Friday, December 10, 2010

Baba's Message -Experience By Rama Rao

பாபா  தந்த  செய்தி - ராம ராவ் 


அன்பானவர்களே
ஒவ்வொருவரும் தத்தம் வழியில் பாபாவை  பல்வேறு நிலைகளில் கண்டு  இன்பம் அடைந்து வருகிறீர்கள் என நினைக்கின்றேன். இன்று நான் ராமராவ் என்பவருக்கு பாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை வெளியிடுகிறேன். ராமா ராவ் இதற்கு முன்னரும் தனது அனுபவங்களை அனைவருடனும் பங்கிட்டுக் கொண்டு உள்ளார்.
மனிஷா
-----------------------------------------------
மதிப்பிற்குரிய மனிஷா
நாம் அனைவரும் பாபாவுடன் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை அனைவரும்  அறிந்திடும் வகையில் அவ்வப்போது வெளியிட்டு வந்தால் அதை படிக்கும் பலரும் அவர் நினைவில் தியானிக்கத் துவங்குவார்கள். அப்போது வெளிப்படும் ஆன்ம சக்தியானது உலகை தூய்மையாக்கும், அவரவர்களுக்கும் நன்மை கிடைக்கும் . ஆகவேதான் நான் என் அனுபவங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன். இப்படி  செய்வதின் மூலம் என் மனத்துக்குக் கிடைத்த மகிழ்ச்சியை அனைவருடனும் என்னால் பகிர்ந்து கொள்ள முடிகின்றது.
நான் நேற்று இரவு 9.30 மணிக்கு உறங்கச் சென்றேன். எந்த ஒரு நிலையிலும் நாம் அனாவசியமாக கவலை படக்கூடாது என பாபா அறிவுறுத்தி  இருந்த போதிலும் என்னை மீறி எனக்குள் ஒருவித கவலை குடி கொண்டது. என்னை மறந்து தூங்கச் சென்ற நான் மீண்டும் மனதில் அதிகமாகிக் கொண்டே இருந்த அதே கவலையினால் உந்தப்பட்டு 10 .30 மணிக்கு  முழித்து எழுந்தேன். என் மனதில் இருந்த துயரம் அதிகமாயிற்று. அப்போது சுமார் 10 .40 மணி இருக்கும் . அந்த இரவு நேரத்தில் எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் நடந்த உரையாடலை கீழே கொடுத்துளேன்.
அழைத்தவர்:- இந்த தொலைபேசி எண்ணின் சொந்தக்காரர் யார்?
நான்:- நீங்கள் யார்? என்ன எண்ணுக்கு டயல் செய்தீர்கள் ?
அழைத்தவர்:- எனக்கே தெரியவில்லை. இந்த எண் என்னிடம் இருந்தது . அதனால் தொடர்பு கொண்டேன்.
நான்:- உங்கள் பெயர் என்ன?
அழைத்தவர்:- யார் பெயரைக் கேட்கிறீர்கள்? இந்த உடலின் பெயரையா அல்லது உள்ளே உள்ள ஆத்மாவின் பெயரையா?
நான்:- ( அவரை பைத்தியம் என எண்ணிக் கொண்டு பேசினேன் ) உங்களுடைய உடலின் பெயரைத்தான் கேட்டேன் .
அழைத்தவர்:- நான் மனிதன் அல்ல
நான்:- அப்படியானால் உங்கள் ஆத்மாவின் பெயரைக் கூறுங்கள்.
அழைத்தவர்:- ஆத்மாவுக்குப் பெயர் கிடையாது.
நான்:- அப்படியானால் உங்களை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்?
அழைத்தவர்:- என்னை கடவுள் என்று அழைக்கிறார்கள்
நான்:- (சரி, இதை எப்படியே விட்டு விடுவது நல்லது என எண்ணிக்க கொண்டே) கடவுளுடன் பேசியதற்கு நன்றி. குட் நைட் .
ஆனால் அவர் விடவில்லை. அதே நேரத்தில் அந்தக் குரல் எனக்கு பழக்கமான குரலாக இருந்தது. சுதாகரித்துக்  கொண்ட நான் அவர் ஹைதிராபாத்தில் உள்ள என்னுடைய நெருங்கிய நண்பரான கிருஷ்ண தாஸ் என்பதை புரிந்து  கொண்டேன். சம்பாஷனை தொடர அவர்  கேட்டார் '  எண்ண , அங்கு அனைத்தும் நலம்தானே ?' 
நான் கூறினேன் ' அனைத்தும் நலமே, ஆனால் நலமும் இல்லை'. அவர் கூறினார் 'நான் இத்தனை நேரத்தில் போன் செய்வதின் காரணம் எண்ண தெரியுமா? நீ அதிகமாகக் கவலைப்படுகிறாய். அனைத்தும் நல்லபடியே நடக்கும். கவலைப்படாதே' என்று கூறத்தான்.  நான் பதில் கூறினேன்  'உண்மைதான். எனக்கு ஒரே கவலையாக உள்ளது. ஆனால் நான் கவலையில் உள்ளதாக உனக்கு எப்படி தெரியும்?'
