Thursday, February 24, 2011

Sai Naama Sankeerthanam -Leelas of Antaryami Beloved Sadguru Sainath



அன்பானவர்களே
இன்று நான் சாயி நாம ஜப சங்கீர்த்தனத்தில் பாபா நிகழ்த்திய லீலைகளைப் பற்றிக் கூறுகின்றேன். சாயி பாபா கூறினார் '' என்னுடைய நாமத்தை எவன் ஒருவன் பக்தி பூர்வமாக உச்சரிக்கின்றானோ அவனுடைய தேவைகளையும் ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன் . சாயி, சாயி எனக் கூறும்போதே அவனுடைய அனைத்து பாவங்களும் அழிந்துவிடும் ''
சாயி அனைத்து இடங்களிலும் உள்ளார். அவரை நாம் தேடி அலையத்  தேவை இல்லை. பாபா கூறினார் '' நீ எங்கு இருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் ஒன்றை தெரிந்து கொள். நீ செய்யும் அனைத்துக் காரியங்களும் எனக்குத் தெரிந்தே இருக்கும். நான் அசைவன, அசையாதவை என அனைத்து இடத்திலும் பரவி உள்ளேன். நானே இந்த உலகை ஆட்டிப் படைப்பவன். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற மூன்று குணங்களைக் கொண்டவனும் நானே. என்னை நம்புவனுக்கு எந்த கெடுதலும் வராது, என்னை நம்பாதவனை மாயை ஆடிப் படைக்கும். இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நானேதான்'' , சாயி பக்தரான நரசிம்ஹம்ஜிக்கு கிடைத்த அற்புதமான அனுபவம் இதோ.
மனிஷா


சாயி பக்தரான நரசிம்ஹனின் அனுபவம்
நான் சமீபத்தில் சாயிநாம பாராயணம் செய்தேன். சில வருடங்களுக்கு முன் சிகாகோ நகரத்தில் இருந்த சாயி ஆலயத்தினர் ஸ்ரீ சாயி சித்ரா யாத்ரா என்ற நிகழ்ச்சியை நடத்தினர். சாயிபாபாவின் படத்தை அமெரிக்காவில் உள்ள பல ஊர்களுக்கும் எடுத்துச் சென்று எவராவது ஒருவரின் வீட்டில் வைத்து பாராயணம் செய்தனர்.
அந்த பாக்கியம் கொலம்பஸ் என்ற இடத்தில் இருந்த எனக்குக் கிடைத்தது. பாராயணத்தை தினமும் படித்து முடித்ததும் திருமதி கபார்டே என்பவர் கூறி இருந்தபடி ராஜாராம், ராஜாராம் என ஜெபித்தேன்.
மூன்று நாட்களுக்குப் பின் என் மனதில் தோன்றியது, பாராயண முடிவில் திருமதி கார்பாண்டே ராஜாராம் ராஜாராம் என ஜெபித்தபடி இருக்கையில் அதை நான் செய்யலாமா ? அன்று எனக்கு ஒரு கனவு வந்தது. பாபா தன் உடலில் சிவப்பு போர்வையை போர்த்திக் கொண்டு ( போஷாக் ) ருத்ராட்ச மாலையுடன் காட்சி தந்தார். ''பாபா கூறினார் அந்த பாடகர் பன்னிரண்டு மணி நேரம் ஜெபம் செய்துவிட்டார். நீயும் பன்னிரண்டு மணி நேர ஜெபம் செய். '' யார் அந்த பாடகர் என்பதை பாபா கூறவில்லை. மறுநாள் விழித்து எழுந்த நான் என்னுடைய மனைவியை அது குறித்துக் கேட்டேன். அவளும் அதை ஆமோதித்தாள். என்னுடைய மகளுக்கும் விடுமுறை. ஆகவே மார்ச் இருபத்தி ஒன்றாம் தேதி அதை செய்ய நாங்கள் முடிவு செய்து ஆலய அர்ச்சகரைக் கேட்டோம். அவரும் அந்த தேதியில் தசமியும் ஏகாதசியும் இருப்பதினால் மிக நல்ல நாள் என்று கூறி விட்டார்.
நாங்கள் அதனால் மகிழ்ச்சி அடைந்து பன்னிரண்டு மணி நேர நாம ஜெபத்தை துவக்கினோம். யார் யார் எத்தனை மணியில் இருந்து இருக்க வேண்டும் என்ற குறிப்புகளை தந்தபின் நாம சந்கீர்தனத்தைத் துவக்கினோம்.

