Thursday, December 16, 2010

How Baba made me to donate Bone Marrow to a person in need-Experience By Ram Kumar.


 
அன்பானவர்களே
இன்று சாயியின் ஒரு பக்தர் ராம்குமார்ஜி என்பவர் எழுதி அனுப்பி உள்ள இதயத்தை தொடும் அனுபவத்தை சாயி பக்தர்கள் படித்து சாயியின் லீலைகளை புரிந்து கொள்ள வெளியிடுகிறேன்.
மனிஷா
------------------------------------
அன்புள்ள மனிஷாஜி
நான் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை  உங்களுக்கு அனுப்பி உள்ளேன். சாயிபாபா என்னை எப்படி ஒருவருக்கு எலும்பு சதை தானம் செய்ய வைத்தார் என்பதை விளக்கும் இதைப் படித்து மகிழுங்கள்.
ராம்குமார்

2003 அல்லது  2004 ஆம் ஆண்டு இருக்கும். உள்ளூர் ஆலயத்தில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற  தேசிய மாரோ (எலும்பு சதை தானம்) தான மையத்தில் என்னையும் பதிவு செய்து கொண்டேன்.  அதை பதிவு செய்து ஆறு ஆண்டுகள் கழிந்து இருந்தன. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதியன்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இரத்த கான்சர் வந்துள்ள எழுபது வயதான ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்பு சதை பொறுத்த வேண்டும் என்பதினால் அதில் பதிவு செய்து கொண்டு இருந்த என்னை தானம் தர முடியுமா எனக் கேட்பதற்காக   அழைத்து இருந்தனர்.
நான் அந்த வேண்டுகோளை  பற்றி யோசிக்கத் துவங்கினேன். ஐந்து வருடம் முன்னால் அதில் என் பெயரைக் கொடுத்து இருந்துள்ளேன். ஆனால் தற்போது என் உடல்நிலை அத்தனை சரியாக இல்லை. என்ன செய்வது.  தற்போது என்னால் அதை தர இயலாது என மறுத்து விடலாமா என யோசனையில் ஆழ்ந்தேன். அப்போதுதான் சாயியின் லீலை நடந்தது. என் வீட்டில் சாயிபாபாவின் பொன்மொழிகள் அடங்கிய தினசரி நாள்காட்டி இருந்தது.  தினமும் அதில் காணப்படும் வாசகங்களை படித்து நான் செய்யும் சில காரியங்களுக்கு பாபாவின் கருத்தை அறிந்து கொள்வேன் . சில நேரங்களில் நான் செய்து இருந்த தவறுக்கு அவரிடம் இருந்து கடுமையான எச்சரிக்கை கூட வருவது உண்டு. அன்றைய தினம் அதில் உள்ள வாசகம் எனக்கு பதில் போல அமைந்து இருக்கும்.
அன்று இரவு நான் மறு நாளைக்கான தேதிக்கான வாசகத்தைப் பார்க்க நாள்காட்டியை கிழித்தேன். அதில் இருந்த பாபாவின் பொன்மொழி இது " நான் கொடுத்த வாக்குறுதியைக் காக்க என் உயிரையும் தரத் தயாராக இருப்பேன்''. அதைப்  படித்த எனக்கு பாபா என் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது போல இருந்தது. சற்றும் தாமதிக்காமம் மறுநாள் அந்த மருத்துவ மனைக்குச் சென்று முதல் கட்ட டெஸ்டுகளை செய்து கொண்டு வந்தேன். மருத்துவமனையில் அதை ஆராய்ந்த அவர்கள் என்னுடைய எலும்பு சதை மட்டுமே மிகப் பொருத்தமாக இருப்பதாகக் கூறி இனி அந்த நோயாளிக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தர முடியுமா எனக் கேட்டார்கள்.
அதற்கு தேவையான அறுவை சிகிட்சை என் மீது நடத்த இரண்டு முறைகள் இருந்தன. அதுபற்றி மேலும் மேலும் அதிகம் படிக்கப் படிக்க  எனக்கு பயம் வந்துவிட்டது. ஏன் எனில் அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அது வேறு சில உபாதைகளை எனக்கு கொண்டு வரலாம் எனத் தெரிந்தது. அந்த விஷயத்தைக் கேட்ட என் மனைவியும் நடுங்கினாள். மறுத்து விடலாமா என்று கூட யோசனை மீண்டும் வந்தது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகின்றவரோ வயதான கிழவர். இளைஞ்சன் என்றாலும் பரவாய் இல்லை. அவன் வாழ வேண்டும். அப்படி எல்லாம் எண்ணி குழம்பிய நான் என்னையே திட்டிக் கொண்டேன். நான் யார  யார் , எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என முடிவு செய்ய என என்னை நானே கடிந்து கொண்டேன்.
