Tuesday, February 1, 2011

Shirdi Sai Baba Temple-Gowrivakkam Chennai


அன்பானவர்களே,
சென்னையில் உள்ள சாயிபாபா ஆலயங்களைப் பற்றி சகோதரிகள் ஆஷாலதாவும் சிவசங்கரியும் தந்து வருகின்றனர். சிவசங்கரியிடம் இருந்து கவரிவாக்கம் என்ற இடத்தில் உள்ள சாயி பாபா ஆலயம் பற்றி செய்தி கிடைத்தது. அது குறித்து நான் ஆஷாலதாவிடம் ஒரு முறைக் கூறினேன். அவள் அதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். ஆஷாலதா அங்கு சென்று அந்த ஆலயத்தில் பாபா நடத்திய லீலைகளைப் பற்றியும், அந்த ஆலயத்தில் ஜகத்குரு சாயிபிதா எப்படி சாயி மாதாவாக மாறினார் என்பது பற்றியும் எழுதி அனுப்ப, அந்த ஆலய வரலாற்றுச் செய்திகளையும் , திரு பெருமாள் என்பவர் எப்படி  பாபாவின் பக்தராக மாறி சீரடிக்குச் சென்றார் என்ற கதையையும் சிவசங்கரி அனுப்பினார். இரண்டையும் ஒன்றது சேர்த்தே நான் இங்கு தந்துள்ளேன்.
மனிஷா

 
சாயி ஆலய வரலாறும், திரு பெருமாள் சாயிபாபாவின்
குழந்தையாக ஆன கதையும்.

திருமதி குலசேகர பெருமாள் என்பவர் பாபாவின் பக்தை . ஆனால் முதலில் அவருடைய கணவர் பெருமாள் பாபாவின் பக்தர் அல்ல. பெருமாள் மின்வாரியத்தில் நிதிப் பிரிவின் உதவி அதிகாரியாக இருந்தவர். அவர் 1986 ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு முப்பது வயதான போதுஒரு முறை வேலை விஷயமாக மும்பாய்க்குச் சென்று இருந்தார். அப்போது அவருடைய மனைவி அங்கிருந்து சீரடி பக்கத்திதான் உள்ளது என்பதால் அங்கு சென்று விட்டு வரும்படிக் கூறினாள். அவரும் ஒரு நாள் வேலையை விரைவாக முடித்துக் கொண்ட பின் அதிகாலை நான்கு மணிக்கு ரயில் நிலையம் சென்று சீரடிக்குச் செல்ல டிக்கெட் கேட்டார். டிக்கட் தரும் நபர் அவரிடம் விக்டோரியா டெர்மினஸ் என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மன்மாடு என்ற இடம் சென்று அங்கிருந்து கொபர்கோன் என்ற இடத்துக்குச் சென்று அங்கிருந்துதான் சீரடிக்குச் செல்ல வேண்டும் என்றார். அப்போது அனைத்து ரயில்களும் முப்பது நிமிடம் தாமதமாகப் புறப்பட உள்ளது என்ற செய்தி கிடைத்தது.
மன்மாடு எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க இருப்பதே நிமிடங்கள் இருந்தன. எப்படி விக்டோரியா டெர்மினஸ் செல்வது? அப்போது அவர் அருகில் முன்பின் தெரியாத ஒருவர் வந்தார். அவர் பெருமாளிடம் என்ன பிரச்சனை என்று தானே கேட்க பெருமாள் தன்னுடைய பிரச்சனையைக் கூற , 'வாருங்கள் நான் அழைத்துச் செல்கின்றேன்' என வந்தவர் கூறிவிட்டு அவரை வெளியில் அழைத்துச் சென்று ஒரு வாடகை காரில் ஏற்றி பதினைத்தே நிமிடத்தில் மன்மாடுக்கு அழைத்துச் சென்றார். இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் உள்ளன, போய் வண்டியை பிடியுங்கள் எனக் கூறியபின் அவர் சென்று விட்டார். என்ன நடந்தது என்று ஒரு நிமிடம் திக்கித்த பெருமாள் வந்தவரை தேடினார், காணவில்லை. அவர் பாபாவாகவே இருக்க வேண்டும் என நினைத்தார்.

