Baba Communicate with me through message-Experience of Avinash Kaur.
அன்பானவர்களே
அனுபவம்-1
அனுபவம்-2
அனுபவம்-3
அனுபவம்-4
அனுபவம்-5
அனுபவம்-7
அனுபவம்-8
அனுபவம்-9
அனுபவம்-10
அனுபவம்-11
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயி பாபாவுக்கு ஜெய்....சாயி குருநானக் நம்மை காப்பற்றட்டும்
(Translated into Tamil by Santhipiriya)
இன்று அவினாஷ் கவுர் என்கின்ற சாயி பக்தை தனது அனுபவத்தை தெரிவிக்கின்றார். அவருக்கு சாயி பாபா பலமுறை தனது அறிவுரைகளை தந்து வருகிறாராம். படித்து மகிழுங்கள்
மனிஷா அனுபவம்-1
நான் ஒருமுறை 'பேஸ் புக்கை' பார்த்துக் கொண்டு இருந்தபோது அதில் சாயி பாபாவின் அருள் கிடைக்கும் ஒரு பகுதியைப் பார்த்தேன். அதில் பாபாவின் அருளை வேண்டி நம் டெலிபோன் எண்ணை பதிவு செய்தால் நம்முடைய SMS சிற்கு தினமும் பாபாவின் ஒரு செய்தி வரும். ( பாபாவின் அருளை வேண்டிக் கொண்டு ON BLESSING என்ற இடத்தில் சென்று அதை 919870807070 என்ற எண்ணில் அனுப்ப வேண்டும். இது இந்தியாவில் மட்டுமே உள்ளது ) . நான் உடனடியாக அதில் என்னுடைய எண்ணை பதிவு செய்ததும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் எனக்கு வந்த செய்தி இது "ஒன்றை நினைவில் வைத்துக் கொள் . மழை மேகம் வரும், போகும். ஆனால் நான் அது போல அல்ல. உன்னுடன் என்றும் இருப்பேன்" . அதைப் படித்ததும் நான் ஆனந்தம் அடைந்தேன். எனக்கு பாபா அருள் புரிந்துவிட்டார் என. நன்றி பாபா, நன்றி.
அது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். என்னுடைய தாயாருக்கு டெங்கு ஜுரம் வந்துவிட்டது. ஆகவே நான் "yoursaibaba.com" என்ற இணையதளத்தில் சென்று என் தாயாருக்காக அவரை வேண்டிக் கொண்டேன். எனக்கு உடனடியாக அதில் கிடைத்த பதில் இது " நோய் வந்தவர் எவராக இருந்தாலும் அந்த நோய்வாய்பட்டவர்கள் முன் நான் சென்று நிற்கும்போது அவர்களுடைய வியாதிகள் குணம் அடைந்து விடும்" நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய தாயாரை அவர் குணமாக்கி விடுவார். ஆகவே அந்த பதில் கிடைத்ததும் என் தாயாருக்கு நான் பாபாவின் உடியுடன் தண்ணீரைக் கலந்து கொடுத்தேன் . ஒரே வாரத்தில் அவள் உடல் நலம் அடைந்தாள்.
ஒரு நாள் நான் மிகவும் கவலையுடன் அமர்ந்து இருந்தேன். அது பல சொந்த காரணத்தனால் ஏற்பட்டது. அன்று பாபாவிடம் இருந்து எனக்கு கிடைத்த செய்தி இது " நானிருக்க பயம் ஏன்?" . பாபா என்னை பாதுகாத்து வரும் உனக்கு உளமார்ந்த நன்றி
அனுபவம்-4
அது 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி. நான் சாயிபாபாவின் இணையதளத்தை பார்க்க அதை திறந்தேன்.அப்போது மனதில் நினைத்தேன் " பாபாவின் உடை இன்று சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும்" . அதை என்னுடைய சகோதரனிடமும் கூறினேன். என்ன ஆச்சர்யம் அதை திறந்ததும் பாபா நல்ல சிவப்பு மரூன் கலரில் உடை அணிந்து இருந்தார். என் சகோதரனுக்கு மகிழ்ச்சி ஆகிவிட்டது. மறுநாள் அவர் ஆரஞ்சு நிற உடையில் இருப்பார் என்று நினைத்தேன். அன்று இரவு தூங்கப் போகும் முன் எங்களுடைய குருநாதரான குருநானக் தேவ்ஜியின் போதனைகளை படித்துக் கொண்டு இருந்தேன். நாங்கள் சர்தார்கள் என்பதினால் அந்தப் பழக்கம் உண்டு. நான் அதை படிக்கும்போதும் சாயிபாபாவை நினைத்துக் கொண்டேதான் படிப்பேன்.
