Sai came mysteriously -Experience by Sai devotee Mithun Boda
அன்பானவர்களே
பாபா எங்கும் நிறைந்தவர் என்பது நமக்குத் தெரியும். அவர் இதயபூர்வமாக வேண்டுபவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுபவர் . இதோ மிதுனின் அனுபவத்தை படியுங்கள்.
மனிஷா
------------------------
நான் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு வந்தேன். நான் தினமும் மாலையில் சாயி பாபா ஆரத்தி செய்வது உண்டு. ஒருநாள் நான் பூஜை செய்து கொண்டு இருந்தபோது நினைத்தேன், 'எனக்கு பாபாவின் சமாதியில் உள்ள உருவத்தில் பார்க்க வேண்டும். அவருடைய பாதங்களை கண்டு களிக்க வேண்டும்.' திடீரென அந்த ஆசை ஏன் வந்தது என்றால் என்னிடம் இருந்த பாபாவின் படத்தில் அவருடைய உருவம் இடுப்பு அளவில் இருந்தது. 'சமாதி ஆலயத்தில் அவர் எப்படி இருப்பார்?' என் மனம் எண்ணியது . நான் சீரடிக்குச் சென்று பார்த்தது இல்லை. அதன் பின் அதைப் பற்றி மறந்து விட்டேன்.
சில நாட்கள் கழிந்தன. நான் முன்னர் என் நண்பன் ஒருவனுடன் தங்கி இருந்த என்னுடைய பழைய அறைக்குச் சென்றேன். அது தூசி பிடித்து கரப்பு ஓடிக்கொண்டு இருந்தது. அங்கு ஒருவரும் இல்லை. என்னுடைய சாமான்களை எடுத்துக் கொண்டு ஆவலினால் என்னுடைய நண்பனின் அறைக்கும் சென்று பார்த்தேன். அங்கு சமாதி ஆலயத்தில் பாபா இருந்தது போன்ற ஒரு அழகான படம் அறையில் இருந்தது. தூசி படிந்தது குப்பைகளுடன் இருந்த அதை நான் எடுத்துக் கேஆண்டு சென்று விடலாம் என தோன்றியது.
நான் பாபாவிடம் மனதில் கூறினேன், 'இங்கு உன்னை எவரும் கவனித்துக் கொள்ளவில்லை. ஆகவே என்னுடைய அறைக்கு நீ வந்தால் நான் உன்னை பூஜை செய்து வைத்துக் கொள்வேன்.' ஆனால் என்னுடைய நண்பனும் சாயி பக்தன் என்பதினால் அவனை கேட்டுக் கொண்டே அதை எடுத்துக் கொள்ளாலாம் என நினைத்து பாபாவிடம் பாரத்தைப் போட்டு விட்டு அவனிடம் அதை நான் எடுத்துக் கொள்ளவாஎன்று கேட்டேன்.
அதைக் கேட்ட அவனும் ஆச்சர்யப்பட்டான். நான் அதைப் பார்த்துவிட்டு சொல்கின்றேன் என்றான். அடுத்த வார வியாழர் கிழமை அவன் வந்து அந்த படத்தை தான் வைத்து இருக்கவில்லை என்றும் அது எப்படி தன்னுடைய அறைக்கு வந்தது என்பது தெரியவில்லை என்றும் கூறி அதை எனக்குத் தந்து விட்டான். அப்படி என்றால் அது எங்கிருந்து வந்தது? இப்படியாக என்னுடைய ஆசையை நிறைவேற்றிய பாபாவின் மகிமையை எப்படிச் சொல்வது?
இங்கு உள்ள படம் எனக்குக் கிடைத்த அந்தப் படம்தான்.
இங்கு உள்ள படம் எனக்குக் கிடைத்த அந்தப் படம்தான்.
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment