Wednesday, November 18, 2009

B.V Narsimha Swami ji-Only Aim.



1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தி ஒன்பதாம் தேதியன்று சாயி பாபாவிடம் இருந்து தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை அனைவருக்கும் தர நரசிம்மஸ்வாமி முடிவு செய்தார் . அந்த காலத்தில் அவர் உபாசினி மகராஜ் , ரமண மகரிஷி ஆசிரமம் போன்ற இடங்களில் இருந்த பொழுது அவருடன் இருந்தவர்களில் ஒருவர் சுத்தானந்த பாரதி ஸ்வாமிகள் என்பவர் . அவருக்கு நரசிம்மச்வாமிகளுடைய முகத்தில் இருந்த தேஜச்சும் , சாந்த குணமும் மிகவும் பிடித்து இருந்தது . அவர் பாபாவுடன் சீரடியிலும் தங்கி இருந்தவர் .
அவருக்கு ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் , குரான் மற்றும் கிறிஸ்துவர்களின் பைபிள் போன்றவை அத்துப்படி . அது மட்டும் அல்ல அவர் சிறிது காலம் ராமகிருஷ்ணர் , விவேகானந்தர் போன்றவர்களுடன் கல்கத்தாவில் இருந்துள்ளார் . பத்ரிநாத் , கேதார்நாத் , காசி , ஹரித்துவார் , ரிஷிகேசம் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தவர் . அவர் நரசிம்மஸ்வாமி ஆன்மீக ஞானம் தேடி வரும் முன்னரே அதற்காக அலைந்து கொண்டு இருந்தவர் .
அத்தனை இருந்தும் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைக்கவில்லை . ஆன்மீக ஞான ஒளிகலான சாயி பாபா , உபாசினி மகராஜ் போன்றவர்களுடன் இருந்தும் ஏனோ அவருக்கு அந்த ஞானம் கிடைக்கவில்லை என்பதினால் மனம் வருந்தி அது குறித்து உபாசினி மகராஜிடம் கூறிவிட்டு , சாயி பாபாவின் அருளினால் நரசிம்மச்வாமிக்கு அந்த பரிசு கிடைத்ததிற்கு பெருமைப்படுவதாகக் கூறினார் . உபாசினி மகராஜ் அவருக்கு எந்த பதிலும் தரவில்லை . அன்று இரவு அதற்கு பதில் தருவதாகக் கூறி அவரை இரவு விருந்திற்கு அழைத்தார் .
இரவு வந்ததும் சுத்தானந்த பாரதி விருந்திற்கு சென்றார் . அவர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்ததினால் நாகு கவனிக்கப் பட்டார் . நன்கு வயிறு முட்ட உணவு அருந்தினார் . உபாசினி மகராஜ் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு நிறைய இனிப்பு வழங்கி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார் . சாப்பிட்ட பின் சுத்தானந்த பாரதியால் எழுந்திருக்ககூட முடியவில்லை . அத்தனை சாப்பிட்டு இருந்தார் . அவருக்கு எழுந்திருக்க மற்றவர் உதவ வேண்டி இருந்தது .
இரவு சுத்தானந்த பாரதியால் உறங்கக்கூட முடியவில்லை . வயிற்று வலி , வயிற்றுப் போக்கு . இரவெல்லாம் உறங்க முடியாமல் அவதிப்பட்டார் .
மறுநாள் அவரைக் காண வந்த உபாசினி மகராஜ் அவரிடம் கேட்டார் , என்ன நன்கு உறங்கினிர்களா ?. சுத்தானந்த பாரதி கூறினார் , உறங்கினிர்களா ? இரவெல்லாம் வயிற்று போக்கு , வயிற்று வலி . அவதிப்பட்டேன் . என்னால் இப்போது நிற்கக்கூட முடியவில்லை .
சுத்தானந்த பாரதி அவரிடம் என்னுடைய நேற்றைய கேள்விக்கு இன்னமும் விடை தரவில்லையே . எத்தனை புலமையும் பெற்ற எனக்கு ஏன் ஆத்ம ஞானம் கிடைக்கவில்லை ? உபாசினி மகராஜ் சிரித்தபடிக் கூறினாராம் , 'உன்னுடைய இந்த நிலையே உனக்கு பதிலாக இருக்குமே . உன் மனதில் ஒரே குறியை நோக்கிச் செல்லும் எண்ணம் இல்லை . நிறைய படித்து என்ன பயன் ? என்ன செய்யவேண்டும் என மனதில் ஒரு தீர்மானமான குறிகோளை வைத்துக் கொள்ளவில்லையே . நீ பெற்ற பெரும் கல்விகள் அதனால்தான் வயிற்றுப்போக்கு போல ஆகிவிட்டது . அதனால்தான் உன்னால் ஞானம் பெற முடியவில்லை. நரசிமஸ்வாமிக்கு மனதில் தனக்கு ஆன்மீக ஞானம் கிடைக்க சத்குரு வேண்டும் என்ற ஒரே ஒரு குறிகோள்தான் இருந்தது . சுமார் பதினோரு வருட முயற்சியினால் அவரால் அந்த குறிக்கோளை எட்ட முடிந்தது . சாயி பாபா அவருக்கு அதைத் தந்தார் .நரசிம்மஸ்வாமி பற்றிய உபாசினி மகராஜின் அந்த கருத்தே நரசிம்மஸ்வாமியின் புகழை எடுத்துக் கூறுவதாக உள்ளது .