அதை படித்து முடித்தப் பின் நான் நினைத்தேன் " பாபா நீயும் குரு நானக் தேவ்ஜியும் ஒருவரே என்பதை எனக்குக் காட்டு". மறுநாள் எனக்கு கிடைத்த SMS செய்தியில் வந்து இருந்தது இந்த வாசகம் "நீ என்னை குருவாக நினைக்கலாம். ஆனால் நானும் என்னுடைய குருவின் சீடனே" அதைக் கண்ட எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அடுத்து நான் இணையதளத்தை திறக்க அதில் நான் நினைத்த அதே கலர் உடையுடன் பாபா காட்சி தந்து கொண்டு இருந்தார். அதைக் கண்ட நான் எனக்கு பாபா நிச்சயமாக அருள் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்பதை உணர்ந்தேன்.
அன்று புதுவருடம். நான் பாபாவின் ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அன்று பாபா ஆரஞ்சு நிற உடையில் காட்சி தந்து கொண்டு இருந்தார். அடுத்து குருத்வாராவுக்குச் சென்றேன். அங்கோ குருநானக் தேவ்ஜியின் புத்தகத்தை ஆரஞ்சு நிறத் துணியால் போர்த்தி இருந்தார்கள். அந்த ஆனந்தத்தை நான் எப்படி விளக்குவது? குருநானக் தேவ்ஜி எங்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய கடவுள். ஆகா இருவரும் ஒருவரே என்பதை உணர்ந்து அது முதல் நான் எங்களுடைய குரு போதனைகளையும் பாபாவின் முன்னிலையில் படிக்கத் துவங்கினேன். பாபாவே எங்களுடைய குரு நானக் தேவ்ஜி.
அதை படித்து முடித்தப் பின் நான் நினைத்தேன் " பாபா நீயும் குரு நானக் தேவ்ஜியும் ஒருவரே என்பதை எனக்குக் காட்டு". மறுநாள் எனக்கு கிடைத்த SMS செய்தியில் வந்து இருந்தது இந்த வாசகம் "நீ என்னை குருவாக நினைக்கலாம். ஆனால் நானும் என்னுடைய குருவின் சீடனே" அதைக் கண்ட எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அடுத்து நான் இணையதளத்தை திறக்க அதில் நான் நினைத்த அதே கலர் உடையுடன் பாபா காட்சி தந்து கொண்டு இருந்தார். அதைக் கண்ட நான் எனக்கு பாபா நிச்சயமாக அருள் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்பதை உணர்ந்தேன்.
அன்று புதுவருடம். நான் பாபாவின் ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அன்று பாபா ஆரஞ்சு நிற உடையில் காட்சி தந்து கொண்டு இருந்தார். அடுத்து குருத்வாராவுக்குச் சென்றேன். அங்கோ குருநானக் தேவ்ஜியின் புத்தகத்தை ஆரஞ்சு நிறத் துணியால் போர்த்தி இருந்தார்கள். அந்த ஆனந்தத்தை நான் எப்படி விளக்குவது? குருநானக் தேவ்ஜி எங்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய கடவுள். ஆகா இருவரும் ஒருவரே என்பதை உணர்ந்து அது முதல் நான் எங்களுடைய குரு போதனைகளையும் பாபாவின் முன்னிலையில் படிக்கத் துவங்கினேன். பாபாவே எங்களுடைய குரு நானக் தேவ்ஜி.
அனுபவம்-5
என்னுடைய தோழி ஒருவளுடன் எனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தினால் அவள் என்னை தனது திருமணத்துக்கு அழைக்கவில்லை. எனக்கு அது வருத்தமாக இருந்தது. மறுநாள் நான் பேஸ் புக்கை திறந்தபோது அதிக கிடைத்த செய்தி இது " நீ உன்னைவிட்டுப் போனவர்களைக் நினைத்து ஏன் வருந்துகிறாய்? நான் அல்லவா உன்னுடன் என்றும் இருக்கிறேன்". அதன் பின் அந்த வேதனை என் மனதை விட்டு அகன்றது.
சில காலம் சென்றது. ஒரு நாள் மீண்டும் எனக்கு என் தோழியின் நினைவு வந்து வேதனைப் படுத்தியது. நான் பாபாவிடம் "என் தவறுகளை மன்னித்து விடு. என் தோழி எனக்கு மீண்டும் கிடைப்பாளா? நான் என்ன அத்தனைக் கெட்டவளா? பாபா நீ என்னுடன் என்றும் இருந்து கொண்டு உன்னுடைய அன்பைக் காட்டி வருவாயா ?"
அடுத்த நாள் எனக்கு கிடைத்த செய்தி இது " ஆமாம், நீ கேட்ட அனைத்தையும் தந்துவிட்டேன். நல்லவனோ, கெட்டவனோ, யாராக இருந்தாலும் அவன் என்னுடையவன்" . அதைக் கண்ட என் கண்களில் நீர் வழிந்தது. என்னை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். உலகிற்கே அவர் கடவுள்.
