Thursday, February 24, 2011

Try Hard-Experience by Rathna


அன்பானவர்களே
பாபா மீது நம்பிக்கை வைத்தால் அவர் நம்மை கை விடுவது இல்லை என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம். இதோ ரத்னாவின் அனுபவத்தைப் படியுங்கள்
மனிஷா


 
ரத்னா கூறுவதைக் கேளுங்கள்
'' சமீபத்தில்தான் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அதற்கும் நான் படித்த படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. அது அனைவருக்கும் தெரியும் என்பதினால் எனக்கு பயிற்சி தரத் துவங்கினர். அதற்குப் பிறகே என்னை நிரந்தர வேலையில் அமர்த்துவார்கள். ஒரு நாள் என்னுடைய பயிற்சியில் அவர்கள் கூறியதை புரிந்து கொள்ள முடியவில்லை. வீடு திரும்பும் வழி நெடுக மனதில் அழுது கொண்டே வந்தேன். ''பாபா இத்தனை கஷ்டப்பட்டு வேலை செய்தும் என்னால் வேலையைப்  புரிந்து கொள்ள முடியவில்லையே. என்ன செய்வது. இதில் நான் தேறாவிடில் வேலைக்கு ஆபத்து ஆகிவிடுமே, என்னை இந்த வேலையை  புரிந்து கொள்ள வழி செய்வாயா?''
நான் வீட்டிற்குச் சென்றபோது என்னுடைய ஒன்பது வயதான மகன் என்னிடம் வந்தான். அவன் எனக்கு ஒரு வாழ்த்து மடல் செய்து உள்ளதாகக் கூறி அதை என்னிடம் தந்தான். அதை பிரித்துப் பார்த்தேன். அதில் எழுதி இருந்தது '' அம்மா , நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன் . வேலை கடினமாக இருந்தாலும் கவலைப் படாதே. நீதான் என்றும் உன்னுடைய குழுவில் திறமைசாலி என்பதை மறந்து விடாதே. இன்னும் முயற்சி செய்'' அதை சாயிபாபாவே என்னுடைய மகன் மூலமாக எனக்கு அளித்து உள்ள தாரக மந்திரமாகக் கருதினேன்.
என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய மகனை வாரி அணைத்தேன். ' ''நன்றி ,மகனே நன்றி, நிச்சயமாக நான் இன்னும் கடுமையாக உழைத்து மன வலிமையை இழக்காமல் இருப்பேன்'' என்றேன். இன்றும் கூட வேலை கடினமாகத்தான் உள்ளது, ஆனாலும் நான் பாபாவை நினைத்துக் கொண்டே கடுமையாக உழைகின்றேன். என் தாரக மந்திரம், 'இன்னும் முயற்சி செய் என்பதே'
( Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.