Baba turns impossible to possible-Sai devotee Archana
அன்பானவர்களே
இன்று நான் சகோதரி அர்ச்சனா அவர்கள் எழுதி அனுப்பி உள்ள அனுபவத்தை பிரசுரிக்கின்றேன். இதை படித்தால் பாபாவால் நடத்த முடியாதது எதுவுமே இல்லை என்ற உண்மை தெரியும். இந்த அனுபவம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்தது.
ஜெய் சாயிராம்மனிஷா
----------------------
அன்பார்ந்த மனிஷா
நான் உங்களுடைய இணையதளத்தை தவறாமல் படித்து வருகிறேன். உங்களை பாபா ஆசிர்வதிக்கட்டும்.
இந்த வருடம் எனக்கு ஏற்பட்ட கீழே தந்துள்ள அற்புதமான அனுபவம் என்னை பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கச் செய்துவிட்டது.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நான் உங்கள் இணையதளத்தில் பலரது அனுபவங்களை படித்துக் கொண்டு இருந்தபோது மனதில் ஒரு சபதம் எடுத்தேன். நான் நானாகவே சம்பாதித்து பாபாவுக்கு ஆரஞ்சு கலரில் சால்வையை வாங்கும் வரை நானும் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டேன்.

ஏன் எனத் தெரியவில்லை, என் மனதில் தோன்றியது, அப்படிப்பட்ட சபதத்தை எடுத்துக் கொண்டு விட்டேன். நானும் என்னுடைய கணவரும் இருந்ததோ அமெரிக்காவில், அதுவும் இன்னொருவர் தயவில் உள்ள விசாவில். அங்கு H1 விசா அல்லது EAD அல்லது கிரீன் கார்டு இல்லாவிடில் வேலை கிடைக்காது. அப்படி இருந்தும் நான் ஏன் இப்படி ஒரு சபதம் மேற்கொண்டேன்? நான் அங்கிருந்தபோது பல பண்டிகைகள் வந்தன, நான் என் சபதத்தில் உறுதியாக இருந்ததினால் எதையும் வாங்கிக் கொள்ளவில்லை.
நான் என்னுடைய சபதத்தைப் பற்றி என் கணவரிடம் கூறினேன். ஆனால் அது நிறைவேற நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அங்கு காத்து இருக்க வேண்டும். அதுவரை வேறு வேலையும் கிடைக்காது. ஆனால் பாபா நடத்தி வைப்பதை ஏற்றுக் கொள்வோம் எனக் கூறிவிட்டேன்.

நான் எஞ்சினியரோ அல்லது ஒரு டாக்டரோ அல்ல . உலகம் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி. வேலை எங்கிருந்து கிடைக்கும். அப்போது என்னைப் பார்க்க என்னுடைய சகோதரி வந்து இருந்தாள். அவள் எனக்கு ஒரு ஆரஞ்சு நிற குர்த்தாவை பரிசாகத் தந்துவிட்டுச் சென்றாள். சபதம் எடுத்துக் கொண்டு இருந்த நான் அதைப் போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா எனக் குழம்பினேன். அவள் சென்றதும் அதை என் கணவரிடம் காட்ட அவர் ஆரஞ்சு நிற குர்த்தா கிடைத்தது எதேற்சையாக நடந்ததா என்றார். நான் சிரித்தேன். சரி அதைப் பற்றி பின்னர் யோசிக்கலாம் என விட்டுவிட்டேன். சந்தர்ப்பம் வரட்டும், போட்டுக் கொள்ளலாம் என இருந்தேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் சாயிபாவின் ஆலயத்துக்கு அவர் பாதுகையை தரிசனம் செய்யச் சென்றேன். அப்போது அந்த ஆரஞ்சு நிற குர்த்தாவை போட்டுக் கொண்டுச் சென்றேன். அவரைப் பார்த்து மனதில் நினைத்தேன் 'எதற்காக இப்படி ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டேன் என்பது தெரியவில்லை. எனக்கோ வேலையும் இல்லை. நீ என் சபதத்தை நிறைவேற்ற எனக்கு அதே நிற குர்த்தாவை பரிசாகக் கிடைக்கச் செய்து இருக்கின்றாய். என்னுடைய சபதத்தை உனக்கு நிறைவேற்ற நீதான் வழி காட்டவேண்டும்'. இப்படி எண்ணியப் பின் அவரை வணங்கிவிட்டு வந்தேன்.
நான் இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் இருக்கின்றேன். எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். நான் பல இடங்களுக்கும் சென்று வேலை கேட்டு இருந்தாலும் வேலை கிடைக்க வழி இல்லை.
நான் இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் இருக்கின்றேன். எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். நான் பல இடங்களுக்கும் சென்று வேலை கேட்டு இருந்தாலும் வேலை கிடைக்க வழி இல்லை.
நான் ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வந்த இரண்டாம் நாள் நான் முன்னர் 2008 ஆம் ஆண்டு வேலை கேட்ட இடத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் கேட்டு இருந்த இடத்தில் இருந்து அழைப்பாயிற்றே என யோசனை செய்தேன். அங்கு சென்றதும்தான் எனக்கு தெரிந்தது அவர்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றார்கள் என்பதினால் நான் முன்னர் போட்டு இருந்த விண்ணப்பத்தையும் பரிசிலனை செய்து என்னை அழைத்து உள்ளார்கள். அதுவும் H1விசா படிவத்துடன் கொடுத்தார்கள். நான் யோஜனை செய்து கூறுவதாக வெளியில் வந்தேன். என் கண்களில் கண்ணீர் நிறைந்தது. என்னுடன் வந்து இருந்த என் கணவரும் வியந்து நின்றார். நான் இண்டர்வியு கூட தரவில்லை . அது எப்படி வேலை கிடைத்து விட்டது எனப் புரியவில்லை.
அவர்கள் என்னுடைய விசாவை முறைப்படி பதிவு செய்வார்கள் எனவும் நான் அக்டோபர் மாதம் 10 முதல் 15 ஆம் தேதிக்குள் வேலைக்கு சேர வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த விசா விண்ணப்பத்தின் மீது முறைப்படி நடவடிக்கை எடுத்து வந்த செய்த நேரத்தில் எனக்கு வரவேண்டிய அனைத்து கடிதங்களும் வியாழர் கிழமைகளில் மட்டுமே வந்ததும் ஒரு வியப்பான செய்தி.
நான் பாபாவின் பக்தையாக ஒரு வருடத்துக்கு முன்னர்தான் ஆனேன். அவரைப் பற்றிய முழு விவரத்தையோ, போதனைகளையோ அப்போது அறிந்திடவில்லை. ஆனால் நான் அவரிடம் முடிந்தவரை பக்தி கொண்டேன். யார் என்ன சொன்னாலும் அதை ஏற்காமல் தன்னை முழுமையாக நம்புபவர்களை அவர் நேசிக்கின்றார். அதை அனுபவத்தின் மூலம் உணர்ந்த நான் என்னுடைய அனுபவத்தை அனைவரிடமும் கூறி மகிழ்ச்சியை பங்கு கொள்ள காத்து உள்ளேன் . ஆகவே தயவு செய்து இதை உங்கள் தளத்தில் பிரசுரிக்கவும். ஓம் சாயிராம்
அர்ச்சனா
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment