Sai experience - Sai devotee Dhanalakshami
அன்பானவர்களே,
தனலஷ்மி என்பவர் ஒரு பன்நாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் . அவருக்கு சாயி பாபா அருளிய கதையை படித்து மகிழுங்கள்
மனிஷா----------------------
தனலஷ்மி கூறுகின்றார்:-
'' நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்தது வருபவள். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு செய்தது தரப்படும் வேலைக்கு தலைமை கண்காணிப்பாளர். ஏழு வருடங்களாக எங்களுடைய வாடிக்கையாளராக உள்ள அவர்கள் மாதந்திர மீடிங்கில் கலந்து கொண்டு எங்களுடைய வேலைகளை உடனே ஏற்றுக் கொள்ளாமல் இது சரி இல்லை, அது சரி இல்லை என குறை கூறிக்கொண்டே இருபவர்கள். அவர்களுடன் மீட்டிங் என்றாலே எங்களுக்கு தலைவலி.
நான் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாயியின் விரதத்தைத் துவக்கி ஜூன் மாதம் முடித்தேன். என்ன அதிசயம். அந்த மாதம் முதல் அந்த வாடிக்கையாளர் எங்கள் வேலைகளில் எந்த குறையுமே சொல்லாமால் நாங்கள் செய்து தந்ததை எடுத்துக் கொண்டு செல்லத் துவங்கினார்.

மறுநாள் அந்த வாடிக்கையாளருடைய மாதந்திர மீட்டிங் இருந்தது. அவர்கள் என்னெல்லாம் சொல்லப் போகின்றார்களோ என பயந்து கொண்டு பாபாவுடன் மனதில் அந்த வாடிக்கையாளர்களுடைய கேள்விகளுக்கு என்ன என்ன முறையில் பதில் தரலாம் என விவாதித்துக் கொண்டு காரில் சென்று கொண்டு இருந்தேன். பாபா நான் கூறுபவற்றை கேட்டுக் கொண்டு எனக்கு நல்ல முடிவு தருவார் என்ற நம்பிக்கையில் நான் அப்படி எனக்குள்ளேயே பாபாவுடன் பேசுவது உண்டு. அடுத்த சில நிமிடங்களில் அந்த மீட்டிங் மறுநாள் நடக்கவில்லை என்ற தொலைபேசிச் செய்தி வந்தது. நான் நிம்மதி அடைந்தேன். அதுவரை அப்படி எந்த மீடிங்குமே நின்றது இல்லை என்னும் போது அது பாபாவின் கருணைதானே?
என்னுடைய வீட்டிலும் அலுவலகத்திலும் பாபாவின் படத்தை நான் வைத்துக் கொண்டு உள்ளேன் . தினமும் அதை பார்க்கும்போது அதில் அவர் சிரிப்பது போல காட்சி தரும். நான் சில நாட்களாக காலையில் சீக்கிரம் எழுந்து விடுவதை விட்டு விட்டு எதுவும் சரிவரச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருந்தேன். ஒரு நாள் அந்த படத்தில் இருந்த பாபா கோபமாக இருந்த காட்சியே தெரிந்தது. காரணம் புரியவில்லை. அன்று எதேற்சையாக ஷிரிஷ் என்பவர் எழுதி இருந்த அனுபவத்தை படித்தேன். பாபா கூறியது அதில் இருந்தது 'சோம்பேறித்தனமே நம்முடைய பெரும் எதிரி' . பாபாவின் கோபத்திற்கான காரணம்புரிந்தது. என்னுடைய சோம்பேறித்தனமான வழக்கை பாபாவுக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு என்னை திருத்திக் கொண்டேன்.''

(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment