Wednesday, December 1, 2010

He was your father in past life.


அன்பானவர்களே
பாபா துவாரகாமாயியில் அறுபது வருடங்களுக்கு மேல் இருந்தார். அப்போது அவர் நிகழ்த்திய லீலைகள் மிக அதிகம். வந்த பலருக்கும் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டன. அதில் ஒருவரான ராஜாராம் காப்டி என்பவருக்கு நேர்ந்த சம்பவம் இது. அவர் 1914 ஆம் ஆண்டு சீரடியில் பிறந்தவர்.
மானிஷா

சீரடியில் இருந்த மராட்டிய பள்ளி ஒன்றில் அவருடைய தந்தை தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் ஜெயதேவ் வாமன் சிதன்பார் என்பது. ராஜாராம் தினமும் துவாரகாமாயிக்கு போய் விளையாடுவார். பாபாவும் அவருடன் விளையாடுவது உண்டு.

அவரை பாபா கன்பத் என அழைப்பார். ஒரு நாள் அவருடைய தாயார் ராஜாராமின் வலது மூக்குக்குப் பக்கத்தில் வீக்கம் இருந்ததைக் கண்டார். அவர் கவலை அடைந்தார். அப்போது சீரடிக்கு ஒரு டாக்டர் வந்து இருந்தார். அவருக்கு ராஜாராமை மிகவும் பிடிக்கும் என்பதினால் தினமும் அவருடன் நடக்கும் பயிற்சி எடுப்பார்.

அவரிடம் ராஜாராம் குறித்து அவருடைய தாயார் கவலையுடன் கேட்டபோது, அவர் அது மூக்கில் உள்ள ஒரு எலும்பு வளர்ந்து விட்டதினால் வந்திருக்கும் எனவும், அதே மாதிரியான வீக்கமே, அதே இடத்தில் ராஜாராமின் தந்தைக்கும் வந்திருந்தது எனவும் அதை சுலபமாக மும்பையில் ஆபரேஷன் செய்து சரி செய்து விடலாம் என்றார்.

அதன் பின் ஒருநாள் பாபாவுடன் விளையாடச் சென்ற ராஜாராம் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. துவாரகாமாயிக்கு அவரைத் தேடிக்கொண்டு சென்றவள் அங்கு ராஜாராம் பாபாவுடன் அமர்ந்து இருந்ததைக் கண்டாள். அவரை வெளியே அழைத்து கன்னத்தில் அறைந்தாள். அதைக் கண்ட பாபா அவளிடம் கூறினார் ' என் நண்பனே, ராஜாராம் பூர்வ ஜென்மத்தில் உன்னுடைய தந்தையாக இருந்தவர். அவரை மீண்டும் அடிக்காதே' என்றார். அப்போதுதான் அவள் தன்னுடைய மகனை நன்கு நோக்கினாள். அவர் அவளுடைய தந்தையின் சாயலிலேயே இருந்தார். அதற்குப் பின் அவள் அவரை அடித்ததே இல்லை.
ராஜாராம்
அடுத்த வியாழர் கிழமை அவள் பாபாவின் படத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஆரத்தி செய்தாள். பாபாவின் உடியை ராஜாராமின் நெற்றியில் தடவி 'அப்பா' என்றாள். அடுத்த சில மணி நேரத்தில் அவர் மூக்கில் இருந்த வீக்கம் குறையத் துவங்கியது!

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.