Saturday, November 7, 2009

B.V Narsimha Swami ji's- God Realisation


1936 ஆறாம் ஆண்டு. ஸ்ராவண மாதம் . அன்றுதான் சகோதரிகள் தமது சகோதரர்களுக்கு கையில் கங்கணம் போல ராக்கி கட்டிவிடுவது பழக்கம். காலப்போக்கில் சடங்குகள் மாறிக்கொண்டு இருந்தாலும் பிராமணர்கள் பூணூல் போடும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அன்று நரசிம்மஸ்வாமி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டார்.
தனது குடும்பத்தினருடன் சேலத்தில் பதிநூறு ஆண்டுகள் வாழ்ந்த வாழ்கையை நினைத்துப் பார்த்தார் . என்றைக்கு தான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வு அர்த்தம் இல்லாமல் இருப்பதையும் எதனை கஷ்டப்பட்டும் தம்மால் தம்முடைய குருநாதரை சென்று அடைய முடியவில்லையே என்று எண்ணியபொழுது மனதில் விரக்தி தோன்றியது. தன்னுடைய ஆசைக்கு விடி மோட்சமே இல்லை என்பதினால் இனி சென்னைக்கே சென்று மகன் வேங்கடரமனுடன் வாழ்ந்தபடி காலத்தை ஓட்டிவிடலாம் என எண்ணினார். ஆனால் தன்னுடைய எண்ணத்தை உபசினி மகாராஜ் தெரிந்து கொண்டால் தன்னை தடுத்துவிடுவார் என எண்ணியவர் தூரத்தில் இருந்தே அவரிடம் மனதார விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஆசிரமத்தை விட்டு வெளியேறி சுடுகாட்டில் இருந்து வெளி வந்தவரை வழியில் அஜனுபகனன ஒரு மனிதர் சந்தித்தார் . ஏறனியா வம்ச மனிதர் போன்று தோற்றம் தந்தவர் கூறினார் 'மதராசி சாது மகாராஜ், நீங்கள் எங்கே போகின்றீர்கள்?'
நரஸிமஸ்வாமி கூறினார் ' எதனை நாளும் மன அமைதி தேடி ஆன்மீகப் பயணத்தில் இருந்த நான் சொந்த உருக்குப் போகின்றேன்" அதற்க்கு அந்த பதான் கூறினார் ' வந்ததுதான் வந்தீர்கள், பக்கத்தில் உள்ள சீரடிக்கு சென்று சாயீ பாபவை தரிசனம் செய்து விட்டுப் போவதுதானே'
மனதி வெறுப்பு இருந்ததினால் அந்த பதானுடன் பேச்சை தவிர்க்க எண்ணினார். '1918 ஆண்டிலேயே, அதாவது பதினெட்டு வருடம் முன்னரே சமாதி அடைந்து விட்டவரை கான்பதினால் எனக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப் போவது இல்லை.நான் ஏற்கனவே ஹச்ரத்பாபாஜன் ,க்வாஜா சிஸ்டே ஷெரிப் மற்றும் தசுட்டின் பாபா போன்றவர்களை எல்லாம் சந்தித்துவிட்டேன். எவராலும் எனக்கு ஆன்மீகப் பாதையை காட்ட முடியவில்லை. அவர்கள் என் இதயத்திலும் அமரவில்லை' என்றார்.
பதான் விடுவதாக இல்லை' நீங்கள் ஒரு முறையாவது அருள் வீசிக்கொண்டு இருக்கும் சாயினாதரின் சமாதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பலாமே என்றே தோன்றுகின்றது ' என்றார்.
அந்த மனிதரிடம் ' சரி அங்கு செல்கிறேன்' எனக் கூறிவிட்டு ரயில்நிலையம் நூக்கி நடந்தார். சென்னைக்கு செல்ல கிளம்பியவர் தன்னை அறியாமலேயே அங்கிருந்து ஏழு கிலோ தொலைவில் இருந்த சீரடி நோக்கி சென்றுகொண்டு இருந்தார். சீரடியை அடைந்த பொது பதினோரு மணி இருக்கும். பாபாவின் சமாதியை அப்துல்லா பாபா என்பவர் மயில் தோகையினால் வருடிக்கொண்டு இருந்ததார் . சமடி முன் சென்று நின்றவர் மனதில் அமைதி தோன்றியது. மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்ததை உணர்ந்தார். பதினெட்டு ஆண்டுகளாக பாபா தனக்கு ஒரு தகுதியான சீடரை தேடிக்கொண்டு இருந்தார் போலும். ஒரு கணம்தான் . பாபா தனுடைய உடலை முழுமையாக ஆக்ரமிப்பதை உணர்ந்தார். ஆமாம் அவருக்கு பாபா ஞானம் தந்து விட்டார்.

நரசிமச்வாமி தான் தேடி வந்த புதையல் கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்தார்। அந்த கணத்தில் இருந்து அவர் பாபாவின் சீடராக மாறிவிட்டார் திருவண்ணமலையில் ரமண முனிவரிடம் கண்டறிந்த ஆன்மீக ஞானம் என்ற மந்திரத்தைப் போலவே சகோரியில் பெற்றார் அந்த சகோரி முனிவர்। 1941 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அது குறித்து இப்படி பேசினார் ' நான் சீரடிக்கு வருவதற்கு முன்னால் கட்டுக்கு அடங்காமல் இருந்த என் ஆன்மீகப் பசி அங்கு சென்ற பின் எத்தனை தேவையோ அதற்கு மேலும் அதிகம் தந்து என்னுடைய குருநாதர் என்னை ஆசிர்வதித்து உள்ளார் । அவரே என் சத்குருவான சாயிநாதர் ।இன்றைக்கும் நான் தொடர்ந்து அவருடன் என் எண்ண அலைகளை பரிமாறிக் கொண்டுதான் இருக்கிறேன்'
..............வளரும்




To be continued.

Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.