அவர் தனக்கு ஒரு கனவு வந்ததாகவும், அதில் நான் மிகுந்த கவலையோடு இருப்பதாகக் கூறியதினால் உடனேயே விழுந்து அடித்துக் கொண்டு எழுந்து என்னுடைய தொலைபேசி எண்ணத் தேடிக் கண்டு பிடித்து என்னுடன் தொடர்பு கொண்டதாகக் கூறினார். அதன் பின் முதலில் நடந்த சம்பாஷணையே மேலே உள்ளது என்றாலும் பிறகு நாங்கள் மற்ற விஷயங்களை பேசிக்கொண்டோம்.
அது எனக்கு வியப்பாக இருந்தது. நான் கவலையோடு இருந்த நேரத்தில்  பாபா என்னுடைய நெருங்கிய நண்பரை என்னுடன் தொடர்பு கொள்ள வைத்து எனக்கு ஆறுதலை தந்து உள்ளார். எனக்கு மேலும் ஒரு சந்தேகம் வந்தது. என் நண்பர் நான் அவர் கனவில் வந்ததினால்தான் என்னை தொடர்பு கொண்டதாக பொய் கூறி இருப்பாரோ? இல்லை இதுவும் பாபாவின் லீலைதானா?
மற்றவர்கள் நினைக்கலாம். எனக்கு ஆறுதல் தர வேண்டும் என நினைத்தால் பாபாவே என் கனவில் தோன்றி இருக்கலாமே. என்னைப் பொறுத்தவரை பாபா ஒரு அளவுக்குத்தான் தன்னுடைய பக்தர்களின் கனவில் வருவார். அவரிடம் நாம் செல்லச் செல்ல அவர் தொடர்பு கொள்ளும் நிலை உயர்ந்து கொண்டே போகும். பாபா கூறி உள்ளாரே '".......உன் பெயர் மற்றும் உருவத்தை தண்டி உன்னுள் மட்டும் அல்ல அனைத்து ஜீவராசிகளிலும் அவரவர்களுக்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்கின்ற நினைப்பு வந்து கொண்டே உள்ளது அல்லவா, அந்த நினைவு நான்தான்''
பாபாவின் லீலை முடிவுறவில்லை....அதற்குள் வேறு எதையோ கூறி விட்டேன். இனி முன் கதையை தொடர்ந்து படியுங்கள்.
என் நண்பரின் தொலைபேசி வந்து பேசிய பின்  பின் நான் தூங்க முயற்சித்தேன் . அப்போது எனக்குள் நானே கூறிக் கொண்டேன். "நாளை நான் இந்திரா நகர் காம்பிரிட்ஜில் உள்ள பாபாவின் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். அவரை நான் மஞ்சள் நிற சால்வையில்...தவறு பச்சை நிற சால்வையில்...இல்லை இல்லை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவரை காண வேண்டும். என்னை அவர் ஆசிர்வதிக்க வேண்டும் "
மறு நாள் காலை ஏழு மணிக்கு ஆலயம் சென்றேன். அருகில் இருந்த பூக் கடையில் சென்று சிறிது பூக்களை வாங்கினேன். என்ன நிறத்தில் பூக்கள் வேண்டும் என அவன் கேட்க எதுவாக இருந்தாலும் சரி, உள்ளதைக் கொடு என்று கூற அவன் பூக்களை தந்தான். அதில் பெரும்பாலும் சிவப்பு ரோஜாவே இருந்தது.
ஆலயத்தின் உள்ளே சென்றேன். என்ன ஆச்சரியம்.... மஞ்சள், பச்சை, சிவப்பு என  பல நிறத்தில்  பெரிய பெரிய பொட்டாக  அச்சடிக்கப்பட்ட  சால்வையை போர்த்தியபடி பாபா காட்சி தந்தார். நான் முந்தய நாள் இரவில் என்ன கலரில் அவர் சால்வை அணிந்து இருக்க வேண்டும் என எண்ணி குழம்பினேனோ அது போல இருந்தது. மூன்றாவதாக சிவப்பும் இருந்தது. ஆக வெள்ளை நிற சால்வை மூன்று நிறத்தில் அச்சடிக்கப்பட்டு  இருந்தது. அந்த மூன்று நிறங்களைக் கொண்ட சால்வையைக் கண்ட நான் நினைத்தேன் அன்றைய தினம் பாபா எனக்கு மும்மூர்த்திகளான  தத்தர் உருவில் காட்சி அளிக்க விரும்பி உள்ளாரோ? ஆக அனைத்தையும் பார்க்கையில் பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கின்றார் என்ற அர்த்தத்தை  தவிர வேறு என்ன கூற முடியும் ?
இத்தனை பெரிய கடிதம் அனுப்பியதற்கு  வருந்துகிறேன். ஆனாலும் இந்த சம்பவத்தை படிப்பவர்களுக்கு பக்தி பிரவாகம் பெருகும் என்பதில்  ஐயம் இல்லை. பாபா என்னை ரஷிக்கட்டும்
நன்றி
ராம ராவ்
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.