Wednesday, November 18, 2009

B.V Narsihma Swami ji-Lockets and Calenders.

Chapter- 17
நாள்காட்டியும் , லாகேட்டும்


நரசிம்மஸ்வாமி சாயிபாபாவின் புகைப்படங்களை நிறைய அசசிடும்படிக் கூறினார். சென்னை திருவிளக்கேணியில் இருந்த ராவ் சகோதரரர்கள் என்ற பிரிண்டர் போஸ்ட் கார்டு அளவில் மூன்று வண்ணத்தில் அதை ஆர்ட் பேப்பரில் அச்சிட்டுத் தந்தார். மின்ட் தெருவில் இருந்த திருபுரசுந்தரி என்ற நகைக் கடைகாரார் சிறியதும் பெரியதுமான பல லாகேட்டுக்களை தங்க முலாம் பூசியும் , நிக்கலிலும் செய்துதந்தார் . ஒவொரு லாகேட்டின் ஒரு புறத்திலும் சாயிபாபா படமும் மற்றொரு பக்கத்தில் ஏதாவது சாமி படமும் இருந்தது. சாய் பாபாவின் படத்தின் கீழ் ''நான் இருக்க பயம் ஏன்'' என எழுதப்பட்ட வாசகம் இருந்தது.

அது போல மோதிரம் , சட்டை பட்டன்கள் , கழுத்தில் அணியும் பென்டன்ட் போன்றவற்றில் சாயி படம் போடப்பட்டு இருந்தது. சாய்நாதர் பாதுகையும் வெள்ளி தகட்டில் செய்யப்பட்டு வந்தது . அத்தகைய பொருட்களை பெரிய அளவில் பக்தர்கள் வாங்கினர் . இன்று அணித்து இடத்திலும் சாயி நாதரின் அத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றது என்றால் அதற்கு காரணம் அன்று சென்னையில் நரசிம்மஸ்வாமி துவக்கிய பணிதான் என்பதில் ஐயம் இல்லை. சுவாமிஜி அதை சீரடியிலும் விற்க ஏற்பாடு செய்தார். 1941 ஆம் ஆண்டின் முன்னர் அந்த பொருட்கள் எதுவுமே அங்கு விற்கப்படவில்லை . 1970 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்தே அனைத்து இடங்களுக்கும் அவை சென்றன . அதனால் சாயி சமாஜத்திற்கு நிறைய வருமானம் ஏற்பட்டது. 1936 ஆம் ஆண்டில் நரசிம்மஸ்வாமி சீரடிக்குச் சென்ற பொழுது அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை எண்ணமுடிந்த அளவு இருந்தது. சாயி பாபாவின் மறைவுக்குப் பின் வந்தவர்கள் மிகச் சிலரே . அவர் மறைந்ததிக்குப் பின்னர் மற்றவர்களைப் போல அவரும் தன்னுடைய புகழின் உச்சிக்கு சென்றுவிட்டு மறைந்து விட்டார் என்றே நினைத்தனர் .
ஆனால் நரசிம்மஸ்வாமி அங்கு சென்ற பின்னர்தான் அதாவது 1936 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் துவக்கிய இயக்கத்தினால் இன்று உலகின் அனைத்து மூலை முடுக்கிலும் சாயியின் புகழ் பரவி நிற்கின்றது . அதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் அத்தனை சுலபமாக இல்லை. பலரது எதிர்ப்புக்களையும் சம்பாதிக்க வேண்டி வந்தது . ' இந்த மனிதர் நம்மை ஒரு முஸ்லிம் பரதேசியை வணங்கச் சொல்கின்றார் ' , மதராசி சாது தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள அவற்றை செய்கின்றார் என செய்திகளைப் பரப்பினர் . சாயி சமாஜத்திலே கூட சிலர் அவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டு அதை மறைமுகமாக செய்தனர் .
ஆனால் சீறடியில் இருந்த பல முக்கிய பிரமுகர்கள் அவர் செய்துவந்த முயற்சிகள் உண்மையானவை எனப் புரிந்து கொண்டு சாயி பிரசாரத்தில் அவருக்கு உதவ முன் வந்தனர் . எதிர்ப்புக்களை எல்லாம் மீறி என்ன ஆனாலும் சரி , பாபா நமக்கு துணையாக இருக்கின்றார் என நம்பிய நரசிம்மஸ்வாமியும் தனது சாயி பிரச்சாரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. வெகு விரைவில் அவருடைய எதிர்பாளர்கள் அடங்கிவிட்டு அவருடன்இணைந்தனர் .
நரசிம்மஸ்வாமி தனக்கு ஏற்பட்ட அந்த சோதனைகளை சாயியே நடத்தி தன்னுடைய மன திடத்தை பரிசோதித்து உள்ளார் என்றே நினைத்தார் . அது பற்றி அவர் பேசிய கூட்டங்களில் கூறினார். பலர் பெற்றிருந்த அற்புத சாயி அனுபவங்களை எடுத்துரைத்தார் . நரசிம்மஸ்வாமியின் அளவற்ற தன்னலமற்ற முயற்சியினால்தான் நமக்கு சாயி பாபாவின் பெருமை இன்று தெரிந்துள்ளது . அவரை பூஜிப்பவர்களுக்கு அருளும் கிடைகின்றது . ஆனால் கடவுள்கூட தன்னுடைய பக்தர்களுக்கு சில ஆசை அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுத்தால்தான் அவர்களை தன்னுடைய பக்கம் இழுத்து ஆன்மீக வழியில் கொண்டு செல்ல முடியும் என்பதையும் உணர்தி உள்ளார் .
சாயிபாபாவின் வாழ்கை, Vol -I என்ற புத்தகத்தில் நரசிம்மஸ்வாமி எழுதினர் , ''1918 ஆம் ஆண்டு சமாதி அடைந்தவரை பற்றிய பெருமைகளை பலர் புரிந்து கொள்ளவில்லை''. 1936 ஆம் ஆண்டுவரை பத்துபேர் கூட அவருடைய ஆலயத்துக்கு செல்லவில்லை . ஆனால் அதற்குப் பின்னரே சாயியின் புகழ் உலகெங்கும் பரவியது என்பது உண்மை . சாயியின் பெருமை இன்று மேலும் மேலும் பெருகிக்கொண்டே போகின்றது என்றால் அதன் காரணம் நரசிம்மஸ்வாமியின் உழைப்புதான் . அவருக்குதான் நாம் மிகவும்நன்றிக்கடன் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
....தொடரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission .

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.