நரசிம்மச்வாமிக்கு சாயி பாபாவிடம் இருந்து கிடைத்த ஞானத்தை தவிர இன்னொரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது . 1936 ஆம் ஆண்டு , நவம்பர் இல்லை டிசம்பராக இருக்கும் , உபாசினி மகராஜ் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார் . அதில் சுவாமி ராம் பாபா என்பவரும் வந்தார் . அந்த நேரத்தில் மிகவும் மோசமான உடலமைப்புடன் இருந்த ஒரு தொழு நோயாளி அங்கு வந்தார் . பார்க்கவே அருவருப்பும் , நாற்றமும் அடித்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு வந்திருந்த அனைவரும் முகம் கோணி நின்றனர் .
வந்தவருக்கு உன் கையால் உணவு கொடு என உபாசினி மகராஜ் ராம் பாபாவிடம் கூறினார் . வந்தவரினால் உணவை அருந்த முடியவில்லை . திடீரென உபாசினி மகராஜ் வந்தவரினால் உணவு அருந்த முடியவில்லை என்பதினால் அவனுக்கு ஊட்டி விடு என ராம் பாபாவிடம் கூறினார் . அதைத் தட்ட முடியாமல் போன சுவாமி ராம் பாபாவும் , கூடுமானவரை அந்த தொழு நோயாளியின் ரத்தம் வழிந்து கொண்டு இருந்த உதடுகளில் தன்னுடைய கைகள் பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டு உணவு கொடுத்தார் . அதனால் சற்று உணவு கிழே விழுந்தது .
அதன் பின் அந்த தொழு நோயாளி போய்விட அவர் விட்டுச் சென்ற உணவை அருந்துமாறு உபாசினி மகராஜ் சுவாமி ராம் பாபாவிடம் கூறினார் . அந்த உணவிலோ சிறிது ரத்தமும் சிந்தி இருந்தது . அருவறுபினால் எத்தனை முயன்றும் அவரால் ஒரு கவளம் கூட சாப்பிட முடியவில்லை .
அதற்குப் பின் உபாசினி மகராஜ் நரசிம்மஸ்வாமியை பார்க்க அவர் முன் வந்து சற்றும் தாமதிக்காமல், அந்த நோயாளி விட்டுச் சென்று இருந்த உணவை அருந்தினார் . கொஞ்சம் கூட முகம் கோணவில்லை.

கூடி இருந்த அனைவருக்கும் உபாசினி மகராஜ் கூறினார் ,' நீங்கள் எவராவது வந்தவரைப் பார்த்தீர்களா ? எத்தனை விரைவாக அவர் திருபிச் சென்றார் என ? உண்மையிலேயே தொழு நோயாளியாக இருந்திருந்தால் அப்படி சென்று இருக்க முடியுமா ? வந்தவர் வேறு யாரும் அல்ல . அவரேதான் சாயிநாதர் . அவரை நரசிம்மச்வாமியால்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கின்றது '
அந்த நிகழ்ச்சியைக் கண்ட நரசிம்மஸ்வாமி , தனக்கு வெளி வேஷத்தைக் கண்டு மயங்கக் கூடாது என்ற உபதேசம் செய்யவே சாயிணாதர் அப்படிப்பட்ட வேஷத்தில் வந்திருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியே நரசிம்மஸ்வாமியின் வாழ்வில் பெரிய பாடத்தைத் தந்து இருந்தது . அவருடைய ஆன்மீக பயணத்தில் சாயிநாதரே வழி நடத்திச் சென்று கொண்டு இருந்தார் .
..தொடரும்

To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.