Shri Sai Janamsthan Mandir-Pathri
இந்த இடத்தில் உள்ளா சாயிபாபா ஆலயத்தை 1999 ஆம் ஆண்டு கட்டி உள்ளனர். அதற்குக் காரணம் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, ஆராய்ச்சி செய்து சாயி பாபா பிறந்த இடம் அதுவே என்பதை வீ. பீ. கீர் என்பவர் 1975 ஆம் ஆண்டில் கண்டறிந்ததினால் அந்த ஆலயம் அங்கு எழும்பியது.
கேர் அவர்களின் கூற்றுப்படி பாபாவே மல்சபாதியிடமும், ஸ்வாமி சாய் ஷரன் ஆனந்த் என்பவரிடமும் தான் பிறந்த இடத்தைப் பற்றி கூறி இருந்ததை தெரிந்து கொண்டு கேர் அவர்கள் பதாரிக்கு பலமுறை விஜயம் செய்து அது குறித்து ஆராய்ந்தார். அவர் அந்த இடத்தில் வழக்கறிஞ்சரும் , விவசாயியுமான தினகரராவ் சவுதரி என்பவருடன் தொடர்பு கொண்டார். அவர் மூலமே அவருடைய தந்தை அங்கு இருந்த பாவு பூசாரி என்பவரே சாயி பாபாவின் வம்சாவளியானவர் எனக் கூறிய விவரம் தெரிந்தது. அதன் பிறகு தினகரிடம் வந்த சில முஸ்லிம் பெருமக்கள் பாபா ஒரு பிராமணர் குலத்தில் பிறந்தவர் என்றும் அவரை சிறு வயதிலேயே ஒரு பகீர் அழைத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் செய்தியைக் கூறினார்கள்.
அதன் பின்னர் கேர் பதாரியில் இருந்த பல பிராமணர் குடும்பங்களை பேட்டி கண்டு அவர்களுடைய குலதெய்வம், பழக்க வழக்கங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். பூசாரி வம்சத்தினர் அனைவருமே யுஜுர்வேதிகள், ஹனுமான் வழிப்பாட்டை விரும்பியவர்கள். அதனால்தானோ என்னவோ பாபாவும் ஹனுமாரிடம் அதிக ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்? அதன் பின்னர் கேர் அவர்கள் பூசாரி வம்சத்தின் நேர் வழியில் வந்த ப்ரோப்பசர் ரகுநாத பூசாரி என்பவரை சந்தித்துமேலும் பல விஷயங்களை தெரிந்து கொண்டார்.

கிடைத்த விவரங்களின்படி சாயிபாபா தனது எட்டாவது வயதில் கடவுளைத் தேடி வீட்டை விட்டுப் போன ஹரிபாவு பூசாரி என்பவராகவே இருக்கவேண்டும் என முடிவுக்கு வர இடம் உள்ளது. அந்த ஆலயம் உள்ள இடத்தின் அடியில் தோண்டியபோது அங்கு ஆறு அடிக்கு ஆரடியில் வளைவுகளும், சுரங்கப் பாதையும் உள்ளது தெரிய வந்தது. அது மட்டும் அல்ல அதில் கங்காபூரில் உள்ளது போலவே ஹனுமார், கண்டோபா போன்றவர்களின் சிலைகளும், பூஜை பத்திரங்களும் தாமிரத்தில் செயபட்ட பஞ்ச பாத்திரங்கள் போன்றவையும் கிடைத்தன.
ஆகவே இன்றும் அதில் சில பகுதிகளை - வளைவுகள், சுரங்கப் பாதை போன்றவற்றை - வரலாற்று நினைவிற்காக அப்படியே பாதுகாத்து வருகின்றனர். ஆலயத்தின் அடிப் பகுதியில் தியான மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது.
ஆலயத்தின் டிரஸ்டிகள் வருமாறு:
திருவாளர்கள்
வீ.பீ. கேர்
எஸ்.எஸ். தாணு
தீ.வீ. சவுதரி
அப்துல்லா கான் துரானி
காளிதாஸ் சவுதரி
எஸ்.எஸ்.டாலி
எஸ்.டி. சங்க்டே
திருவாளர்கள்
வீ.பீ. கேர்
எஸ்.எஸ். தாணு
தீ.வீ. சவுதரி
அப்துல்லா கான் துரானி
காளிதாஸ் சவுதரி
எஸ்.எஸ்.டாலி
எஸ்.டி. சங்க்டே
பண்டிகைகள்/ ஆலய செய்திகள்
குரு பூர்ணிமா, ராமநவமி மற்றும் பாபாவின் மகா சமாதி தினங்கள் கொண்டாடப் படுகின்றன. அதைத் தவிர ஒருநாள் திருவிழாவாக ஹனுமான் ஜெயந்தி, ஸ்வாமி ஷரன் ஆனந்த் புன்யார்த்தி, சுவாமி ஷரன் ஆனந்த் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, தத்தாத்ரேயா ஜெயந்தி போன்ற பண்டிகைகள் நடைபெறுகின்றன. தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகின்றன.
பண்டார்பூர் வரை வருடாந்திர பாதயாத்திரை நடைபெறுகின்றது . பாபாவை பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்வார்கள். தற்போது நாநூறு பேர்களே நிற்கும் அளவுக்கு இடமுள்ள அந்த ஆலயத்தை என்னும் பெரிதாக கட்ட ஏற்பாடுகள்நடைபெறுகின்றன. துவாரகாமயியைப் போன்ற துனியையும் அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஆலயம் செல்லும் வழி
தேவநாகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவுரங்காபாத் வழியே சென்று மன்வட் ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்த பதினாறு கல் தொலைவில் உள்ள பதாரியை அடையலாம்.
காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமும் பயணம் செய்து பர்பானி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஜீப் அல்லது பஸ்ஸில் செல்லலாம்.
அவுரங்காபாத் விமான நிலையம் சென்று அங்கிருந்து வண்டியில் பயணம் செயலாம். அங்கிருந்து பதாரியை அடைய சுமார் மூணரை மணி நேரம் ஆகும்.
பாதாரியில் தங்க சாயி லாட்ஜ் ஒன்றும் உள்ளது.

(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment