Shirdi Sai Baba Temple:Salem-Tamilnadu
சீரடி சாயிபாபா ஆலயம், சேலம், தமிழ்நாடு
அன்பானவர்களேஉலகெங்கும் பல இடங்களில் சாயிபாபாவுக்கு ஆலயங்கள் எழுந்து உள்ளன. அவற்றைப் பற்றி சாயிபாபாவின் பக்தர்களே எழுதி அனுப்புகின்றார்கள். அதில் ஒன்றுதான் சேலத்தில் உள்ளா சாயிபாபா ஆலயம். இனி அதைப் பற்றிப் படியுங்கள்.
மனிஷா
1994 ஆம் ஆண்டு திரு எஸ். என். ஸ்ரீநிவாசன் என்பவரால் கட்டப்பட்டது இந்த சேலத்தில் உள்ள ஆலயம். அதை அவர் ஏன் கட்டினார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றாலும் அவர் சாயி பாபாவை பெரிதும் போற்றி வணங்கி வந்தவர் என்பது மட்டும் தெரிகின்றது.
இந்த ஆலயம் பெரிய இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன. அதை சுற்றி ஒரு சுவரும் எழுப்பட்டு உள்ளது. ஆலயத்தின் எதிரில் உள்ள சிறிய அறையில்தான் நேவித்தியங்கள் செய்யப்படுகின்றன. அதன் எதிரில் துவாரகாமாயியும், துனிக்கு செல்லும் வாசலும் உள்ளது.
2008 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆலய பூசாரி குரு பூர்ணிமா தினத்தன்று ஒரு சாயிபாபாவின் சிலைக்கு பதிலாக அங்கு இரண்டு பாபாக்கள் இருந்ததைக் கண்டுள்ளார். காலை எட்டரை மணி இருக்கும், துனி உள்ள அறைக்குச் சென்று எப்போதும் போல அங்கு செய்யவேண்டிய பூஜைகளை செய்யப் போனபோது அந்த துனியின் மீது சாயிபாபா அமர்ந்து இருந்ததைக் கண்டார். பயந்து போனவர் உடனே குரல் கொடுத்து பூப்பறிக்கும் வேலைக்காரியை அழைத்தார். அவளும் ஓடி வந்து அந்த அதிசயக் காட்சியைக் கண்டு உள்ளாள். அவர்கள் மட்டும் அல்ல அங்கு அப்போது இருந்த வேறு ஏழு அல்லது எட்டு பேர்கள் கூட அந்த காட்சியை கண்டுள்ளனர். அவர்கள் பாக்கியசாலிகள். பாபா துனி மீது அமர்ந்து இருந்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாராம்.
அந்த காட்சியை அப்போது அங்கு சென்று இருந்த ஒரு பயணி தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார். அவர் அதை அனுப்புவார் என்று காத்து உள்ளனர். அந்த ஆலயவளாகம் பெரிதாக உள்ளதினால் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பாபாவை பல்லக்கில் தூக்கி வைத்துக் கொண்டு மூன்று முறை ஆலயத்தை சுற்றி வலம் வருவார்கள். பல்லக்கின் படம் கீழே தரப்பட்டு உள்ளது.
பல்லக்கை தூக்கி கொண்டு முதலில் ஆண்கள் வலம் வருவார்கள். அதன் பின்னர் பெண்களும் கடைசி சுற்றில் இரண்டு பிரிவினரும் கலந்து கொண்டு பல்லக்கைத் தூக்கிச் செல்வார்கள். அப்போது சிறு பெண்கள் நடனமாடிக் கொண்டே அதனுடன் செல்வார்கள். பாபாவின் சிலைக்கு அருகில் செல்ல பக்தர்களை அனுமதிப்பது இல்லை. பாபாவை இந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அவர் நம்மை பார்த்துக் கொண்டே இருப்பது போல இருக்கும். ஆலயக் கூடத்தில் பாபாவின் பெரிய படங்கள் மாட்டப்பட்டு உள்ளன.
ஆலயத்தின் இருபக்க சுவர்களிலும் பாபாவின் பதினோரு பொன்மொழிகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் செதுக்கி உள்ளனர்.
ஆலயத்தை சென்று அடைய வேண்டுமானால் கலெக்டர் பங்களாவை கடந்து
செஹென்று வலப் புறம் திரும்ப வேண்டும். அந்த சாலையில் சென்று கொண்டே இருந்தால் வழி எங்கும் பாபாவின் உருவப் படங்கள் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு வழி காடும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.
பெங்களூரில் இருந்து நான்கு மணி நேரத்திலும், சென்னையில் இருந்து ஐந்து மணி நேரத்திலும் ரயிலில் பயணம் செய்து சேலத்தை அடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லும் தூரத்திலேயே ஆலயம் உள்ளது.
பெங்களூரில் இருந்து நான்கு மணி நேரத்திலும், சென்னையில் இருந்து ஐந்து மணி நேரத்திலும் ரயிலில் பயணம் செய்து சேலத்தை அடையலாம். ரயில் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லும் தூரத்திலேயே ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி
Shri Shirdi Saibaba Foundation
Salem
தமிழ்நாடு
தொலைபேசி எண் : 0427 – 2400909
Shri Shirdi Saibaba Foundation
Law college bus stop, Indira Nagar, Chinna Kollapatti,
Yercaud AdivaramSalem
தமிழ்நாடு
தொலைபேசி எண் : 0427 – 2400909
Loading
0 comments:
Post a Comment