Wednesday, December 15, 2010

Baba's love-Experience By Avinash Kaur


 

அன்பானவர்களே
இன்று சாயி லீலாவைப் பற்றி சகோதரி அவினாஷ் எழுதி அனுப்பி உள்ளவற்றை பிரசுரிக்கின்றேன்.
மனிஷா

---------------------------------
அன்புள்ள சகோதரி மனிஷா
இன்று  நான் எனக்கு சாயிபாபாவிடம் இருந்து கிடைத்த அனுபவத்தை அனைவருடனும்  பகிர்ந்து கொள்கின்றேன்.
நான் இதுவரை எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எவருடனும் பகிர்ந்து கொண்டது இல்லை. ஆனால் இப்போது அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த முடிவு செய்தேன். சாயிபாபா  பற்றி ஒரு செய்தியை ஒரு நாள் படிக்கவில்லை என்றால் எனக்கு அன்றைய தினம் வீணான நாள் போல தோன்றும். நான் சீக்கிய மதத்தை சேர்ந்தவள் என்றாலும் சாயி சரித்திரத்தைப்  படிப்பது உண்டு.  என்னை  அவர் எப்படி தன்னிடம்  இழுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அதற்கும்  காரணம் என்னுடைய குருவான குருநானக்ஜி என்றே நினைக்கின்றேன். இனி என்னுடைய அனுபவத்தைப் படியுங்கள்.

முதல் அனுபவம்

இந்த அனுபவத்தில் என்னுடைய நோயாளித் தாயாரை சாயிபாபா எப்படிக் காப்பாற்றினார் என்பதைப் பற்றிக் கூற விரும்புகின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் என் நண்பருடன்  என் வீட்டுக்கு அருகில் இருந்த சாயி ஆலயத்துக்குச் செல்வதுண்டு. அவர் என்னுடன் ஒவ்வொரு வியாழன் கிழமையும் ஆலயத்துக்கு  வருவார். அப்போது எனக்கு சாயிபாபா பற்றிய முழு விவரமும் தெரியாது.
என்னுடைய தாயாருக்கு வெங்காய வாசனை மற்றும் தூசிகளினால் அலர்ஜி ஏற்படும். விடாது தும்முவார். அதனால் அவர் மிக்க அவஸ்தைப்படுவது உண்டு. மூச்சு விட முடியாமல் அவதிப்படுவார். ஒரு நாள் அவருக்கு அப்படிப்பட்ட அலர்ஜி ஏற்பட 2-3 நாட்கள் கடுமையாக அவதிப்பட்டார். எந்த மருந்தும் அவருக்கு குணம் தரவில்லை. அந்த நேரத்தில் வியாழன் கிழமை வந்தது. நான் பாபாவின் ஆலயத்துக்கு சென்று இருந்தேன் . என்னுடைய தாயாரின் நோயை குணப்படுத்துமாறு அவரிடம் மனதார வேண்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். . அடுத்த நாள் முதல் என்னுடைய தாயாரின் அந்த அலர்ஜி  தானாகவே குணமாகி விட்டது மட்டும் அல்லாமல் இன்று வரை மீண்டும் அந்த அலர்ஜி மீண்டும் தோன்றவே இல்லை.
நம்முடைய சாயிபாபா நமக்கு முன் பல உருவங்களில் வந்து நம்மைக் காப்பாற்றுகிறார். நம்முடைய வேண்டுகோட்களை கண்டிப்பாக நிறைவேற்றுகிறார். அனைவரிடமும் சாயிபாபா உள்ளார் . சாயிநாதா உனக்கு கோடி நன்றி.
ஜெய் ஸ்ரீ ராம்

இரண்டாவது அனுபவம்
நான் இரண்டு அல்லது மூன்று முறை வியாழன் கிழமை விரதம் இருந்துள்ளேன். ஒருமுறை விரதத்தின் ஒன்பதாவது நாள் நான் பாபாவின் ஆலயத்துக்கு என்னுடைய தாயார் மற்றும் காதலருடன் சென்று இருந்தேன். அங்கு சென்று அரிசியினால்  செய்த பிரசாதத்தை பாபாவுக்கு அர்பணித்தப் பின் என் தாயார், காதலர் மற்றும் அங்கிருந்த மற்ற குழந்தைகளுக்கும் தந்தேன். அன்று பாபா அணிந்து இருந்த உடை சற்று மங்கலாகவும் அழுக்காகவும் இருந்தது. தலை மீது சாபாவும் அணிந்து இருந்தார்.
அன்று இரவு பாபா என் கனவில் வந்தார். அந்தக் கனவிலும் நாங்கள் அவர் ஆலயத்துக்கு சென்று இருந்தோம். என்னுடன் என் தாயார் மற்றும் காதலரும் வந்து இருந்தார். பாபாவை நாங்கள் வணங்கி எழுந்தோம். பாபா என்னிடம் மட்டும் கூறினார் எனக்கு உணவு தந்தை. மகிழ்ச்சி. ஆனால் எனக்கு  குடிக்கத் தண்ணீரும் தந்தால்  நீ நினைப்பது எல்லாம் நடக்கும் என்றார். மறுநாள் விழித்து எழுந்த நான் அந்தக் கனவை பற்றி என் தாயாரிடமும் கூறினேன்.
அடுத்த வியாழன் கிழமை நாங்கள் பாபாவின் ஆலயத்துக்குச் சென்றோம் . அப்போது நான் என்னுடைய காதலரிடம் அவர் ஆலயத்துக்கு வரும்போது பாபாவுக்கு மஞ்சள் நிறத்தில் நல்ல உடையும் ஒரு பாட்டில் தண்ணீரும் வாங்கிக் கொண்டு வருமாறுக் கூறினேன். அவரும் அதை வாங்கி வந்தார்.
ஆலயத்துக்கு சென்ற நாங்கள் அதை பண்டிதரிடம்  கொடுக்க அதை அவர் மறுக்காமல் வாங்கிக் கொண்டு பாபாவுக்கு கொடுத்தார். அதைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் கனவில் வந்தது போலவே நான் கொண்டு வந்ததை பாபா ஏற்றுக் கொண்டு விட்டார். நான் உன்னுடைய குழந்தை. உன் லீலைகளை எனக்கு காட்டுகிறாய். நன்றி, பாபா நன்றி.
ஜெய் ஸ்ரீ ராம்


மூன்றாவது அனுபவம்

என் இரண்டாவது அனுபவத்தில் நான் பாபாவுக்கு மஞ்சள் நிற உடை வாங்கிக் கொடுத்ததைப் பற்றி கூறினேன் அல்லவா. இப்போது அவர் தன்னுடைய பக்தர்களிடம் எப்படி கருணையோடு இருக்கின்றார் என்பதை என் அனுபவத்தின் மூலம் கூறுகிறேன்.
நான் கொடுத்து இருந்த துணியை பாபா எப்போது அணியப் போகின்றார் என நினைத்தேன். நான் ஒவ்வொரு முறையும் அவர் ஆலயத்துக்கு சென்றபோது அவர் நான் வாங்கித் தந்து இருந்த மஞ்சள் உடையுடன் இருப்பார் என நினைத்தேன். ஆனால் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்துக்கு மேல் ஆகியும் அவர் நான் வாங்கித்  தந்து இருந்த உடையில் காட்சி தரவில்லை. ஒரு நாள்- அது வியாழன் கிழமை நான் இணையதளத்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது நினைத்தேன், பாபா இன்றாவது நீ நான் தந்துள்ள உடையில் நீ எனக்கு காட்சி தருவாயா?
என்னுடைய தாயார் குருநானக்கின் பக்தை. ஆனாலும் வியாழன் கிழமைகளில் என்னுடன் பாபாவின் ஆலயத்துக்கு வருவது உண்டு. அன்று மாலை நாங்கள் அவர் ஆலயம் சென்றோம் . என்னுடைய தாயாரிடம் நான் இன்று பாபா நாம் வாங்கித் தந்துள்ள உடையில் காட்சி தருவார் என்றேன். அவள் ஒன்றும் கூறவில்லை. என்ன ஆச்சர்யம். நாங்கள் ஆலயத்துக்கு  சென்றபோது பாபா நாங்கள் வாங்கித் தந்து இருந்த அதே மஞ்சள் உடையில் காட்சி தந்தார். என் கண்களில் கண்ணீர் வந்தது.  என் தாயார் அதிசயித்து நின்றார்.
நம்முடைய வேண்டுகோட்களை பாபா நிச்சயமாக நிறைவேற்றுகின்றார் என்பதே உண்மை. 
அவரைப் பற்றி நான் எழுதி உள்ள சில வரிகள் கீழே:
வோ ஆங்கேன் கிஸ்லியே ஜின்சே அகர் ஆப்கோ நஹி தேகா
( உன்னைக் காணாத கண்கள் எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ சர் கிஸ்லியே ஜோ ஆப்கே சாம்னே நஹி ஜுகாயா  
( உன்னைக் வணங்காத தலை  எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ ஹாத் கிஸ்லியே ஜினசே ஆப்கோ நமஸ்கார் நஹி கியா .
( உன்னை நமஸ்கரிக்காத கைகள் எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ ஜூபன் கிச்லியே ஜிஸ்சே ஆப்கா நாம் நஹி லிய . 
( உன்னை உச்சரிக்காத நாக்கு எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ சாஸ் கிஸ்லியே ஜிஸ்சே ஆப்கி துனி கி மேஹக் நஹி லி . 
( உன் துனியின் வாசனையை நுகராத மூச்சு  எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ கான் கிஸ்லியே ஜிஸ்சே ஆப்கா நாம் நஹி சுனா . 
( உன் நாமங்களைக் கேட்காத காது  எதற்காக இருக்க வேண்டும்?) 
வோ பைர் கிஸ்லியே ஜோ சல்கர் ஆப்கே மந்திர் நஹி ஆயே 
( உன் ஆலயத்துக்கு நுழையாத கால்கள் எதற்காக இருக்க வேண்டும்?)  
 ஜெய் ஸ்ரீ ராம்