அனைத்தும் தயாராகி ஆரம்பிக்க இருந்த நேரத்தில் ஒரு பக்தர் சாயிபாபாவின் பெரிய படத்தைக் கொண்டு வந்து அதை சீரடியில் இருந்து தான் கொண்டு வந்து உள்ளதாகவும் பன்னிரண்டு மணி நேர நாம சந்கீர்த்தனத்தில் அதை வைத்து விட்டுத் தர முடியுமா என்றார். நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். பாபா நீ எந்த ரூபத்திலாவது நாம சந்கீர்தனையின் போது வர வேண்டும் என நான் வேண்டிக் கொண்டு இருந்தேன். அதன் விளைவோ அது?
அடுத்த நாள் இன்னொரு பக்தர் வந்து இரண்டு வருடங்களாக தான் பிரமே போடாமல் வைத்துள்ள பாபாவின் படித்ததை பிரேம் போட்டு எடுத்து வருவதாகக் கூறினார். மீண்டும் இன்னொருரூபத்தில் பாபா!!

மூன்றாம் நாள் இந்தியாவில் இருந்து வந்திருந்த மற்றொரு பக்தர் அனைவருக்கும் பாபாவின் சிறிய புகைபடத்தையும் இன்னொருவர் சாயி சரித்திர சீடியையும் தந்தார். பாபாவின் லீலை இப்படியெல்லாமா? . ஒவ்வொரு நாளும் சாயி தான் அங்கு இருப்பதை பலவாறு காட்டிக்கொண்டே இருந்தார்.
காலை இந்து மணிக்கு காக்ட ஆரத்தியுடன் துவங்கிய நாம ஜெபம் , சாயிபாபாவின் அபிஷேகம், விஷ்ணு சகஸ்ரநாமம், நாம ஜெபம் , பாதுக பூஜா, பாதுக ஸ்தோத்திரம், மதியான ஆரத்தி மற்றும் சந்தியான ஆரத்தி என நடந்து சேஜ் ஆரத்தியுடன் எட்டு மணிக்கு முடிந்தது. பலரும் பாபா அங்கு இருபதாகவே நினைத்த அளவுக்கு அவர்களுக்கு உள் உணர்வு இருந்தது எனக் கூறினர்.

அடுத்த நான்கு நாட்களும் குரு பாதுகா பூஜையை மாலை ஏழு முதல் எட்டு வரை நாங்கள் செய்தோம். அடுத்த திங்கள் கிழமை சாயி சந்ஸ்தானில் இருந்து சாயி லீலா புத்தகத்தை அனுப்பி இருந்தார்கள். ஆதன் வெளி அட்டையில் இருந்த காட்சி என்ன தெரியுமா? நான் கனவில் பார்த்த அதே ரூபத்தில் பாபா- சிவப்பு போஷக் போர்த்திக் கொண்டு , ருத்ராக்ஷ மாலை கழுத்தில் அணிந்து கொண்டு இருந்த பாபா, என் கனவில் எப்படி தோன்றி இருந்தாரோ அதே ரூபத்தில்!!!!

என் கண்களில் கண்ணீர் வழிந்தது . அனைத்தையும் அறிந்துள்ளவர் சாயி பாபா என்பது உண்மைதானே.
( Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.