Sai saved my Uncle-Experience of a Sai devotee.
அன்பானவர்களே
நமது வாழ்வில் நிறைய விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதில் ஒன்றே இந்த சம்பவம். அதை அனுப்பியவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றதினால் அதை வெளியிடவில்லை. அவர் கதையை கேளுங்கள்.
மனிஷா------------------
என்னுடைய நண்பரின் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்கள். அவர்களுடைய மாமாதான் அவர்களுக்கு சாயி பக்தியை தந்தவர். அவர் தனது வாழ்கையில் சாயியின் பல லீலைகளை கண்டு இருந்தவர்.
சுமார் ஒன்றரை வருடம் முன் அவர் ஒரு சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார். அதற்கு அவருடைய தவறும் ஒரு காரணம். அதனால் கோபமுற்ற அவருடைய எதிரிகள் அவருடைய ஒரு சொத்தையும் கூட நாசப்படுத்தினர் . அனைவரும் மாமாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே என பயந்தனர். அதன் பின் அனைத்தும் அடங்கி விட்டன. அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அடுத்த சில மாதத்தில் அவரை மிரட்டியவர்களில் ஒருவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான் . அதை விசாரணை செய்த போலிசுக்கு ஒன்றரை வருடம் முன் நிகழ்ந்த ஊழல் பற்றி தெரிய வந்தது. ஆகவே அவர்கள் என் மாமாதான் அதை செய்து இருக்க வேண்டும் என நினைத்து அவரை கைது செய்து லாக்கப்பில் வைத்தனர். அதை கேட்ட நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்குத் தெரியும் மாமாவின் குடும்பம் அப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் அல்ல என்பது. எங்களுக்கு ஒன்றும் செய்யத் தெரியவில்லை . மாமாவை எப்படி காப்பாற்றுவது?
மாமா ஒரு வாரம் போலீஸ் லாகப்பில் இருந்தார். நங்கள் அவரைப் பார்க்கச் சென்ற போதும் அவர் கலங்கவில்லை. நான் நிரபராதி என்பதை பாபா நிரூபிப்பார் என்று கூறினார். அவர் தனது நம்பிக்கையை விடவில்லை. ஏன் எனில் அவர் அந்த கொலையுடன் சம்மந்தப்படவில்லை.
அடுத்த சில நாட்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தனர். ஆனால் அவன் அவர்களிடம் இருந்து தப்பிவிட்டான். ஆகவே போலீஸ் எங்களுடைய மாமா நிரபராதி என்பதை உணர்ந்த பின் நான்கு நாட்களில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முடித்து விட்டு அவரை விடுதலை செய்தது. உண்மையான குற்றவாளியை தேடத் துவங்கினர். நாங்களும் அவன் பாபாவின் அருளினால் விரைவில் கிடைத்து விடுவான் என நம்பிக்கொண்டு காத்திருக்கின்றோம். மாமாவுக்கு பாபாவின் மீது இருந்த நம்பிக்கையே அவரைக்காப்பற்றி உள்ளது.
(Translated into Tamil by Santhipriya)

Loading
0 comments:
Post a Comment