Wednesday, November 4, 2009

B.V Narsimha Swamiji's Life in Sakori.

அவதாரப் புருஷரான உபாசினி மகராஜீன் தொடர்ப்பே நரசிம்மச்வாமிக்கு அவர் வாழ்வின் ஆன்மீகத் துறைக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்து இருந்தது. அஹமட்னகரில் இருந்து 80 கல் தொலைவில் இருந்த கோபரகோன் என்ற ஊருக்கு செல்லும் நெடும் சாலையில் இருந்தது சிட்டலி என்ற சிறிய கிராமத்தை ஓட்டிய சகோரி. அங்குதான் சுடுகாட்டை ஒட்டி இருந்தது உபாசினி மகராஜின் ஆசரமம்.
அவரைத் தேடிப்போன நரசிமைச்வாமியிடம் , ' கடைசியாக வந்து சேர்ந்தாய , உனக்காகத்தான் எத்தனை நாளும் காத்து இருந்தேன்' எனக் கூற அவருடைய வார்த்தையின் அர்த்தம் நரசிம்மஸ்வாமிக்கு புரியவில்லை.தனக்காக காத்து இருந்தாரா? ஏன்? புரியவில்லை. உபாசினி மகராஜ் சாயி பாபாவின் உதவியுடன் ஆத்மா ஞானம் பெற்றவர்.
அவரை சாயி பாபா நான்கு வருடங்கள் ஆன்மீக சாடனாவை செய்த வண்ணம் அங்கு இருக்குமாறு கூறியவர். ஆனால் என்ன காரணத்தினாலோ உபாசினி மகாராஜ் மூன்று வருடமும், பத்து மாதங்களிலுமே அந்கிருந்துஅ வெளியேறி விட்டார். அதனால்தான் அவர் சாயி பாபாவின் நேரடி வாரிசாக அமைய இருக்க முடியாமல் போயிற்றாம். ஆனாலும் அவர் சற்குருவாக இருந்தார்.
அவதார புருடரான உபாசினி மகராஜ் புகழ் எந்த அளவு பரவி இருந்தது எனில் மகாத்மா காந்தி அவரிடம் வந்து தேசிய நலனுக்காக அவருடைய ஆசிகளையும் அருளையும் தருமாறு வேண்டினாராம். அப்போது கடுமையான பல பிரச்சனைகளில் உபாசினி மகராஜ் இருந்தாலும் தன்னால் ஆனா உதவியை அவர் செய்தார். அப்போதுதான் நரசிம்ஹஸ்வாமி அவரிடம் வந்தார்.

அந்த காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் விடுதலைப் பெற்று யாகமும் யாமும் செய்ய விரும்பினர். அதற்க்கு எதிர்ப்பு இருந்ததினால் அவர்கள் விரும்பிய விடுதலையைத் தரும் வகையில் அவதார புருடரான உபாசினி மகராஜ் தம்முடைய கையில் கிருஷ்ணருடைய பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டு 65 கன்னிப் பெண்களை மணம் புரிந்து கொண்டு அவர்களை தம்முடைய ஆசிரமத்தில் தங்க வைத்துக் கொண்டு இருந்தார். அது ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
அவதார புருடரான உபாசினி மகராஜ் அறுபது வயதைத் தாண்டியவர். அவர் இருபத்தி ஐந்துக்கும் குறைவான பெண்களை மணந்து கொண்டதை விரும்பாத அவருடைய பக்தர்கள் சிலரே அந்த செயலை எதிர்த்து மும்பை மற்றும் நாக்பூர் போன்ற நீதி மன்றங்களில் வழக்கு பதிவு செய்து இருந்தனர். ஆகவே உபாசினி மகராஜ் அனைத்துநீதி மன்றங்களிலும் நேரில் ஆஜாராக வேண்டிய நிலைய ஏற்பட்டது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என்ற நிலை தோன்றியது.
அப்போது அவருக்கு உதவ எந்த வக்கிலுமே முன் வரவில்லை என்பதினால் அவர் சிறந்த வக்கீலைத் தேடிக்கொண்டு இருந்தார். அவருடைய ஆசிரமத்துக்கும் பலர் செல்வதை நிறுத்திவிட ஆசிரமம் காலியாகக் கிடந்தது.
அந்த நேரத்தில்தான் நரசிம்மஸ்வாமி அங்கு செல்ல அங்கு வந்தவரை உபாசினி மகராஜ் கேட்டுக் கொண்டதின் பேரில் தாம் உதறித்தள்ளி வைத்து விட்ட வக்கீல் தொழிலை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டார்.
சுமார் முப்பது மாதங்கள் மும்பை, நாக்பூர், அஜ்மீர் போன்ற இடங்களில் இருந்த வழக்கு மன்றங்களில் ஆஜாராகி உபாசினி மகராஜ் குற்றமற்றவர் அல்ல என விடுதலை வாங்கித்தந்தார். அப்படி பிரயாணம் செய்து வந்த பொது பல இடங்களிலும் இருந்த புனித்த தளங்களுக்கும் சென்றார். நாக்பூரில் இருந்த தாஜுத்தின் என்ற அவதார புருடர் சமாதி, ஆஜ்மீரில் குவாஜா மொயனுத்தத்தின் சிஸ்டையின் தர்கா, புஷ்கரில் பிரும்மா ஆலயம் போன்ற இடங்களுக்கும் சென்றார். புஷ்கரில் குளித்துக் கொண்டு இருந்த நரசிம்மஸ்வாமியை கொல்ல வந்த ஒரு முதலையை ஒரு சர்தார்ஜி சுட்டுக் கொல்லஅவர் பிழைத்தார். ஆனால் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு பல வருடம் நொண்டிக்கொண்டு இருக்கும் நிலையை அது ஏற்படுத்தியது.

