Wednesday, February 2, 2011

Shirdi Sai Center-Texas.


 
அன்பானவர்களே
இன்று இன்னும் ஒரு சாயிபாபாவின் ஆலயத்தைப் பற்றிக் கூற உள்ளேன். இந்த ஆலயம் அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ளது.
மனிஷா




குரு ராமச்சந்தர் எஸ். முக்கோத்திபுரம் என்பவரே இந்த ஆலயத்தை நிறுவியவர். அவர் புலோரிடா என்ற இடத்தில் இருந்த சாயி பாபா ஆலயத்தில் நாலரை ஆண்டுகள் பணி செய்துள்ளார். அவர் இந்த ஆலயத்துக்கு வந்து பூஜைகளை செய்துவிட்டு அதைக் கற்றுக் கொடுக்க பதினைந்து நாட்களுக்குத்தான் வந்தாராம். என் எனில் அந்த ஆலயத்தில் என்னொரு பண்டிதார் இருந்தார். ஆகவே அவர்களால் இரண்டாவது பூசாரியை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் சாயிநாதருக்கு வேறு நினைப்பு இருந்தது. அவர் ராமசார்யாஜுயையும் தமது ஆலயத்தின் பண்டிதராக இருக்க நினைத்து விட்டார் என்பதினால் அவர் அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டது.








 
அந்த காலத்தில் சாயியின் பக்தர்கள் டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் இருந்து புளோரிடாவுக்கு வந்து தரிசனம் செய்து விட்டுப் போவார்கள். ஏன் எனில் டெக்ஸ்சாசில் சாயிநாதர் ஆலயம் இல்லை.
2004 ஆண்டு இறுதியில் ராமசார்யுலு சீரடிக்குச் சென்றார். அங்கு சாயிபாபாவின் விக்ரகம் ஒன்றை வாங்கி வர எண்ணி ஒரு கடைக்குச் சென்றார். அந்த கடையில் விக்ரகத்தை வாங்கியவுடன் அவர் கேட்காமலேயே அந்த விக்ரகத்தை அந்த கடைக்காரர் சாயி பாபாவின் ஆலயத்துக்குள் சென்று அவருடைய காலடியில் வைத்துவிட்டு வந்து தந்தார். அது அவருக்கு மிகவும் ஆச்சர்யத்தை தந்தது.
அதை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விழாயக் கிழமைகளில் அபிஷேகம் செய்து பூஜை செய்து வரலானார். அதை தெரிந்து கொண்ட சாயி பக்தர்கள் அன்றைக்கு அவருடைய வீட்டிற்குச் செல்லத் துவங்கினார்கள். 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயம் கட்டப்படும்வரை அது தொடர்ந்தது. அந்த பூசாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது, பூஜைகளை கற்றுத் தர பதினைந்து நாட்களே வந்தவர் அங்கேயே தாங்கும் வகைக்கு அவருக்கு வேலையும் கிடைத்தது. மற்றவர்களுக்கு அத்தனை விரைவாக மற்றவர்களுக்கு கிடைக்காத பச்சை கார்டும் -அங்கேயே நிரந்தரமாக தங்க- அவருக்குக் கிடைத்தது. அவை அனைத்துமே சாயிபாபாவின் கிருபைதான் என்றே அந்த பூசாரி கூறுகின்றார்.
அவரைத் தவிர சதீஸ் ரங்கராஜன் மற்றும் கோவிந்த ரங்கராஜன் என்பவர்களும் அந்த ஆலயத்தில் அவருடன் இணைந்தனர். அவர்கள் மூவரின் மூலம் சாயி பாபா தனக்கு அந்த இடத்தைத் தவிர ப்லானோ மற்றும் இர்வின் என்ற இரண்டு இடங்களிலும் சாயி ஆலயத்தை உருவாகிக் கொண்டார்.







 
சாயி ஆலயத்தை முறைப்படி 2005 ஆம் ஆண்டு பதிவு செய்தனர். சதீஸ் அவர்கள் ஜெய்பூரில் இருந்து சாயி சிலையை செய்து கொண்டு வந்தார். அந்த சிலை ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு வந்து, பெங்களூரில் இருந்து மும்பை வந்து, அங்கிருந்து நியுயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சாலை வழியே டெக்ஸ்சாசிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சாயிபாபாவின் அற்புதம்

ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி முதல் பதிமூன்றாம் தேதிவரை ஆலயத்தில் பல பூஜைகள், ஹோமங்கள் நடை பெற்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கப்பட்டது. பதிமூன்றாம் தேதியன்று சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சிலை அதை வைக்க வேண்டிய இடத்தில் அமரவில்லை. பலரும் எத்தனையோ முயன்றும், என்ன உபகரணங்களை பயன்படுத்தியும் சிலை அதன் இடத்தில் சரிவர அமரவில்லை. அனைவரும் கண் கலங்கினர். இத்தனை கழ்டப்பட்டு கொண்டு வந்த சிலை ஏன் சரிவர அமரவில்லை என அவரிடமே வேண்டிக் கொண்டு சாயியை நினைத்து பஜனைகளை செய்யத் துவங்கினர் . என்ன அதிசயம் திடீரென அந்த சிலை மிகவும் எளிதாக அது இந்த இடத்தில் முன்னர் அமர மறுத்ததோ அதே இடத்தில் அமர்ந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் சாயி மகராஜுக்கு ஜெய், அனந்தகோடி பிரும்மாண்ட நாயக ராஜாதி ராஜ பரப்பிரும்மா சட்சிடானந்தா ஸ்ரீ சத்குரு சாயிநாத் மகராஜ் கி ஜெய் என முழங்கினர்.


 
 அதன் பின்னரே எங்களுக்குத் தெரிந்தது, பாபா ஏன் தன்னுடைய ஆசனத்தில் அமர மறுத்தார் என்பது. பூஜை நவமி திதியில் ஆரம்பித்தது, ஆனால் பாபா தசமி முகூர்த்தம் வரைக் காத்திருந்து அதன் பின்னரே தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்து உள்ளார் . ஏன் எனில் அதுவே அன்று நல்ல முகூர்த்த நேரமாம். அதை அந்த பூசாரி சொல்லித்தான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களுக்கு அதைக் கேட்டு மயிர்க்கூச்சல் எடுத்தது. சாயி எப்படியெல்லாம் தான் நினைத்ததை நடத்திக் கொள்கின்றார் என்பதை கண்டபோது மனதில் மகிழ்ச்சி நிரம்பியது.
சாயியின் சிலை பிரதிஷ்டை செயப்பாட்டு முடிந்ததும் ஆரத்திப் பாடலை ஒலிக்கும் ஒலி நாடவை போட்டால் அது வேலை செய்யவில்லை என்பதினால் பக்தர் ஒருவரை அதை பாடச் சொல்லி அனைத்தும் நடந்து முடிந்தது.
பாபாவின் புண்ணிய திதி, சிவராத்திரி, ராமநவமி, குருபூர்ணிமா தட்ட ஜெயந்தி போன்ற தினங்களில் பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. ஆரத்தி முடிவில் பிரசாதங்கள் தரப்படுகின்றன.

 
ஆலய விலாசம் :
Shirdi Sai Center of Texas
1037, West Rochelle Road,
Irving,
Texas 75062.

ஆலயம் செல்லும் வழி
Nr.Intersection from MacArthur Blvd and Rochelle Drive
- Irving.
(Temple is located next to Taj Grocers in the same complex)

தொடர்ப்பு கொள்ள
Phone :
Temple office- 972-992-2714
Mobile-214 236 4011
இணையத்தளம் http://www.shirdisairam.org/
E மெயில் : saicenter_irving@yahoo.com

ஆலய நேரங்கள்

9.00 a.m. - காக்ட ஆர்த்தி
12.00 Noon - மதயான ஆர்த்தி
(1.00-6.00 Pm - ஆலயம் மூடப்பட்டு இருக்கும் )
6.30 Pm - தூப ஆரத்தி
8.30 Pm - ஷேஜ்  ஆரத்தி
9.00 Pm - ஆலயம் மூடப்படும் நேரம்
வியாழன்  கிழமைகள்
11.00 a.m. - சாயிபாபாவுக்கு அபிஷேகம்
7.30 - 8.30 p.m. - சாயி பஜனைகள்

திங்கள் கிழமை
7.00 p.m. - சிவ அபிஷேகம்


(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.