அனுபவம்-6
அனுபவம்-6
எனக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது. நான் பாபாவின் ஆலயத்துக்குள் இருந்தேன். அப்போது சில திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டார்கள். நான் ஓடிச் சென்று ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டு பாபாவை வேண்டினேன். 'என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்று'. அடுத்த நிமிடம் அவர்கள் வெளியில் போய்விட்டார்கள். உடனே நான் ஒரு கூடை நிறைய பூவை எடுத்துக் கொண்டு பாபாவின் சிலை இருந்த இடத்தில் சென்றேன். ஆனால் அங்கு பாபாவைக் காணவில்லை. அவர் இருந்த இடத்தில் ஒரு சிவ லிங்கமே இருந்தது. நான் திக்கித்துப் போய் அவர் சிலை இருந்த இடத்தை வணங்கினேன். அப்போது பாபா என் என் அருகில் அமர்ந்து கொண்டு இருந்ததை உணர்ந்தேன். அடுத்த நாள் காலை எனக்கு கிடைத்த செய்தி இது " நான் என்னுடைய குழந்தைகளை என்றும் காப்பாற்றுவேன். அவர்களை நான் காக்கவில்லை என்றால் வேறு யாரால் காப்பாற்ற முடியும் ?". அதைப் படித்த எனக்கு நடந்தது கனவா என்ற சந்தேகம் வந்தது.
அனுபவம்-7
ஒரு நாள் நான் கவலையில் உறங்கிக் கொண்டு இருந்தேன். என்னுடைய வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற சிந்தனையில் இருந்த நான் 'பாபா நீதான் என்னைக் காக்க வேண்டும் 'என்று நினைத்தபடி படுத்து இருந்தேன். மறுநாள் எனக்கு கிடைத்த செய்தி இது "நான் இங்கேயே இருக்க உனக்கு பயம் ஏன் வர வேண்டும்?". அதைப் படித்தப் பின் பாபா என்னுடன் இருக்கின்றார் என்ற எண்ணம் வலுவடைந்தது.
அனுபவம்-8
மற்றும் இன்னொரு நாள். எனக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. என்ன செய்வது என தவித்தவாறு இருந்தேன். அன்று பாபாவின் செய்தி வந்தது "நடப்பது அனைத்துமே பகவானின் லீலைகளே". அதைப் படித்த நான் பாபா என்னை கைவிடவில்லை என்பதை உணர்ந்தேன்.
அனுபவம்-9
ஒரு நாள் நான் என்னுடைய அத்தையுடன் பாபாவின் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தோம். அப்போது எங்கள் வீட்டில் இருந்து ஒரு பூனை வெளியே ஓடியது. அதைக் கண்ட என்னுடைய அத்தை அதை காரணம் இன்றி கண்டபடி திட்டித் தீர்த்தாள். ஆனால் அது என் மனதுக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால் அதைப் பற்றி என்னால் அவளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மறுநாள் எனக்கு வந்த செய்தியில் இப்படி எழுதப்பட்டு இருந்தது " புழு, பூச்சிகள், எறும்புகள் என தெரிகின்ற, தெரியாத அனைத்து ஜீவ ராசிகளிடமும் நான் இருக்கின்றேன்". அதைக் கண்ட நான் பாபா தான் நம்முடன் இருப்பதை எப்படியாவது நமக்கு உணர்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.
அனுபவம்-10
நான் ஒருநாள் என்னுடைய அடுத்த வீட்டு பெண்மணியிடம் பாபாவுடன் நெருக்கமாக இருந்த தக்கர்ட் குடும்பத்தினரின் கதையை கூறிக் கொண்டு இருந்தேன். அடுத்த நாள் எனக்கு வந்த செய்தி இது " என் லீலைகளைப் பற்றி எவன் ஒருவன் கூறிக் கொண்டே இருக்கின்றானோ அவனுக்கு வாழ்கையில் வளத்தையும் முடிவில்லா ஆனந்தத்தையும் கொடுப்பேன்".
அனுபவம்-11
ஒரு நாள் நான் நினைத்துக் கொண்டேன், 'பாபாவின் நினைவை என்னுள் இருந்து ஒரு கணமும் மறக்கக் கூடாது. நான் என்றுமே அவரையே நினைத்து இருக்க வேண்டும்'. மறுநாள் எனக்கு வந்த செய்தி இது " அவரை என்றும் நினைத்துக் கொண்டு இருந்தால் அவர் உன்னை நிச்சயமாகக் காப்பாற்றி வருவார்". அதைப் படித்த நான் நினைத்தேன் 'பாபா என்னுடைய நினைவுகளைக் கூட புரிந்து கொண்டு எனக்கு அறிவுரை வழங்குகிறாய்'.
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயி பாபாவுக்கு ஜெய்....சாயி குருநானக் நம்மை காப்பற்றட்டும்
(Translated into Tamil by Santhipiriya)
Loading
0 comments:
Post a Comment