 
அடுத்து பயணிக்கும் டிக்கெட்டை வாங்கச் சென்றால் அங்கு ஒரே கூட்டம். அப்போது அவர் அருகில் வண்டியின் பரிசோதகர் வந்தார். பெருமாளிடம் நீங்கள் எங்கே போக வேண்டும்?, என்று கேட்டார் . பெருமாள் சீரடிக்குச் செல்லும் விவரத்தைக் கூற அவரை கட்டிப் பிடித்துக் கொண்டவர் அவரை ரயிலில் ஏற்றி அமர வைத்து விட்டுப் போய் விட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. எவராவது எனக்கு சீரடி செல்ல வழி காட்ட தன்னுடன் வரக் கூடாதா என யோசனை செய்து கொண்டு இருந்த போது அவர் அருகில் ஒரு பதினைத்து வயது பையன் வந்து அமர்ந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்தார் பெருமாள். என்ன அதிசயம் , அவன் தானும் சீரடிக்குச் செல்வதாக கூறி அவரை அழைத்துச் செல்வதாகக் கூறினான். ரயில் கோபெர்கோனை அடைந்தது. அவரை டோங்கா ஒன்றில் ஏற்றிக் கொண்டு சீரடியை அடைந்தான். அங்கு அவரை இரண்டு கப் டீ குடிக்கச் சொல்லி விட்டு தங்கவும் ஒரு அறையை ஏற்பாடு செய்து தந்தான். அடுத்து அவருக்கு அனைத்து ஆரத்திக்கும் அழைத்துச் சென்று தரிசனமும் செய்ய வைத்தான். பெருமாளுக்கும் அந்த பையன் யார், தனக்கு ஏன் இப்படி உதவுகிறான் என்று கேட்கத் தோன்றவே இல்லை. ஒரு இயந்திரம் போல அனைத்தையும் அவன் கூறியபடியே செய்தார். அவருக்கு பிடித்த தென் இந்திய உணவை காலை, மதியம் மற்றும் இரவு என அனைத்து வேளைக்கும் ஏற்பாடு செய்தான். அனைத்தும் முடிந்ததும் மறுநாள் காலை மன்மாடுக்குச் செல்ல எட்டு மணிக்கு பஸ் உள்ளதாகக் கூறி அவரை அழைத்துக் கொண்டு பஸ் நிலையம் சென்றான். 'உங்களுடைய நண்பர்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டு உள்ளனர்' எனக் கூற பெருமாள் வியந்தார். அவனுக்கு எப்படி மும்பைக்கு என் நண்பர்களும் வந்து உள்ளனர் எனத் தெரியும் என வியந்தார். மன்மாடுக்குச் சென்றனர். ரயில் நிலையம் சென்று டிகத்ட் வாங்க வரிசையில் நின்ற பெருமாள் அந்த பையனிடம் பேசத் திரும்பினார். அவன் காணவில்லை. பெருமாளுக்கு மனதில் தெரிந்தது, தன்னுடன் அத்தனை நேரமும் இருந்து உதவி செய்தது பாபாவேதான். ஆனந்தத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார். அதைக் கண்டவர்கள் அவர் பணத்தைத் தொலைத்துவிட்டு அழுகிறார் என நினைத்துக் கொண்டு சென்றனர். அவர் அரைமணி நேரம் அழுதார். அதன் பின் ரயில் ஏறி ஊர் திரும்பினார்.
சென்னை வந்ததும் அவருக்கு பாபாவின் மீதான பக்தி மிக அதிகம் ஆயிற்று. தினமும் மயிலாப்பூரில் இருந்த பாபாவின் ஆலயத்துக்குச் சென்றார். தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் தனது பெரும்பாலான நேரத்தை சாயிநாதர் ஆலயத்திலேயே கழித்தார். அவருடைய சேவையைக் கண்ட ஆலயத்து நிர்வாகிகள் அவரை ஆலயத்திலேயே வேலைக்கு வைத்துக் கொண்டனர். சுமார் பதிமூன்று வருடம் அந்த ஆலயத்தில் பணி புரிந்தவர், சில காரணங்களுக்காக அந்த வேலையில் இருந்து நின்று விட்டார்.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கூட அவரால் சாயிபாபாவுக்கு சேவை செய்ய முடியாமல் இருக்க முடியவில்லை. ஒரு நாள் அவருடைய கனவில் சாயிபாபா வந்து ' உன்னுடைய நான் என்ற என்ணத்தை விட்டுவிட்டு என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விடு. எனக்கு ஒரு ஆலயத்தை நீயே கட்டு' . அதைக் கேட்டவர் தன்னிடம் பணம் இல்லையே என்றார். பாபாவோ ' நான் என்பதை விட்டு விடு. முயற்சி செய். முடியும்' என்றார். அதைக் கேட்டு அவர் காலடியில் விழுந்து வணங்க குனிந்தவர் சடாலென கண் விழித்து தான் கண்டது கனவு என்பதை உணர்ந்தார். மீண்டும் தன்னை மறந்து அழுதார்.
அதன் பிறகு பாபா அவருடைய கனவில் அடிக்கடி வந்து என்ன செய்ய வேண்டும் என அவருக்கு வழி காட்டிக் கொண்டே இருந்தார். பணம் சேரத் துவங்கியது. பெருமாள் ஆலயம் கட்டத் துவங்கினார். 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தி ஏழாம் தேதியண்டு ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.


