாபாவின் ஆசியைப் பெற்று அவர் அறிவுறுத்திய இடத்தில் இன்னொரு கிணறு வெட்ட அதில் இருந்து மிக அதிக அளவில் நீர் கிடைத்தது.

அடுத்து தாம் ஐந்து வீடுகளை கட்ட இருந்தபோது அதன் வரை படத்துடன் பாபாவிடம் சென்று தனது பொருளாதார நிலையையும் கூறி ஆசி கேட்டபோது அவர் தரையில் இருபத்தி ஐந்து கோடுகள் போட்டு ஒரு வரிக்கு ஒரு ரூபாய் என இருபத்தி ஐந்து ரூபாய் தருமாறு கேட்டார். அதைக் கொடுத்து விட்டார். முதலில் ஐந்தே வீடுகள் கட்ட எண்ணி இருந்தவர் மெல்ல மெல்ல வீட்டை கட்ட துவங்க 1920 ஆம் ஆண்டு முடிந்த வீட்டில் இருபத்தி ஐந்து வீடுகளை கட்டும்படி ஆயிற்று. இன்றும் அந்த வீடு அப்படியே உள்ளது.

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.