நான் பாபாவின் ஆட்சியில்  இருக்கையில் இப்படிப்பட்ட நினைவுகள் ஏன் வர வேண்டும் எனவும் யோசித்தேன் . ஆனால் அதற்க்கு ஒப்புக் கொள்வதா, வேண்டாமா என யோசித்தபடி மிகவும் குழப்பத்தில் இருந்த எனக்கோ பாபா அந்த தினசரி நாள்காட்டி மூலம்  தான் பதில்களை தந்து கொண்டே இருந்தார். செப்டம்பர் பத்தொன்பதாம் (19 ) தேதியில் இருந்து தினமும் நான் கிழித்த நாளேட்டில் இருந்த வாசகங்கள் இவை- " இன்று தானம் செய்பவர் நாளை வர உள்ள நல்ல காலத்துக்கான விதையை மட்டுமே இன்று விதைகின்றார்" இருபதாம் தேதியின் (20) வாசகம் இவை -" உனக்கு கிடைக்க உள்ள எதையுமே ஏற்றுக் கொள்ளும் முன் நீ  தானம் செய்". இருபத்தி ஒன்றாம் தேதியின் (21) வாசகம் இவை:- "மஸ்ஜித்மாயி கடன் கேட்கின்றார். தானம் செய்பவர் தானம் தந்துவிட்டு தன் தொல்லையை துறக்கின்றார்"  இருபத்தி ஏழாம் தேதியன்று (27) சாயி பாவனா என்ற புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தேன். அதில் நான் திறந்த பக்கத்தில் எழுதி இருந்தது " மனிதனை ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளவே கடவுள் படைகின்றார். தனக்கு அதிக பதிப்பு இல்லாத வகையில் முடிந்தவரை ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் என்பதே பெரியோர்களின் வாக்கு. " தினமும் சாயி சரித்திரத்தை படித்து வந்தவன் இன்று ஏன் சாயி பாவனாவை படித்தேன் , இந்த போதனையை  படிக்க வேண்டும் என்பதற்காகவா இன்று அந்த புத்தகத்தைப் படித்தேன் என்பது சாயிபாபாவுக்கே வெளிச்சம்.
ஆனாலும் என் மனதில் குழப்பமே அதிகமாக இருந்ததினால் அந்த நோயாளியின் பாதுகாவலரை அழைத்து என் மன நிலைமையையும் எனக்கு ஏற்படக் கூடிய அபாயம் மற்றும் உபாதைகளைக் கூறி வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு என்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டேன். அதைக் கூறிவிட்டு வந்தப் பின் என் மனம் அமைதி இன்றி தவித்தது. என்னிடம் பாபா உங்கள் கேள்விக்கான பதிலைத் தருகிறார் என்ற புத்தகம் இருந்தது. அதில் 1-720 எண்கள் இருக்கும். நமக்குத் தேவையான கேள்வியை கேட்டுக் கொண்டு பாபாவை நினைத்து அவரை வேண்டிக்கொண்டு அதை கண்களை மூடியபடித் தொட வேண்டும். நாம் தொடும் எண்ணுக்கு ஏற்ப வாசகத்தை அதில் பார்த்து பாபாவின் பதிலை தெரிந்து கொள்ளலாம் .  மன நிம்மதி இல்லை என்பதினால் பாபாவிடம் வேண்டிக்கொண்டு எண்ணை தொட்டு அதன் வாசகத்தைப் பார்த்தேன். அதில் காணப்பட்ட   செய்தி இது  " தேவை இல்லாமல் அனாவசிய குழப்பத்திற்கு ஆளாகாதே. பாபாவை நம்பி அவர் மீது பாரத்தைப் போடு. அனைத்தும் நன்மையாகவே முடியும்" . அதைப் படித்த உடனேயே மனதில் தெளிவு பெற்று உடனேயே மீண்டும் அந்த நோயாளியின் துணைவரை தொடர்ப்பு கொண்டு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும், நான் அதற்கு தயார் எனவும் தெரிவித்தேன்.
அந்த சிகிச்சைக்கான நாளுக்கு முதல் நாள் நான் பாபாவின் ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த என் நண்பரிடம்  அனைத்தையும் கூற அவர் எனக்கு  அறிவுரைக் கூறிவிட்டு பாபாவின் ஒரு படத்தை தந்துவிட்டு அதை ஜாக்கிரதையாக  சிகிச்சை முடியும்வரை என்னிடமே வைத்துக் கொண்டு இருக்குமாறு எனக்குத் தந்தார். இன்றும் அவரிடம் நான் ஏன் கேட்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. அதுவும் பாபாவின் லீலைதானோ ?  எனக்கு தைரியம் தர அவர்தான் அப்படி செய்துள்ளாரோ?? மருத்துவ மனைக்குச் சென்றேன். அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்தது. சிறிது வலியைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு ஏற்படவில்லை. நானும்  தற்போது பூரண குணம் அடைந்து விட்டேன் .
ஒரு நாள் வியாழன் கிழமை எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்னால் சிகிச்சை பெற்று பயன் அடைந்தவர் எனக்கு நிறைய நன்றி கூறிவிட்டு சந்தர்ப்பம் வரும்போது என்னை சந்திக்க விரும்புவதாக எழுதி இருந்தார். சாதாரணமாக அப்படிப்பட்ட அறுவை சிகிட்சை பெற்றுக் கொண்டவரை தானம் தந்தவருடன் ஒரு வருடம் பேச அனுமதிப்பது இல்லை.  கடிதம் மூலமே கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும். அவர் நல்லபடியாக பூரண குணம் அடையட்டும் என பாபாவை மனதில் வேண்டிக் கொண்டு பாபாவின் பக்தனாக பத்து ஆண்டுகளாக இருப்பதை எண்ணி நானே  பெருமை  கொண்டேன்.
சாயி ராம்
ராம் குமார்
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.