Thursday, February 24, 2011

My first encounter with Sai -Experience of Sai devotee Kaveri



அன்பானவர்களே
சாயி சரித்திரத்தில் கூறியுள்ளது போல எவர் கண்களுக்கும் புலப்படாமல், எங்கெல்லாமோ உள்ளவர்களை அவர்களை அறியாமலேயே பாபா தன் பக்கத்தில் இழுத்து அவர்களை தன்னுடைய பக்தனாக்கி கருணை புரிகின்றார் . தனது நண்பிகளான இரண்டு சகோதரிகளுடைய அனுபவங்களைப் பற்றி அஷாலதா என்ற பெண்மணி எழுதி உள்ளார் .அதை இனி படியுங்கள்
மனிஷா



சகோதரி காவேரியின் அனுபவம்
1993 -94 ஆண்டு என நினைக்கின்றேன். நான் என்னுடைய பெற்றோர்களுடன் திருப்பதி பாலாஜி ஆலயத்திற்குச் சென்று இருந்தேன். நாங்கள் அறையில் தங்கி இருந்த போது திருப்பதிக்கு என்னுடைய ஒரு மாமாவும் வந்திருந்தார். எங்களுக்குத் அது தெரியாது. எதேற்சையாக அங்கு எங்களை சந்தித்தவர் எனக்கு சாயிபாபாவின் ஒரு படத்தைத் தந்தார். அவர் ஒரு சாயி பக்தர். எனக்கு அப்போது தெரியாது நானும் சாயியின் உலகத்தில் பிரவேசிக்க இருப்பவள் என்பது.
ஆண்டுகள் கடந்தன. 1996 -97 என நினைக்கின்றேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்னை பகவான் கல்கி என்பவர் பேச இருந்த சத்சங்கத்திற்கு வருமாறு அழைத்துச் சென்றனர். அது நடந்த இடம் ஒரு பெரிய ஆலயத்தின் எதிரில் இருந்தது. ஆர்வம் மிகுதியினால் நான் அந்த ஆலயத்தில் என்ன உள்ளது எனப் பார்க்கலாம் என்று சென்றேன். அதன் பின்தான் தெரிந்தது அது மயிலாப்பூரில் உள்ள சாயிபாபாஆலயம் என்பது. உள்ளே நுழைந்ததும் மனதில் அமைதி ஏற்பட்டது. நெடு நேரம் நின்று கொண்டு பாபாவை வழிபட்டேன். அதன் பின் நான் பலமுறை அந்த ஆலயத்துக்குச் சென்றேன். பல மணி நேரம் அமர்ந்து இருப்பேன். மனது அமைதியாக இருக்கும். என்னுடைய மாமா மூலம் சாயிபாபாவைப் பற்றிஇன்னும் தெரிந்து கொண்டேன். சாயி சரித்திரத்தை வாங்கிக் கொண்டேன்.

என் மனதில் சாயிபாபா ஆலயம், துவாரகாமாயி, சாவடி போன்ற இடங்களுக்குச் செல்வது போல கனவு கண்டு கொண்டு இருந்தேன். அதன் பின் மீண்டும் ஒரு அற்புதம். ஒரு நாள் என்னுடைய மாமா எனக்கு போன் செய்து தான் சீரடிக்குப் போக உள்ளதாகவும் எனக்கும் சேர்த்து டிக்கட் வாங்கி உள்ளதாகவும் கூறினார். என் மனது அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. சீரடிக்குச் சென்றதும், இரவே சென்று காகட ஆரத்தியைப் பார்க்க கியூவில் நின்றேன். என்னை மறந்து ஆனந்தம் அடைந்தேன். அந்த ஆனந்தத்தை எப்படிச் சொல்வது ? திரும்பி வரும்போது சீரடியின் மண்ணை சிறிது எடுத்து வந்தேன்.
எனக்கு திருமணத்துக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பித்தனர். நான் மயிலாப்பூரில் இருந்த பாபாவின் ஆலயத்துக்குச் சென்று அவருடைய சம்மதத்தை மானசீகமாக வேண்டினேன். வெளியிலே வந்து என் வண்டியை எடுத்த போது, கீழே எதோ கிடப்பதை உணர்ந்தேன் . அதை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு விநாயகர் விக்ரகம். என் மனதுக்குப் புரிந்தது, என் திருமணத்துக்கு பாபா சம்மதம்தந்து விட்டார். ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.

எனக்கு திருமணம் ஆகியது. என்ன ஒற்றுமை. என்னுடைய கணவரும் பாபாவின் பக்தர். அவர் நான் செய்யும் அனைத்து புண்ணிய காரியங்களுக்கும் முழு ஆதரவு தருகின்றார். சாயி பாபாவின் கருணைதான் என்னே !
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.