 
ஆலயத்திற்கு பயன் படுத்தவேண்டிய செங்கல், ஆலயத்தின் நிறம் , வாஸ்த்து போன்ற அனைத்தையும் பாபாவே கூறி அவருக்கு வழி காட்டினார். இன்று அந்த ஆலயத்தில் பாபா நமக்கு கண்களுக்குத் தெரியாமல் ஒரு தாயாராக வாழ்ந்து வருகின்றார். தன்னுடைய மனைவியே தனக்கு குரு என்கின்றார் பெருமாள். கருப்பு வண்ண சிலையில் பாபா பெண் உருவில் காட்சி தருகின்றார் .
 
பெருமாள்ஜி

மாத விலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் பாபாவின் உடியை பயன் படுத்த வேண்டாம் என அந்த ஆலயத்தின் பூசாரியான பெருமாள்ஜி கூறுவது உண்டு. ஒரு முறை பாபா அவரிடம் ' நானும் அப்படிப்பட்ட உபத்தரவத்தை அனுபவிக்கின்றேன் எனும்போது நீ ஏன் அப்படிப்பட்ட நாட்களில் பெண்கள் உடியை உபயோகிப்பதை தடுகின்றாய்?' என்றார். ' 'சரி பாபா அவர்களை உடியை வைத்துக் கொள்ள அனுமதிகின்றேன், ஆனால் ஆலயத்தை வலம் வருவதை மட்டும் தவிர்க்கச் சொல்கிறேன் ' என்றார் பெருமால்ஜி . சாயிபாபா சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அதற்குப் பின்னரே பெருமாளுக்குப் புரிந்தது, பாபாவும் தனது தாயாரே என்பது. அது முதல் அவர் அந்த ஆலயத்தின் சாயிபாபா சிலைக்கு பெண்கள் உடுத்துவது போன்ற ஆடைகளையே அணிவிக்கத் துவங்கினார்.

 
ஒரு நாள் ரமேஷ் என்ற சிமண்ட் விற்கும் வியாபாரி வந்து 'நான் விஷ்ணுவின் மனைவியான தாயார் அலமேலு போட்டுக் கொள்ளும் நாமத்தை போன்ற ஒரு ஆபரணத்தை தங்கத்தில் செய்து உள்ளேன், இதை பாபாவுக்கு அணிவிபீர்களா' எனக் கேட்டார். முதலில் அதை ஏற்க மறுத்தார் பூசாரி. ஆனால் பாபா கூறினார் ' என்னை பெண்களைப் போல அழகுபடுத்தும் நீ அதை ஏன் ஏற்க மறுகின்றாய்? அதை வாங்கிக் கொண்டு சனிக்கிழமைகளில் என் நெற்றியில் அதை நாமமாக வை ' என்றார். அது முதல் அனைத்து நாளும் சாயிபாபாவின் நெற்றியில் மூன்று வெள்ளைக் கோடுகள் உடியினால் போட்டு வந்தவர் சனிக் கிழமைகளில் அந்த தங்க நாமத்தை வைக்கத் துவங்கினார்.

குருஸ்தானில் ஒரு அற்புத லீலை

 
குருஸ்தானில் இருந்த ஒரு வேப்ப மரத்தின் அடிப் பகுதியில் இருந்த மரம் நீண்ட வட்டம் போல ஆகத் துவங்கி வலது காலை தூக்கி இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து உள்ள சாயி பாபா போன்ற உருவில் ஆயிற்று. ( படத்தில் பார்க்கவும்)