அந்த முப்பது மாதங்களில் அவதார புருடரான உபாசினி மகராஜின் வாழ்க்கை பற்றி நிறைய அறிந்து கொண்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அதை பின்னர் உபாசினி மகராஜின் இரண்டு சீடர்களான ஸ்ரீ காகடே, ஸ்ரீ சிட்னிஸ் என்பவர்களின் உதவியுடன் சகோரி முனிவர் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அது உபாசினி மகராஜின் சீடர்களுக்கு முக்கியமான புத்தகமாக அமைந்தது. அதில் சாயி பாபா தன்னுடைய சீடர்களுக்கு எப்படி குருவிடம் பக்தி கொண்டு ஒரே மாதிரியான நிலையான மனதுடன் அவர் பேச்சைக் கேட்டு நடந்தால் கடவுளைக் காண முடியும் என்ற போதனை விவரமாக எழுதப் பட்டு இருந்தன. ரமணரைப் பற்றி முன்னர் எழுதிய ஆத்மா ஞானம் என்ற புத்தகம் எப்படி ரமணரைப் பற்றி உண்மையை வெளியில் பரப்பியதோ அது போல உபாசினி மகராஜ் பற்றி எழுதிய சகோரி முனிவர் புத்தகமும் பெரும் புகழ் பெற்றது.

அத்தனை வருடங்களாக தன்னுடைய சொந்த வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சோக நிகழ்ச்சிகளுக்கும் அதனால் மேற்கொண்ட ஆன்மீகப் பயணத்துக்கும் ஒரு பதிலாக அந்த புத்தகத்தின் 63 ஆம் பக்கத்தில் ஏன் இப்படி நடக்க வேண்டும், வாழ்கையின் தத்துவம் என்ன' எனக் கேள்வியை எழுப்பி கடவுள் ஒருவருக்கு தம்முடைய அருளைத் தர முடிவு செய்து விட்டால், ஆன்மீகப் பயணத்துக்கு தடையாக உள்ள பந்தங்களையும், அவன் சம்சார சாகரத்தில் பெறும் சுகத்தையும் அழிக்கத் துவங்கி விடுகின்றார் என எழுதினர்.
அவரிடம் உபாசினி மகராஜ் பஜனைகள், ஜபம். பாராயணம் போன்றவற்றை செய்து கொண்டு இருந்தபடி சன்யாசிகள் போல வாழ்ந்து கொண்டு உண்மைகளை தெரிந்து கொள்ளும்படிக் கூறினார். ஆகவே அவை எதுவும் நரசிம்மஸ்வாமியின் மனதில் ஏற்கத்தக்கதாக இல்லை. ௧௯௩௬ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். குருவைத் தேடிய தம்முடைய கடைசி கால கட்டத்தில் வந்து விட்டார்.

சீரடி அங்கிருந்த வெகு தூரம் இல்லை என்றாலும் அவர் சாயிபாபா பற்றி உபாசினி மகராஜ் கூறி இருந்தவற்றை புத்தகத்தின் 38 முதல் 41 ஆம் பக்காம் வரை எழுதி இருந்ததாலும் சீரடி செல்ல அவருக்கு நேரம் வரவில்லை. அது குறித்து உபாசினி மகராஜும் அவரிடம் எதுவும் கூறவில்லை.கடவுள் என்ன நினைத்து இருக்கின்றாரோ எந்த வழியில் செல்லத் தூண்டுவாரோ அப்படித்தான் ஒருவர் செல்ல முடியும் என்ற தத்துவத்தை உணர்ந்து இருந்ததினால் அந்த நேரத்துக்காக காத்திருந்தார்.
....தொடரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.