நான்காவது அனுபவம்
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். பல வேலைகளின் காரணமாக என்னால் அந்த வார வியாழன் கிழமை அன்று பாபாவின் ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் வழியில் பாபாவின் படங்கள் அடங்கிய வண்டி செல்வதைப் பார்த்தேன். அன்று வியாழக் கிழமை என்பதினால் ஆலயத்த்க்குப் போக முடியாத எனக்கு பாபாவே நேரில் வந்து தரிசனம் தந்தது போல இருந்தது. அந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது. பாபா, உனக்கு நன்றி.
ஜெய் ஸ்ரீ ராம்

ஐந்தாவது அனுபவம்

2009 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் என நினைக்கின்றேன். நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவின் ஆலயத்துக்கு செல்வது உண்டு. ஒரு நாள் எனக்கு பாபாவின் கனவு.  நான் எப்போதும் செல்லும் பாபாவின் ஆலயத்துக்கு சென்று வரிசையில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது பாபா என் எதிரில் பச்சை நிற உடையை அணிந்து கொண்டு வந்து நின்றார். அவர் ஒரு முஸ்லிம் துறவியைப் போல காட்சி தந்தார். ஆகவே நான் குனிந்து அவர் கால்களை தொட்டு வணங்கினேன். அவர் என்னுடைய தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தார். என் கனவு கலைந்து எழுந்தேன். அது கனவே என்றாலும் பாபா அப்படியெல்லாம் பக்தர்களுக்கு காட்சி தந்து ஆசி கூறுவதினால் அது எனக்கு அவர்  நேரில் வந்து தந்த ஆசிர்வாதமே என நினைத்துக் கொண்டேன். 
ஜெய் ஸ்ரீ ராம்

ஆறாவது அனுபவம்
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் என நினைக்கின்றேன். நான் சாயி சரித்திரத்தை படித்துக் கொண்டு இருந்தேன். ஷ்ரத்தா, ஆம்ப் மற்றும் சபூரிக்கென பாபா இரண்டு நாணயங்களை கேட்பது  உண்டு. ஆகவே ஒரு நாள் அவருடைய ஆலயம் சென்ற நான் அவருக்கு இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டேன். அதைப் பார்த்து அவர் புன்முறுவல் செய்வது போல காட்சி தந்தார்.
அதற்கு அடுத்த 3-4 நாளில் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். அந்தப் பெட்டியில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்போது ஒரு பகீரைப் போல தோற்றம் தந்த ஒருவர் என்னிடம் வந்து குழந்தை சாய் நாஸ்தாவிற்கு  ஏதாவது  கொடு எனக் கேட்டார். நான் அது பாபாவாக இருக்கலாம் என எண்ணிக் கொண்டு அவர் முகத்தை பார்த்தேன் . அவருடைய கண்கள் ஒளிவிட்டன. ஆகவே சற்றும் தாமதிக்காமல் அவர் பாபாவே என உணர்ந்து கொண்டு இரண்டு நாணயங்களை அவரிடம்  தந்தேன்  . அதைப் பெற்றுக் கொண்டவர் என் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தப் பின் மறைந்து  விட்டார். கனவு கலைந்தது. ஆனால் என் மனதுக்கு புரிந்தது பாபாவேதான் என் கனவில் வந்து எனக்கு ஆசி கூறி உள்ளார். அவர் எப்போதுமே என்னுடனேயே இருக்கின்றார் என்பதை உணர்ந்தபோது மனதில் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி பாபா, உன்னுடைய அன்புக்கு என் மனமார்ந்த நன்றி.
ஜெய் ஸ்ரீ ராம்
அவினாஷ்

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.