சாயிபாபாவுக்கு அணிவிக்க தினமும் பூ மாலை வந்த கதை

ஆலயம் கட்டி முடித்தப் பின் சாயி பாபாவுக்கு தினமும் மாலை அணிவிக்கத் தேவையான பூக்கள் பக்கத்தில் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு நாள் பாபாவுக்கு அணிவிக்கா ஒரு பூ கூட கிடைக்கவில்லை. என்ன செய்வது என குழம்பினார் பூசாரியான பெருமாள்ஜி. திடீரென அப்போது ஒருவர் வந்தார். அவர் வந்து' ஈச்சம்பாகத்து கடல் அருகில் உள்ள சாயி ஆலயத்துக்கு தான் தினமும் போய் வந்ததாகவும், யாரோ இங்கு பக்கத்திலேயே பாபாவின் ஆலயம் வந்து உள்ளது எனக் கூறியதினால் பாபாவுக்கு தான் மாலை எடுத்து வந்துள்ளதாகவும் கூறி பூ மாலையை தந்தார். அன்று முதல் இன்று வரை அவர் தினமும் ஆலயத்துக்கு தவறாமல் பூ அனுப்பி வருகின்றார்.


மற்றும் ஒரு சம்பவம்
ஒரு முறை பெருமாள்ஜி மிகவும் சிரமப்பட்டு சேமித்த பணத்தில் பூஜைக்குத் தேவையான பஞ்சார்தியை வாங்கினார். அது காணாமல் போய் விட்டது. பெருமாள்ஜி அழத் துவங்கினார். பாபா அவர் முன் தோன்றிக் கேட்டார். 'நீ ஏன் அழுகின்றாய்?' . பூசாரி தான் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் வாங்கிய பதினைந்தாயிரம் ரூபாய் விலையிலான பஞ்சார்த்தி காணாமல் போய்விட்டதினால் துக்கம் ஏற்பட்டு அழுவதாகக் கூற அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும் தன்னுடைய பக்தர் ஒருவர் வந்து அதற்கான பணத்தைத் தருவார் எனவும் பாபா கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய பணக்கார மருத்துவர் குடும்பத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நன்கொடை வாங்கிக் கொள்ளவா என பாபாவிடம் அனுமதி கேட்டார் பூசாரி. பாபா அவரை தடுத்து விட்டார். அதன் பின் இன்னொரு பெண்மணி- கவுசல்யா - என்பவர் வந்து தான் தனது சேமிப்பான ஐந்து லட்ச ரூபாயை கொண்டு வந்துள்ளதாகவும், பாபாவின் சேவைக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை எடுத்துக் கொள்ளுமாறு பெருமாள்ஜீயிடம் கூற அவர் தயங்கினார். பாபாவை நினைத்தார். அதற்குள் அந்த பெண்மணியே பதினைந்தாயிரம் ரூபாய் தந்து விட்டுச் சென்றார். என்னே பாபாவின் லீலை? தொலைந்து போன பொருளின் விலைக்கு பணம் கிடைத்து விட்டது புதிதாக அதை வாங்க!


 
நாம் ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் சிறிய கூடம் உள்ளது. அதன் வலது புறத்தில் சாயிபாபாவின் சிலை உள்ளது. இடதுபுறத்தில் விநாயகரின் சிலை உள்ளது. ஆலயத்தில் பாபாவின் வெண்கலச் சிலை உள்ளது.

 
சாயிபாபாவின் சிலைக்கு பக்கத்தில் சிறிய அறை உள்ளது. அதை துவாரகாமாயி என்கின்றனர். அதில் அமர்ந்து உள்ள காட்சியில் பாபா உள்ளார். அதே அறையில் பாபாவின் பெரிய ஒரு படமும், எரிந்து கொண்டு இருக்கும் விளக்கும் உள்ளன. வெளிப் பகுதியில் குருஸ்தான் உள்ளது. அங்கு பெரிய வேப்ப மரம் உள்ளது.

ஆலய விவரம்
ஆலயம் சென்னையில் மேடவாக்கம் - தாம்பரம் சாலையில் உள்ளது. அதில் உள்ள சாயியின் பெயர் 'சாயிமா' 
ஆலய விலாசம்
9, சாயிபாபா ஆலயத் தெருவு
மேடவாக்காம்
சென்னை 600073
தொலைபேசி எண் : 044 -22780195

ஆலயத்தில் அன்னதானம் தினமும் நடை பெறுகின்றது. புது வருடம், ஸ்ரீராம நவமி, குருபூர்ணிமா, சாயி புன்னியதிதி மற்றும் மகாசிவரத்தரி போன்ற தினங்களில் பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. ஜனவரி மாதம்விளக்கு பூஜை நடைபெறுகின்றது.

 
( விவரங்களை தொகுத்துத் தந்தவர்கள்: ஆஷாலதா, USA மற்றும் சிவசங்கரி தியாகராஜன், இந்தியா .)

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.